\
virat kohli
virat kohlibcci

SENA நாடுகள் அனைத்திலும் 50+ சராசரி.. முதல் வீரராக வரலாறு படைத்த விராட் கோலி!

செனா நாடுகள் என கூறப்படும் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா நான்கு நாடுகளிலும் 50+ சராசரி வைத்து சாதனை படைத்துள்ளார் விராட் கோலி.
Published on: 
Summary

SENA நாடுகளில் 50+ சராசரி வைத்திருக்கும் முதல் வீரராக விராட் கோலி வரலாற்று சாதனை படைத்தார். மேலும், சச்சின் டெண்டுல்கரின் சேஸிங் சாதனையை முறியடித்து 8741 ரன்களுடன் முன்னிலை பெற்றார்.

நியூசிலாந்து மண்ணில் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா பங்கேற்றுள்ளது. சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி, இன்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை அவர்களின் சொந்தமண்ணில் தோற்கடித்தது. இப்போட்டியில் 51 பந்தில் 13 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 74 ரன்கள் அடித்த விராட் கோலி ரசிகர்களின் மனதை வென்றார்.

இந்தசூழலில் இப்போட்டியில் 74 ரன்கள் அடித்த விராட் கோலி, ஒருநாள் போட்டியில் சேஸிங்கில் அதிக ரன்கள் அடித்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்து வரலாறு படைத்தார். 8720 ரன்களுடன் சச்சின் முதலிடத்தில் இருந்த நிலையில், விராட் கோலி 8741 ரன்களுடன் அவரை பின்னுக்கு தள்ளினார்.

அதுமட்டுமில்லாமல் SENA நாடுகள் என கூறப்படும் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா நான்கு நாடுகளிலும் ஒருநாள் போட்டிகளில் 50+ சராசரி வைத்திருக்கும் முதல் வீரராக மாறி சாதனை படைத்தார்.

நாடுகளின் படி விராட் கோலியின் ODI சராசரி:

தென்னாப்பிரிக்கா - 76.38

வங்கதேசம் - 73.13

இந்தியா - 62.81

ஜிம்பாப்வே - 60.83

மேற்கிந்தியத் தீவு - 58.92

ஐக்கிய அரபு அமீரகம் - 54.50

நியூசிலாந்து - 51.53

இங்கிலாந்து - 51.48

ஆஸ்திரேலியா - 50.03

virat kohli
”பத்ரிநாத் எனக்கு பேட்டிங் செய்ய சொல்லித்தந்தார்..” 5 தமிழக வீரர்களை நினைவுகூர்ந்த ரெய்னா!
virat kohli
NO.3 வீரராக நம்பர்.1 சாதனை.. 80வது அரைசதத்துடன் கோலி படைத்த பிரத்யேக வரலாறு!