விராட் கோலி படைத்த 2 சாதனைகள்
விராட் கோலிweb

MI-க்கு எதிராக ஒரே வீரர்.. விராட் கோலி படைத்த 2 பெரிய சாதனைகள்!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் அரைசதமடித்த விராட் கோலி 2 அசத்தல் சாதனைகளை பதிவுசெய்தார்.
Published on
Summary

2026 ஐபிஎல் வான்கடே மைதானத்தில் நடந்த போட்டியில் மும்பைக்கு எதிராக ஆர்சிபி தொடக்க வீரர்கள் ஃபிலிப் சால்ட், விராட் கோலி 120 ரன்கள் கூட்டணியால் அதிரடி தொடக்கம் கொடுத்தனர். 50 ரன்கள் அடித்த கோலி, மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக முதல் வீரராக பிரமாண்ட சாதனையை பதிவுசெய்தார்.

ஐபிஎல் தொடரின் 19வது சீசனானது கடந்த மார்ச் 28ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றுவருகிறது. 10 அணிகளும் தங்களுடைய திறமையை வெளிப்படுத்திவரும் நிலையில், பெஸ்ட் vs பெஸ்ட் என பல அதிரடி போட்டிகளுடன் களைகட்டி வருகிறது 2026 ஐபிஎல்.

பும்ரா - விராட் கோலி
பும்ரா - விராட் கோலி

இந்நிலையில் இன்றைய போட்டியில் நடப்பு சாம்பியனான ஆர்சிபி அணி, 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸை எதிர்கொண்டு விளையாடுகிறது.

விராட் கோலி படைத்த 2 சாதனைகள்
Stubbs விக்கெட் திட்டமிட்ட சதியா.? Helmet-ஐ தூக்கி எறிந்து காட்டம்.. நடுவரிடம் நிதிஷ் வாக்குவாதம்.!

கோலி படைத்த 2 சாதனைகள்..

மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஃபிலிப் சால்ட் மற்றும் விராட் கோலி இருவரும் 120 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு அசத்தினர்.

ஃபிலிப் சால்ட்
ஃபிலிப் சால்ட்

அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்திய ஃபிலிப் சால்ட் 6 சிக்சர்கள் 6 பவுண்டரிகள் என பறக்கவிட்டு 78 ரன்கள் விளாசினார். மறுபக்கம் 5 பவுண்டரிகள் 1 சிக்சர் என விரட்டிய விராட் கோலி 50 ரன்கள் அடித்து வெளியேறினார். தொடர்ந்து ரஜத் பட்டிதார் நாலாபுறமும் 5 சிக்சர்களை பறக்கவிட்டு 20 பந்தில் அரைசதமடித்து அசத்தினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிவரும் ஆர்சிபி அணி நல்ல டோட்டலை நோக்கி ஆடிவருகிறது.

விராட் கோலி
விராட் கோலி

இந்தப்போட்டியில் அரைசதமடித்த விராட் கோலி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 1000 ரன்களை கடந்த முதல் வீரராக மாறினார். அதேபோல சால்ட் உடன் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்ட கிங் கோலி, டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிகமுறை 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்பில் இடம்பெற்ற வீரராக மாறி சாதனை படைத்தார். 46 முறை கிறிஸ் கெய்ல், பாபர் அசாம் இருவரும் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்பில் இடம்பெற்றிருந்த நிலையில், விராட் கோலி 47 முறை இடம்பெற்று சாதனை படைத்துள்ளார்.

விராட் கோலி படைத்த 2 சாதனைகள்
இளம் வீரராக கில் படைத்த மிரட்டல் சாதனை.. லக்னோவை வீழ்த்தி GT அபார வெற்றி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com