\
விராட் கோலி
விராட் கோலிbcci

’ஒருவர் மட்டுமே அடங்கிய பட்டியல்..’ 15000 ODI ரன்களை கடந்து விராட் கோலி சாதனை!

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 15 ஆயிரம் ரன்கள் என்ற மிகப்பெரிய மைல்கல்லை கடந்தார் கிங் கோலி.
Published on: 
Summary

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் முதல் ODIயில், கேப்டன் சுப்மன் கில் சதம் அடித்து அணியை முன்னிலையில் வைத்துள்ளார். அதிரடியாக விளையாடும் விராட் கோலி 61 பந்தில் 81 ரன்கள் எடுத்து, ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் 15000 ரன்களை கடந்த இரண்டாவது வீரராக சாதனை படைத்துள்ளார்.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இரண்டு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி திருவனந்தபுரத்தில் இன்று தொடங்கியது.

பரபரப்பாக தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியில் தொடக்க வீரர் ஜஸ்டின் கிரீவ்ஸ், அபாரமாக விளையாடி தன்னுடைய முதல் ODI சதத்தை பதிவுசெய்து அசத்தினார். அவரின் அற்புதமான ஆட்டத்தால் 50 ஓவரில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 295 ரன்கள் சேர்த்தது வெஸ்ட் இண்டீஸ். சிறப்பாக பந்துவீசிய குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

விராட் கோலி - சுப்மன் கில்
விராட் கோலி - சுப்மன் கில்

தொடர்ந்து விளையாடிவரும் இந்திய அணி ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 200 ரன்களுக்கு மேல் அடித்து விளையாடிவருகிறது. ரோகித் சர்மா 32 ரன்னில் அவுட்டான நிலையில், தொடர்ந்து விளையாடிய கேப்டன் சுப்மன் கில் சதமடித்து அசத்தினார். மறுமுனையில் அதிரடியாக விளையாடிவரும் விராட் கோலி 6 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 61 பந்தில் 81 ரன்கள் அடித்து சதத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறார்.

இந்தசூழலில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 15000 ரன்களை கடந்து சாதனை படைத்தார் விராட் கோலி. ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் சச்சின் டெண்டுல்கருக்கு பிறகு 15ஆயிரம் ரன்களை கடக்கும் 2வது வீரர் விராட் கோலி மட்டுமே. வேறு யாரும் இத்தகைய மைல்கல் சாதனையை படைக்கவில்லை.

விராட் கோலி
முதல் ODI சதமடித்த WI வீரர் ஜஸ்டின் கிரீவ்ஸ்.. இந்தியாவிற்கு 296 ரன்கள் இலக்கு!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com