சேப்பாக்கம் மைதானத்தில் விசிலுக்கு தடை
சேப்பாக்கம் மைதானத்தில் விசிலுக்கு தடைweb

இனி Whistle Podu இல்லை.. சேப்பாக்கம் மைதானத்தில் விசிலுக்கு தடை.. TNCA அறிவிப்பு!

சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் விசில் எடுத்து செல்ல அதிகாரப்பூர்வமாக தடை விதித்துள்ளது தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்.
Published on
Summary

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விசிலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 2026 டி20 உலகக்கோப்பையில் நடந்த போட்டியில், விசிலை மைதானத்திற்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் விதித்துள்ள புதிய விதிமுறைகளின் அடிப்படையில், விசில் உள்ளிட்ட பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளன.

2026 டி20 உலகக்கோப்பையில் நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியை காண மைதானத்திற்கு செல்லும் ரசிகர்கள் விசிலை கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

சமீபத்தில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் சின்னமாக விசிலை தேர்தல் ஆணையம் ஒதுக்கியிருந்த நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் விசிலுக்கு தடை என்பது பேசுபொருளாக மாறியது.

முதலில் காவல்துறையினர் விசிலை எடுத்துச்செல்ல அனுமதிக்கவில்லை என்றும், பிசிசிஐ-க்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என சேப்பாக்கம் நிர்வாகமும் தெரிவித்ததாக தகவல் வெளியானது. ஆனால் பின்னர் ஐசிசி தான் விசில், ஒலிப்பெருக்கி போன்ற பொருட்களை மைதானத்திற்கு எடுத்துச்செல்ல தடை விதித்துள்ளதாக பின்னர் செய்தி வெளியானது.

இந்த சூழலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை நிர்வாகி காசி விஸ்வநாதனிடமும் இன்று விசில் குறித்த கேள்வி கேட்கப்பட்டது. அவர் அதுகுறித்து பதிலளிக்க மறுத்துவிட்டார்.

சேப்பாக்கம் மைதானத்தில் விசிலுக்கு தடை
’என் சேவை தேவைப்பட்டால் சொல்லுங்க..’ நேபாள் ஆட்டத்தை பார்த்து மிரண்டுபோன ஜாம்பவான்!

இந்நிலையில் தற்போது சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்குள் விசில் எடுத்துச்செல்ல தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அதிகாரப்பூர்வமாக தடை விதித்துள்ளது.

விசிலுக்கு தடை
விசிலுக்கு தடை

இதுகுறித்து வெளியாகியிருக்கும் அறிவிப்பில், மைதானத்திற்குள் ரசிகர்கள் கொண்டு செல்ல தடை செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் மைதானத்திற்குள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து வெளியான புதிய பட்டியலில் விசில் இடம்பெற்றுள்ளது. இதனால் மைதானத்திற்குள் விசில் எடுத்துச்செல்ல ரசிகர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

சேப்பாக்கம் மைதானத்தில் விசிலுக்கு தடை
“இந்தியாவை வீழ்த்தாமல் உலகக்கோப்பை வெல்ல முடியாது..” - வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com