NO.3 வீரராக நம்பர்.1 சாதனை.. 80வது அரைசதத்துடன் கோலி படைத்த பிரத்யேக வரலாறு!
நியூசிலாந்து அணியை எதிர்த்து 74 ரன்கள் அடித்த விராட் கோலி, 80வது அரைசதத்தை பதிவு செய்து, நம்பர் 3 வீரராக 13000 ரன்களை குவித்த முதல் வீரராக வரலாற்றில் இடம்பிடித்தார். இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 1-0 என தொடங்கியது.
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 5 டி20 போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இரண்டு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரை 3-2 என இந்திய அணி வென்று அசத்தியது.
இந்தசூழலில் இரண்டு அணிகளுக்கும் எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க்கில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சை தேர்வுசெய்தார். வழக்கத்திற்கு மாறாக இந்தியா அர்ஷ்தீப் சிங், குர்னூர் ப்ரார், அன்ஷூல் கம்போஜ், அகிப் நபி ஆகிய 4 வேகப்பந்துவீச்சாளர்களுடனும், நமன் திர் மற்றும் அக்சர் பட்டேல் ஆகிய 2 ஸ்பின் ஆல்ரவுண்டர்களுடனும் சென்றது.
இந்த மைதானத்தில் நடைபெற்ற டி20 போட்டியில் தான் நியூசிலாந்து 259 ரன்களை அடித்திருந்த நிலையில், இந்தப்போட்டியும் அதிக ரன்கள் கொண்ட போட்டியாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி இந்தியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 40.2 ஓவரில் 185 ரன்கள் மட்டுமே அடித்து சுருண்டது. அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்டுகளும், குர்னூர் ப்ரார் 3 விக்கெட்டுகள் மற்றும் அன்ஷூல் கம்போஜ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர்.’
186 ரன்கள் அடித்தால் வெற்றி என விளையாடிய இந்திய அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய ரோகித் சர்மா 0 ரன்னில் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார். ஆனால் அடுத்து கைக்கோர்த்த கோலி மற்றும் கேப்டன் சுப்மன் கில் இருவரும் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு அணியை மீட்டு எடுத்துவந்தனர். இதற்கிடையில் மழையால் ஆட்டம் தடைசெய்யப்பட்ட நிலையில், 32 ஓவர்கள் கொண்ட போட்டியாக குறைக்கப்பட்டது. இந்தியாவிற்கு வெற்றிபெற 143 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டன.
இந்நிலையில் 13 பவுண்டரிகள் 1 சிக்சர் என அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்திய கிங் கோலி 80வது ஒருநாள் அரைசதத்தை பதிவுசெய்து 51 பந்தில் 74 ரன்கள் அடித்து மிரட்டினார். மறுபக்கம் சுப்மன்கில் 37 ரன்கள் அடிக்க 22.4 ஓவரிலேயே இலக்கை எட்டிய இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை 1-0 என முன்னிலையுடன் தொடங்கியுள்ளது.
இப்போட்டியில் 74 ரன்கள் அடித்த விராட் கோலி நம்பர் 3 வீரராக விளையாடி 13000 ரன்கள் குவித்த முதல் வீரராக வரலாறு படைத்தார்.

