ஹர்சித் ராணாவை புகழ்ந்த கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்
ஹர்சித் ராணாவை புகழ்ந்த கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்web

"ஆட்டநாயகன் விருதை வெல்வார் என நினைத்தேன்.." - ஹர்சித் ராணாவுக்கு ஆதரவாக சீக்கா சொன்ன வார்த்தை!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆட்டநாயகன் விருதை வெல்வார் என நினைத்ததாக ஹர்சித் ராணாவை கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் புகழ்ந்துள்ளார்..
Published on
Summary

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆட்டநாயகன் விருதை வெல்வார் என நினைத்ததாக ஹர்சித் ராணாவை கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் புகழ்ந்துள்ளார்..

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இந்திய ஒருநாள் அணியில் ஹர்சித் ராணா இடம்பெற்றபோது, அதை முன்னாள் தேர்வுக்குழு தலைவரான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கடுமையாக விமர்சித்திருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக 'என்னை மட்டும் விமர்சியுங்கள், 23 வயது வீரரை விமர்சித்து அவருடைய நம்பிக்கையை உடைத்துவிடாதீர்கள்' என கம்பீர் பேசியுள்ளார். தொடர்ந்து அஸ்வினும் சீக்காவின் கருத்தை விமர்சித்திருந்தார்.

ஹர்சித் ரானா
ஹர்சித் ரானா

இந்தசூழலில் தொடருக்கு முன்னதாக ஹர்சித் ராணாவை விமர்சித்திருந்த சீக்கா, இரண்டாவது ஒருநாள் போட்டியில் அவருடைய செயல்பாட்டை பாராட்டி பேசியுள்ளார்..

ஹர்சித் ராணாவை புகழ்ந்த கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்
'அஸ்வின் ஏன் இந்த கொலவெறி.. RCB பவுலர்களை நீங்க பேசுனீங்களே..?' - சீக்கா தரப்பில் பதிலடி

ஹர்சித் ராணாவை புகழ்ந்த சீக்கா..

நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் கடைசியாக வந்து பேட்டிங்கில் 18 பந்தில் 24 ரன்கள் அடித்த ஹர்சித் ராணா, பவுலிங்கிலும் டிராவிஸ் ஹெட் மற்றும் மேத்யூ ஷார்ட் இருவரின் விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினார்.

அவர் மீது விமர்சனங்கள் வைக்கப்படும் நிலையில், அதற்காக அவர் கடினப்பட்டிருக்கிறார் என்பது நேற்றைய போட்டியில் வெளிப்பட்டது. அதேநேரத்தில் அவருடைய அனுபவமின்மையில் போட்டியின் இறுதியில் ரன்களையும் விட்டுக்கொடுத்தார். இருப்பினும் ஹர்சித் ராணாவின் செயல்பாட்டை முன்னாள் இந்திய கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பாராட்டினார்..

கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தை சாடிய கவுதம் கம்பீர்
கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தை சாடிய கவுதம் கம்பீர்web

தன்னுடைய யூடியூப் சேனலில் பேசியிருக்கும் சீக்கா, இந்திய அணி 235 ரன்னுக்குள் பொட்டலம் ஆகிவிடும் என நினைத்தேன், ஆனால் கடைசியாக வந்த ராணா அபாரமாக பேட்டிங் செய்தார். அவரும் அர்ஸ்தீப் சிங்கும் சேர்ந்து 265 ரன்களை எடுத்துவந்த போது இந்தியா வெற்றிபெற்றுவிடும் என நினைத்தேன். பந்துவீச்சிலும் டிராவிஸ் ஹெட்டுக்கு எதிராக சிறப்பாக வீசினார். டிராவிஸ் உடம்பில் இடுப்புபகுதியை நோக்கி வீசினால் தடுமாறுகிறார், அதை சரியாக புரிந்து அற்புதமாக பந்துவீசினார் ராணா. பேட்டிங்கில் நல்ல ஆட்டம், பந்துவீச்சில் 2 இந்த பையன் இன்னைக்கு ஆட்டநாயகன் விருதை வெல்லப்போகிறார் என்று நினைத்தேன், சிறப்பாக விளையாடினார்" என்று பாராட்டி பேசினார்.

ஹர்சித் ராணாவை புகழ்ந்த கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்
”என்கிட்ட மோதுங்க, 23 வயது வீரரை விமர்சிக்காதீங்க” - சீக்காவை சாடிய கம்பீர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com