விராட் கோலி
விராட் கோலிweb

கிரிக்கெட் வாழ்க்கையில் மிகப்பெரிய அடி.. கோலிக்கு என்னாச்சு..?? சொதப்புவதற்கு என்ன காரணம்..??

விராட் கோலியின் 17 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில் ஒருநாள் போட்டிகளில் இரண்டுமுறை தொடர்ந்து 0 ரன்னில் வெளியேறியது இதுவே முதல்முறை..
Published on
Summary

விராட் கோலி, 2025 சாம்பியன்ஸ் டிராபி வெற்றிக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் நடந்த 2 ஒருநாள் போட்டிகளில் ரன்கள் ஏதும் எடுக்காமல் வெளியேறி அதிர்ச்சி அளித்தார். இதனால், 2027 உலகக்கோப்பையில் அவர் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. கோலியின் செயல்பாடுகள் அவரது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளன. அவர் தனது ஃபார்மை மீட்டெடுக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆராயப்படுகிறது.

2025 சாம்பியன்ஸ் டிராபி வென்றதற்குபிறகு கிட்டத்தட்ட 7 மாதங்களுக்குபின் களத்திற்கு திரும்பிய விராட் கோலி, ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2 ஒருநாள் போட்டிகளில் அடுத்தடுத்து 0 ரன்னில் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார்.

ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக சதங்கள் அடித்து உலகசாதனை படைத்த வீரர், முதல்முறையாக 2 ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக 0 ரன்னில் அவுட்டானது கிரிக்கெட் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

விராட் கோலி டக் அவுட்
விராட் கோலி டக் அவுட்cricinfo

இதற்கிடையில் 2027 உலகக்கோப்பையில் விராட் கோலி விளையாடுவாரா இல்லையா என்ற கேள்வி சுழன்றுகொண்டிருக்கும் நிலையில், கோலியின் செயல்பாடுகள் அவருடைய ரசிகர்களை கவலையில் தள்ளியுள்ளது.

இந்தநிலையில் கோலி எங்கே சொதப்புகிறார்? தன்னுடைய ஃபார்மை மீட்டு எடுத்துவர என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து இங்கே பார்க்கலாம்..

விராட் கோலி
’3 சதம் அடித்தாலும் ரோகித் - கோலிக்கு இடமிருக்குமா..?’ - உலகக்கோப்பை தேர்வு குறித்து அகர்கர் ஓபன்!

கோலி எங்கே சொதப்புகிறார்..??

ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தின் ஆல்டைம் சிறந்த பேட்ஸ்மேன் சச்சினா? அல்லது விராட் கோலியா? என்ற கேள்வி பல முன்னாள் வீரர்களிடம் வைக்கப்பட்டது. அப்போதெல்லாம் ஒருநாள் வடிவத்தின் சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலி, டெஸ்ட் வடிவத்தில் சிறந்த பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் என்ற பதிலே எல்லோரிடமும் இருந்து வந்தது..

அந்தளவு ODI கிரிக்கெட்டின் ஜாம்பவானாக இருக்கும் விராட் கோலி, தற்போது வெளிப்புற அழுத்தங்களால் ஆட்டத்தில் சொதப்பிவருகிறார். 2027 ஒருநாள் உலகக்கோப்பையில் கோலி விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்த நிலையில், எப்போதும் விட்டுக்கொடுக்காதீர்கள் என விராட் கோலி போட்ட பதிவு ரசிகர்களுக்கு புத்துணர்ச்சியாக இருந்தது.

ஆனால் ஆஸ்திரேலியாவில் நடந்த 2 ஒருநாள் போட்டிகளிலும் அவருடைய எப்போதுமான ஆட்டத்தை விடுத்து மோசமான முறையில் கோலி வெளியேறினார். விராட் கோலியின் கம்பேக்கை காணவந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பொதுவாக விராட் கோலி சிக்ஸ் ஹிட்டிங் பேட்ஸ்மேனோ அல்லது அதிரடி வீரரோ கிடையாது. அகிலம் அறிந்த சிறந்த டைமிங் பேட்ஸ்மேனாக இருக்கும் கோலி, முதல் ஒருநாள் போட்டியில் 7 டாட் பந்துகளுக்கு பிறகு 8வது பந்தில் வேகமாக அடிக்கமுயன்று அவுட்டாகினார். அதேபோல இரண்டாவது போட்டியிலும் அவுட்சைட் பந்துகளுக்கு ஜாக்கிரதையாக இருந்தகோலி, எளிதாக பவுண்டரி அடிக்கக்கூடிய பந்தில் LBW மூலம் அவுட்டாகி வெளியேறினார்..

விராட் கோலி
கவலை தரும் இந்தியாவின் பந்துவீச்சு.. உலகக்கோப்பைக்குள் சரிசெய்ய வேண்டிய 3 விசயங்கள்!

மீண்டுவர என்ன செய்யவேண்டும்..

விராட் கோலி அவருடைய சிறந்த டைமிங்கை எடுத்துவந்துவிட்டாலே ரன்களை கொண்டு வந்துவிடுவார். அதற்கு அவர் களத்தில் நிலைத்து நின்று ஆடவேண்டும். முதல் போட்டியில் சொதப்பிய ரோகித் சர்மா, இரண்டாவது போட்டியில் ரன்களை அடிக்க கடினப்பட்டாலும் களத்தில் நிலைத்து நின்று விளையாடினார். பின்னர் அவருடைய ரிதமிற்கு திரும்பிய ரோகித் சர்மா அதிரடியாக பேட்டிங்கை வெளிப்படுத்தி 74 ரன்கள் குவித்தார்..

விராட் கோலி
விராட் கோலிweb

விராட் கோலியை பொறுத்தவரையில் களத்தில் 20 முதல் 30 பந்துகளை விளையாடிவிட்டாலே அவருடைய சிறந்த டச்சிற்கு திரும்பிவிடுவார். ஒருநாள் போட்டிகளில் எப்போதும் விக்கெட்டுகளுக்கு இடையே 1 அல்லது 2 ரன்களை ஓடிஎடுப்பது தான் விராட் கோலியின் பலமாக இருந்துள்ளது. அவர் அடிக்க முயலமால் நிலைத்து நின்று 1 அல்லது 2 ரன்களென ஆடிவிட்டு பின்னர் அவருடைய பேட்டிங்கை வெளிக்கொண்டுவர முயன்றாலே இன்றைய போட்டியில் அரைசதத்தை பார்த்துவிடலாம்..

விராட் கோலி
விராட் கோலி

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 51 சதங்கள், 74 அரைசதங்கள் மற்றும் 57 சராசரியுடன் 14181 ரன்களை குவித்திருக்கும் கிங் கோலி தன்னுடைய 52வது ODI சதத்தை எடுத்துவருவார் என்ற எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்..

விராட் கோலி
"ஆட்டநாயகன் விருதை வெல்வார் என நினைத்தேன்.." - ஹர்சித் ராணாவுக்கு ஆதரவாக சீக்கா சொன்ன வார்த்தை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com