\
ஷமி
ஷமிicc / reuters

’தொடர்ந்து நிராகரிப்பு..’ டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்த முகமது ஷமி!

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்துள்ளார் இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி.
Published on: 
Summary

இந்திய டெஸ்ட் அணியில் இடம்கிடைக்காத நிலையில், 64 போட்டிகளில் 229 விக்கெட்டுகளை வீழ்த்திய முகமது ஷமி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார். தேர்வுக்குழுவின் நிராகரிப்புகள் தொடர்ந்ததால், அவர் ஒருநாள் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்துவார் என தெரிவித்தார்.

2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக விளையாடிய முகமது ஷமி, அதற்கு பிறகு இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெறவே இல்லை. கடைசி சர்வதேச போட்டியை பொறுத்தவரை 2025 சாம்பியன்ஷ் டிராபி இறுதிப்போட்டியில் கடைசியாக விளையாடியிருந்தார்.

shami
shamireuters

இந்தசூழலில் காயம் காரணமாக ஓய்வில் இருந்த முகமது ஷமி காயத்திலிருந்து மீண்டுவந்தாலும் அவருக்கு இந்திய டெஸ்ட் அணியில் இடம்கிடைக்கவில்லை. 64 போட்டிகளில் விளையாடி 229 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கும் முகமது ஷமியை, மீண்டும் டெஸ்ட் அணிக்குள் எடுத்துவரவேண்டும் என பல ஆதரவு குரல்கள் எழுந்தன. ஆனால் அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு அவரை கடைசிவரை ரேடாருக்குள் கொண்டுவர விருப்பம் காட்டவில்லை.

shami
shamireuters

அஜித் அகர்கர் பதவிக்காலம் முடிவுக்கு வந்தபிறகாவது இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெறுவார் என நினைக்கப்பட்ட நிலையில், அவருக்கான இடம் அணியில் இல்லை என்பதை இந்திய நிர்வாகம் மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தியது. இந்தசூழலில் தான் இந்திய அணிக்காக பல டெஸ்ட் போட்டிகளை வென்றுகொடுத்த லெஜண்ட் முகமது ஷமி, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.

122 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் 27 பந்துவீச்சு சராசரியுடன் 6 முறை ஐந்து விக்கெட்டுகளும், 12 முறை 4 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். அவருடைய சிறந்த பந்துவீச்சு 118 ரன்னுக்கு 9 விக்கெட்டுகளாக இருக்கிறது.

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தாலும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் என தெரிவித்துள்ளார் முகமது ஷமி.

ஷமி
”இந்திய அணிக்கு ஷமி தேவை..” தேர்வுக்குழுவை எச்சரிக்கும் முன்னாள் இந்திய வீரர்!
ஷமி
முகமது ஷமி எங்கே..?? நல்ல பவுலர்களை எல்லாம் ஓரங்கட்டிட்டீங்க! - முன்னாள் வீரர் ஆவேசம்!