\
விரேந்தர் சேவாக் - ஆர்யவீர் சேவாக்
விரேந்தர் சேவாக் - ஆர்யவீர் சேவாக்reuters / sony sports network

யு19 ஆசிய கோப்பை| 7 பவுண்டரி 4 சிக்சர்.. அதிரடி காட்டிய ஆர்யவீர் சேவாக்!

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், நேபாள அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
Published on: 
Summary

19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பையில், இந்திய அணியின் ஆர்யவீர் சேவாக் 52 பந்துகளில் 70 ரன்கள் அடித்து அதிரடி காட்டினார். 7 பவுண்டரிகளும் 4 சிக்சர்களும் அடித்த அவர், நேபாள அணியை எதிர்த்து இந்திய அணியை விக்கெட் இழப்பின்றி வெற்றியடையச் செய்தார்.

19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கடந்த நவம்பர் 5ஆம் தேதி முதல் நடைபெற்றுவருகிறது. இந்தியா உடன் சேர்த்து நேபாள், பாகிஸ்தான், யுஏஇ ஆகிய 4 அணிகள் ஒரு குழுவாகவும், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் மலேசியா ஆகிய 4 அணிகள் ஒரு குழுவாகவும் விளையாடிவருகின்றன.

இந்நிலையில் அல் அமீரத் நகரில் நடைபெற்ற போட்டியில் நேபாள அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடியது. பரபரப்பாக தொடங்கிய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நேபாள அணி 128 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் விளையாடிய இந்திய அணி, கேப்டன் லக் ஷ்யா ராய்சந்தானி மற்றும் ஆர்யவீர் சேவாக் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் விக்கெட் எதையும் இழக்காமல் 19.1 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது.

அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்திய சேவாக்கின் மகனான ஆர்யவீர் சேவாக் 52 பந்துகளில் 70 ரன்கள் விளாசினார். இதில் 7 பவுண்டரிகளையும் 4 சிக்சர்களையும் பறக்கவிட்டிருந்தார் ஆர்யவீர் சேவாக்.

விரேந்தர் சேவாக் - ஆர்யவீர் சேவாக்
15 வயதில் கேப்டனாகும் சூர்யவன்ஷி.. சையத் முஷ்டாக் அலி தொடரில் அங்கீகாரம்!
விரேந்தர் சேவாக் - ஆர்யவீர் சேவாக்
’தொடர்ந்து நிராகரிப்பு..’ டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்த முகமது ஷமி!