சுப்மன் கில்
சுப்மன் கில்cricinfo

இளம் வீரராக கில் படைத்த மிரட்டல் சாதனை.. லக்னோவை வீழ்த்தி GT அபார வெற்றி!

இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்டஸை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ் அணி.
Published on
Summary

லக்னோவில் நடந்த ஐபிஎல் லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 164 ரன்கள் மட்டுமே எடுத்தது. குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சில் பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட்டுகள் எடுத்து லக்னோவை கட்டுப்படுத்தினார். பின்னர் சுப்மன் கில் 56, ஜோஸ் பட்லர் 60 ரன்கள் விளாச, டைட்டன்ஸ் 18.4 ஓவரில் இலக்கை எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

லக்னோவில் நடைபெற்ற இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில், எய்டன் மார்க்ரம் மட்டுமே அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி 5 பவுண்டரிகள் 1 சிக்சர் உதவியுடன் 30 ரன்கள் சேர்த்தார்.

பிரசித் கிருஷ்ணா
பிரசித் கிருஷ்ணா

ஆனால் அவரைத் தவிர மற்ற பேட்ஸ்மேன்களான மிட்செல் மார்ஷ் 11, பண்ட் 18, பதோனி 9, பூரன் 19, சமாத் 18 மற்றும் முகுல் சௌத்ரி 18 என அனைவரும் சொதப்ப 20 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 164 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

சுப்மன் கில்
டிரெண்டுக்கு ஏற்ற மாதிரி இல்லையா..? கடுப்பான ஸ்டீபன் ஃபிளெமிங்! விமர்சனங்களுக்கு பதில்!

165 ரன்கள் அடித்தால் வெற்றி என விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியில் கேப்டன் சுப்மன் கில் 6 பவுண்டரிகள் 1 சிச்கருடன் 40 பந்தில் 56 ரன்கள் விளாசினார். அடுத்துவந்த ஜோஸ் பட்லரும் 10 பவுண்டரிகளை விரட்டி 60 ரன்கள் அடிக்க 18.4 ஓவரில் இலக்கை எட்டிய டைட்டன்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோவை தோற்கடித்தது. சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்திய பிரசித் கிருஷ்ணா ஆட்டநாயகனாக தேர்வுசெய்யப்பட்டார்.

சுப்மன் கில்
சுப்மன் கில்

இப்போட்டியில் 56 ரன்கள் அடித்த சுப்மன் கில் ஐபிஎல்லில் 4000 ரன்களை கடந்தார். இதன்மூலம் ஐபிஎல்லில் விரைவாக 4000 ரன்களை கடந்த இளம் வீரர் (26 வயது) என்ற சாதனையையும், கேஎல் ராகுலுக்கு பிறகு அதிவேகமாக 4000 ரன்களை அடித்த வீரராகவும் மாறி சாதனை படைத்தார்.

சுப்மன் கில்
சூர்யவன்ஷியின் சிக்ஸ் அடிக்கும் திறமையை விடுங்க.. ஒரு SINGLE-ஐ பார்த்து மிரண்ட ஜாம்பவான்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com