நேபாள் அணி குறித்து டேல் ஸ்டெய்ன்
நேபாள் அணி குறித்து டேல் ஸ்டெய்ன்web

’என் சேவை தேவைப்பட்டால் சொல்லுங்க..’ நேபாள் ஆட்டத்தை பார்த்து மிரண்டுபோன ஜாம்பவான்!

இங்கிலாந்துக்கு எதிராக ஒரு வரலாற்று வெற்றியை கிட்டத்தட்ட படைத்திருந்தது நேபாள கிரிக்கெட் அணி.
Published on
Summary

2026 டி20 உலகக்கோப்பையில் நேபாள் அணியின் ஆட்டம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. இங்கிலாந்து அணிக்கு கடைசி வரை கடும் போட்டி கொடுத்த நேபாள், 4 ரன்களில் தோல்வியடைந்தது. தென்னாப்பிரிக்க ஜாம்பவான் டேல் ஸ்டெய்ன், நேபாளின் ஆட்டத்தை பாராட்டி, தனது சேவைகளை வழங்க தயாராக இருப்பதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

2026 டி20 உலகக்கோப்பை தொடரானது பிப்ரவரி 7ஆம் தேதி முதல் தொடங்கி மார்ச் 8ஆம் தேதி வரை நடக்கிறது. 20 அணிகள் ஒரு கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்தவிருக்கும் நிலையில், சிறிய அணிகள் எப்படி விளையாடப்போகின்றன, எதாவது பெரிய அப்செட் நிகழுமா என்ற எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.

இங்கிலாந்துக்கு எதிராக 4 ரன்னில் வெற்றியை நழுவவிட்ட நேபாள்
இங்கிலாந்துக்கு எதிராக 4 ரன்னில் வெற்றியை நழுவவிட்ட நேபாள்web

அந்தவகையில் இன்று நடைபெற்ற நேபாள் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி பரபரப்பாக நடந்துமுடிந்தது. கடைசிபந்துவரை வெற்றியின் பக்கம் இருந்த நேபாள் அணியிடமிருந்து வெற்றியை தட்டிப்பறித்தார் இங்கிலாந்து வீரர் சாம் கரன். 2 பந்துக்கு 6 ரன்கள் என இருந்தபோது 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது நேபாள அணி.

நேபாள் அணி குறித்து டேல் ஸ்டெய்ன்
T20 WC| இறுதிப்பந்து வரை திக் திக்.. இங்கிலாந்துக்கு மரண பயம் காட்டிய நேபாள்! 4 ரன்னில் மிஸ்!

இந்நிலையில் நேபாள அணி நம்பிக்கையான ஆட்டத்தை பார்த்து மிரண்டு போன தென்னாப்பிரிக்காவின் ஜாம்பவான் கிரிக்கெட்டர் டேல் ஸ்டெய்ன் ஒரு பதிவொன்றை எக்ஸ்தளத்தில் பதிந்துள்ளார். அப்பதிவை பார்த்த ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.

எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் டேல் ஸ்டெய்ன், “நேபாள், உங்களுக்கு எப்போதாவது என் சேவைகள் தேவைப்பட்டால், நான் அவற்றை வழங்கத் தயாராக இருக்கிறேன்; மேலே, மேலே, மேலே செல்லுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

நேபாள் அணி குறித்து டேல் ஸ்டெய்ன்
’4 ரன்னில் தவறிப்போன வரலாறு..’ ‘நாங்க வேடிக்கை பார்க்க வரல’ - நேபாள் கேப்டன் பேச்சு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com