சூர்யகுமார் தலைமையிலான இந்திய டி20 அணி
சூர்யகுமார் தலைமையிலான இந்திய டி20 அணிweb

2026 T20 WC| 8ஆம் வரிசை வரை பேட்டிங்.. 7 பவுலிங் ஆப்சன்.. இந்தியாவின் பிளேயிங் 11 இதுதான்!

2026 டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணியின் பிரச்னையாக பார்க்கப்பட்ட சுப்மன் கில் நீக்கப்பட்டிருப்பது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது..
Published on
Summary

2026 டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சுப்மன் கில் நீக்கப்பட்டு, அக்சர் பட்டேல் பேட்டிங் மற்றும் பவுலிங் ஆப்சன்களை வலுப்படுத்துகிறார். இந்தியா, பாகிஸ்தான், நமீபியா, நெதர்லாந்து, அமெரிக்கா ஆகிய அணிகளுடன் குரூப் ஏ பிரிவில் உள்ளது. இந்தியா 3வது டி20 உலகக்கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2026 டி20 உலகக்கோப்பை தொடரானது வரும் பிப்ரவரி 7 முதல் மார்ச் 8ஆம் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவிருக்கிறது. 20 அணிகள் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்தவிருக்கும் நிலையில், ஐந்து ஐந்து அணிகளாக 4 பிரிவுகள் பிரிக்கப்பட்டுள்ளன.

2024 டி20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணி
2024 டி20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணிx

குரூப் ஏ பிரிவில் பாகிஸ்தான், நமீபியா, நெதர்லாந்து மற்றும் அமெரிக்கா முதலிய அணிகளுடன் இந்தியா இடம்பெற்றுள்ளது. முதல் போட்டியில் அமெரிக்காவையும், பிப்ரவரி 15ஆம் தேதி பாகிஸ்தானையும் எதிர்கொள்கிறது இந்திய அணி.

இந்தசூழலில் உலகக்கோப்பைக்கு இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில், 2026 டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

சூர்யகுமார் தலைமையிலான இந்திய டி20 அணி
’ஆல்டைம் கிரேட்டஸ்ட்’ இடதுகை TEST பவுலர்கள்.. டாப் 7-ல் இடம்பிடித்த ஒரே இந்திய வீரர்!

வலுவான பிளேயிங் 11..

இந்திய டி20 அணியில் சுப்மன் கில்லும், ஜிதேஷ் சர்மாவும் இடம்பெற்றிருந்த போது அணியில் சமநிலை இல்லாமல் இருப்பதாகவே இருந்தது. சுப்மன் கில்லின் ஃபார்ம் கேள்விக்குறியாக இருந்தது, அதேநேரம் ஜிதேஷ் சர்மா நன்றாகவே செயல்பட்டாலும் இந்திய அணியில் பவுலிங் ஆப்சனில் குறைகள் இருக்கவே செய்தன.

வருண் சக்கரவர்த்தி
வருண் சக்கரவர்த்தி
சூர்யகுமார் தலைமையிலான இந்திய டி20 அணி
’இஷான் கிஷன் ஹீரோ..’ 19 வருட SMAT வரலாற்றில் முதல் கோப்பை வென்றது ஜார்கண்ட்!

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான கடைசி டி20 போட்டியில் கூட 5 பவுலிங் ஆப்சன்களை தாண்டி, 6வது பவுலராக அபிஷேக் சர்மாவையே பயன்படுத்தியிருந்தார் கேப்டன் சூர்யகுமார் யாதவ். ஆனால் தற்போது அணியில் அக்சர் பட்டேல் திரும்பியிருப்பது அணியின் பேட்டிங்கை வலுப்படுத்துவதோடு, இந்தியாவிற்கு இன்னொரு பவுலிங் ஆப்சனையும் எடுத்துவந்துள்ளது. ஷிவம் துபே இல்லை என்றாலும் இந்தியாவிற்கு 6 பவுலிங் ஆப்சன்கள் இடம்பெறும்வகையில் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹர்திக் பாண்டியா
ஹர்திக் பாண்டியா

தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் அனைத்து கட்டங்களுக்கும் சரியாக வீரர்கள் பொருந்தியுள்ளனர். இந்த அணி சிறப்பாக செயல்பட்டால் சொந்தமண்ணில் இந்தியா 3வது டி20 உலகக்கோப்பையை கைப்பற்றும்.

சூர்யகுமார் தலைமையிலான இந்திய டி20 அணி
’இந்தியாவின் பொக்கிஷம் ஹர்திக்..’ ஏன் தலைசிறந்தவர்? 7 சம்பவங்கள்!

அணியின் டாப் 3 பேட்ஸ்மேன்களாக அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், திலக் வர்மா மூன்றுபேரும் அபாரமான ஃபார்முடன் வருகின்றனர். மிடில் ஆர்டரில் கேப்டன் சூர்யாவின் ஃபார்ம் மட்டுமே கேள்விக்குறியாக உள்ளது. மற்றபடி அக்சர் பட்டேல் மற்றும் ஷிவம் துபேவின் பேட்டிங் நன்றாக உள்ளது. ஃபினிசிங் ரோலில் வரும் ஹர்திக் பாண்டியா மரண அடிகொடுத்துவருகிறார். லோயர் ஆர்டரில் ஹர்சித் ராணாவால் சில பெரிய ஷாட்களை விளையாட முடியும், வருண் சக்கரவர்த்தி சமீபத்தில் தன்னுடைய பேட்டிங்கில் கவனம் செலுத்திவருவது குறிப்பிடத்தக்கது. பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங் இருவரும் புதியபந்து மற்றும் டெத் ஓவர்களில் சிறப்பாக செயல்பட்டுவருகின்றனர். இந்த பிளேயிங் 11 வீரர்களுக்கு பேக்கப் வீரர்களையும் சரியாக எடுத்துள்ளது தேர்வுக்குழு.

சூர்யகுமார் - சஞ்சு சாம்சன்
சூர்யகுமார் - சஞ்சு சாம்சன்cricinfo
சூர்யகுமார் தலைமையிலான இந்திய டி20 அணி
’1000 பவுண்டரி, 55 சராசரி, யாரும் செய்யாத உலகசாதனை..’ டெஸ்ட் கிரிக்கெட்டில் கோலியின் 14 சாதனைகள்!

டாப் ஆர்டரில் சொதப்பல் ஏற்பட்டால், அபாரமான ஃபார்முடன் இருக்கும் இஷான் கிஷன் காத்திருக்கிறார். அக்சர் பட்டேலுக்கு மாற்றுவீரராக வாஷிங்டன் இருக்கிறார். 5 பவுலிங் ஆப்சன் போதுமென்றால் ஹர்சித் ராணாவிற்கு பதிலாக ரிங்கு சிங்குவால் ஃபினிசிங்கில் விளையாட முடியும். வருண் சக்கரவர்த்திக்கு பேக்கப்பாக குல்தீப் யாதவ் வரிசையை வலுவாக்குகிறார். இந்த அணி அனைத்துவிதத்திலும் தலைசிறந்த அணியாகவே இருக்கிறது. இந்தியா கோப்பையோடு திரும்பும் என எதிர்ப்பார்க்கலாம்..

திலக் வர்மா
திலக் வர்மா
சூர்யகுமார் தலைமையிலான இந்திய டி20 அணி
சுப்மன் கில் நீக்கம்.. 2 தமிழக வீரர்களுக்கு இடம்.. டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!

எதிர்ப்பார்க்கப்படும் பிளேயிங் 11:

1. அபிஷேக் சர்மா

2. சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்)

3. திலக் வர்மா

4. சூர்யகுமார் யாதவ்

5. அக்சர் பட்டேல்

6. ஷிவம் துபே

7. ஹர்திக் பாண்டியா

8. ஹர்சித் ராணா

9. வருண் சக்கரவர்த்தி

10. அர்ஷ்தீப் சிங்

11. பும்ரா

சூர்யகுமார் தலைமையிலான இந்திய டி20 அணி
அப்போ ராயுடு.. இப்போ ஜிதேஷ் சர்மா.. என்ன தப்பு பண்ணார்..? முன்னாள் இந்திய வீரர் பதிவு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com