\
Virat Kohli Breaks Sachin’s ODI Record With 15,000 Runs
சச்சின் - விராட்கோலிANI

15,000 ரன்களைக் கடந்த விராட்கோலி.. சச்சின் சாதனை முறியடிப்பு.. என்ன தெரியுமா?

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 15,000 கடந்த வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை விராட்கோலி படைத்துள்ளார்.
Published on: 

சர்வதேச கிரிக்கெட்டில் சாதனைகள் படைப்பது விராட் கோலிக்கு புதிதல்ல. அந்த வரிசையில், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான நேற்றைய போட்டியில் 59 ரன்களை கடந்தபோது, 15 ஆயிரம் ஒருநாள் ரன்களை கடந்த 2-வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். அதுமட்டுமின்றி, சச்சினின் சாதனை ஒன்றையும் முறியடித்துள்ளார் விராட் கோலி. அது என்ன என்பது குறித்துப் பார்க்கலாம்..

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி, 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 டி-20 போட்டிகளில் விளையாடுகிறது. 2 அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி கேரளம் மாநிலம் திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணி 50 ஓவர்களில் 295 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 296 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு, கேப்டன் சுப்மன் கில் மற்றும் விராட் கோலி சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர்.

விராட்கோலி
விராட்கோலிBCCI

இந்தப் போட்டியில் விராட் கோலி, 40 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். தொடர்ந்து அதிரடியை காட்டிய அவர், 74 பந்துகளில் தனது 55-வது ஒருநாள் சதத்தையும் பதிவு செய்தார். இதற்கிடையில், இந்த இன்னிங்சில் விராட் கோலி 59 ரன்களைக் கடந்தபோது, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 15 ஆயிரம் ரன்களைக் கடந்தார். இதன்மூலம், சச்சினுக்குப் பிறகு, 15 ஆயிரம் ரன்களைக் கடந்த ஒரே வீரர் என்ற சாதனையை விராட்கோலி பெற்றுள்ளார்.

Virat Kohli Breaks Sachin’s ODI Record With 15,000 Runs
’ஒருவர் மட்டுமே அடங்கிய பட்டியல்..’ 15000 ODI ரன்களை கடந்து விராட் கோலி சாதனை!

ஆனால், இங்கு மற்றொரு முக்கிய சாதனையும் உள்ளது. சச்சின் டெண்டுல்கர் 15 ஆயிரம் ஒருநாள் ரன்களை எட்ட 377 இன்னிங்ஸ்கள் எடுத்திருந்த நிலையில், விராட் கோலி வெறும் 303 இன்னிங்ஸ்களிலேயே இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். இதன்மூலம், ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 15 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை கோலி படைத்துள்ளார். அதேசயமம், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர், 18,426 ரன்கள் குவித்திருந்ததே அதிகபட்ச ரன் குவிப்பாக இருந்து வருகிறது.

இதற்கடுத்த அடுத்த இடங்களில், 14 ஆயிரத்து 234 ரன்களுடன் குமார் சங்கக்காரா, 13 ஆயிரத்து 704 ரன்களுடன் ரிக்கி பாண்டிங் ஆகியோர் இருந்து வருகின்றன.

Virat Kohli Breaks Sachin’s ODI Record With 15,000 Runs
139* ரன்கள் விளாசிய விராட் கோலி.. வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியது இந்தியா!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com