\
ind won vs nz first t20 match
ind teambcci/icc

2023 உலகக்கோப்பை தோற்ற அதே பிட்ச்சா..? முக்கிய ரோல் செய்யும் ஆடுகளம்! இந்தமுறை என்ன பிட்ச்..?

2023 உலகக்கோப்பையை தோற்ற ஆடுகளத்தை இந்தமுறை கியூரேட்டர்கள் மாற்றிகொடுப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Published on
Summary

2026 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது. இந்தியா கருப்பு மண் ஆடுகளத்தில் தோல்வியடைந்ததால், இந்தமுறை வேறு மண் ஆடுகளம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

2026 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. நடப்பு உலகக்கோப்பையில் ஒரேயொரு போட்டியை மட்டுமே இந்த மைதானம் நடத்தியுள்ளது. அதில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 70 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வியை சந்தித்தது.

india - new zealand
india - new zealandweb
ind won vs nz first t20 match
நியூசிலாந்து வென்ற 2 கோப்பையும் இந்தியாவிற்கு எதிராக.. சவாலை முறியடிக்குமா சூர்யா படை!

மேலும் அந்தபோட்டியில் கருப்பு மண் ஆடுகளம் பயன்படுத்தப்பட்டதால், இந்தியா தோல்வியை தழுவியது. 2023 ஒருநாள் உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டியிலும் இந்தியா கருப்பு மண் ஆடுகளத்தில் தான் தோற்றது. இதனால் இந்தமுறை வேறு ஆடுகளம் வழங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மும்பையில் நடைபெற்ற அரையிறுதிப்போட்டியில் இந்திய அணி சிகப்பு மண் ஆடுகளத்தில் விளையாடியது. அது இந்தியாவிற்கு நல்ல பேட்டிங்கை வெளிப்படுத்தும் வாய்ப்பாக அமையும். அகமதாபாத் மைதானத்தில் கருப்பு மண், சிகப்பு மண் மற்றும் கலப்பு (கருப்பு+சிகப்பு) மண் என 3 ஆடுகளங்கள் இருக்கிறது. இதில் எதை கியூரேட்டர்கள் தருகிறார்களோ அதைபொறுத்தே வெற்றிவாய்ப்பு இருக்கும் என தெரிகிறது. 

ind won vs nz first t20 match
’இந்தியாவிற்கு தோல்வி பயம்..’ ஃபைனலுக்கு முன் செய்த மூடநம்பிக்கைகள்..? எழுந்த விமர்சனம்!

இந்தமுறை என்ன ஆடுகளம்..?

இரண்டு வாரங்களுக்கு முன்பு தென்னாப்பிரிக்காவிடம் கருப்பு மண் மைதானத்தில் தோல்வியடைந்ததால், இந்திய அணி நிர்வாகம் இறுதிப் போட்டிக்கு சிவப்பு மண் மைதானத்தைத் தேர்வுசெய்யும் என எதிர்பார்க்கப்பட்டது.

இறுதிப்போட்டி நடைபெறவிருக்கும் ஆடுகளம்
இறுதிப்போட்டி நடைபெறவிருக்கும் ஆடுகளம்

ஆனால் தற்போது வெளியாகியிருக்கும் தகவலின் படி கருப்பு மற்றும் சிகப்பு மண் கலந்த கலப்பு மண் ஆடுகளமே வழங்கப்படவிருப்பதாக தெரிகிறது. அதிலும் கருப்பு மண்ணை விட, சிகப்பு மண் அதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதனால் இரண்டு அணியின் பவுலருக்கும் பிட்ச்சில் பவுன்ஸ் கிடைக்கும் என்றும், நல்ல ரன்களை குவிக்கும் ஆடுகளமாக இருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தமைதானத்தில் வெற்றி ஸ்கோர் 200ஆக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ind won vs nz first t20 match
FINAL| இந்த நியூசிலாந்து வீரரால் ஆபத்து.. 14வது நிமிடத்தில் அனைத்தும் மாறும்.. கணித்த ஜோதிடர்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com