139* ரன்கள் விளாசிய விராட் கோலி.. வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியது இந்தியா!
திருவனந்தபுரத்தில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 295 ரன்கள் குவித்தது. ஜஸ்டின் கிரீவ்ஸ் தனது முதல் ODI சதத்தால் அசத்த, குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகள் எடுத்தார். பதிலுக்கு இந்தியா சார்பில் சுப்மன் கில் 110, விராட் கோலி 10 பவுண்டரி, 9 சிக்சர்களுடன் 139* ரன்கள் அடித்து, இந்தியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிக்கு அழைத்தார்.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இரண்டு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி திருவனந்தபுரத்தில் நடைபெற்றது.
பரபரப்பாக தொடங்கிய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியில் தொடக்க வீரர் ஜஸ்டின் கிரீவ்ஸ், அபாரமாக விளையாடி தன்னுடைய முதல் ODI சதத்தை பதிவுசெய்து அசத்தினார். அவரின் அற்புதமான ஆட்டத்தால் 50 ஓவரில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 295 ரன்கள் சேர்த்தது வெஸ்ட் இண்டீஸ். சிறப்பாக பந்துவீசிய குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
தொடர்ந்து விளையாடிய இந்திய அணியில் சுப்மன் கில் மற்றும் விராட் கோலி இருவரும் சதமடித்து மிரட்டினர். கில் 110 ரன்கள் அடித்து அவுட்டாக, கடைசிவரை ஆட்டமிழக்காத விராட் கோலி 10 பவுண்டரிகள் 9 சிக்சர்களுடன் 139 ரன்கள் அடித்து அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றார். 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

