விராட் கோலியிடம் பேசியதை மகிழ்ச்சியுடன் கூறிய சட்டீஸ்கர் இளைஞர்
விராட் கோலியிடம் பேசியதை மகிழ்ச்சியுடன் கூறிய சட்டீஸ்கர் இளைஞர்web

”கோலியிடம் பேசியதால் எங்கள் கிராமமே மகிழ்ச்சியாக உள்ளது..” - பட்டிதார் SIM-ஐ பயன்படுத்திய இளைஞர்!

எங்கள் கிராமத்தில் அனைவருமே ஆர்சிபி ரசிகர்கள் தான், விராட் கோலியிடம் எங்கள் கிராமத்திலிருந்தே பேசுவேன் என்று நினைத்து கூட பார்த்ததில்லை என பட்டிதார் சிம் நம்பர் மாறியது குறித்து கிராம இளைஞர் மகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.
Published on

2025 ஐபிஎல் தொடரில் முதல்முறையாக பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி கோப்பையை வென்று சாதனை படைத்தது. இந்த அணிக்கு கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் என்ற பெருமையை ரஜத் படிதார் பெற்றார்.

இந்த நிலையில், சத்தீஸ்கரின் காரியாபந்தின் மடகான் கிராமத்தைச் சேர்ந்த 21 வயது மணீஷ் பிசி, என்பவர், கடந்த ஜூன் மாத இறுதியில் சிம் ஒன்றைப் புதிதாக வாங்கியுள்ளார். அது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி கேப்டன் ரஜத் படிதார் பயன்படுத்தியது என்பது அவருக்குத் தெரியாது. ஆறு மாதங்களுக்கும் மேலாகச் செயல்படாத எண்கள், நிறுவனத்தின் கொள்கையின்படி, புதிய வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் ஒதுக்கப்படுகின்றன.

ரஜத் பட்டிதார் - RCB Captain
ரஜத் பட்டிதார் - RCB Captain

அந்த வகையில் கிரிக்கெட் வீரர் ரஜத் படிதாரின் முந்தைய மொபைல் எண் நீண்ட நாட்களுக்கும் மேலாகச் செயல்படாமல் இருந்ததால், அந்த நம்பர் செயல் இழந்து வேறொருவருக்குப் புதிதாக வழங்கப்பட்டிருக்கிறது.

அதுதெரியாத சக வீரர்களான விராட் கோலி, ஏபிடி வில்லியர்ஸ், யஷ் தயாள் போன்றவர்கள் கிராமத்து இளைஞர்களுக்கு போன்செய்து பேசியுள்ளனர். கிரிக்கெட் வீரர்கள் தங்கள் அடையாளங்களை சொல்ல, சக நண்பர்கள் தான் கலாய்க்கிறார்கள் என நினைத்த கிராம இளைஞர்கள் தாங்கள் தோனி பேசுவதாக கிண்டலுடன் தெரிவித்துள்ளனர்.

virat kohli
virat kohli

பின்னர் ரஜத் பட்டிதாரே அந்த நம்பருக்கு ஃபோன் செய்து, போலீஸில் புகாரளித்துள்ளேன், விரைவில் வருவார்கள், அந்த எண்ணை பயன்படுத்தாதீர்கள் என்று கூறியுள்ளார். அதற்குபிறகு தான் தாங்கள் விராட் கோலியிடம் தான் பேசியுள்ளோம் என்பதையே அந்த கிராம இளைஞர்கள் உணர்ந்துள்ளனர்.

விராட் கோலியிடம் பேசியதை மகிழ்ச்சியுடன் கூறிய சட்டீஸ்கர் இளைஞர்
புதிய சிம் வாங்கிய சத்தீஸ்கர் நபர்.. Call செய்த விராட் கோலி.. முறையிட்ட ரஜத் படிதார்!

எங்கள் கிராமமே மகிழ்ச்சியாக உள்ளது..

பட்டிதார் சிம் நம்பரை பயன்படுத்தியது குறித்து பேசியிருக்கும் மணீஷ் பிசியின் நண்பர் கெம்ராஜ், முதலில் வாட்ஸாப் எண்ணில் பட்டிதாரின் புகைப்படம் இருப்பதை பார்த்து அது ஏதோ சிம் கோளாறு என்று நினைத்ததாகவும், விராட் கோலி, ஏபிடி வில்லியர்ஸ் பேசும்போது கிண்டலடித்ததாகவும் கூறினார்.

விராட் கோலியிடம் பேசியது குறித்து பகிர்ந்திருக்கும் கெம்ராஜ், “நான் ஒருநாள் விராட் கோலியிடம் பேசுவேன் என்று ஒருபோதும் நினைத்துப் பார்த்ததில்லை, அதுவும் எங்கள் கிராமத்திலிருந்து. ஏபி டி வில்லியர்ஸ் அழைத்தபோது, அவர் ஆங்கிலத்தில் பேசினார். எங்களுக்கு ஒரு வார்த்தை கூட புரியவில்லை, ஆனால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம். மணீஷுக்கு அழைப்புகள் வரும்போது, அவர் தொலைபேசியை என்னிடம் கொடுப்பார். விராட் கோலி மற்றும் யாஷ் தயாள் என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொண்ட அழைப்பாளர்கள், நாங்கள் ஏன் படிதாரின் எண்ணைப் பயன்படுத்துகிறோம் என்று எங்களிடம் கேட்டார்கள். நாங்கள் ஒரு புதிய சிம் வாங்கினோம், இது எங்கள் எண் என்று அவர்களிடம் விளக்கினோம்என்று கூறியுள்ளார்.

விராட் கோலி
விராட் கோலி

மணீஷின் சகோதரர் கூறுகையில், “எங்கள் கிராமத்தில் அனைவருமே ஆர்சிபி ரசிகர்கள் தான், விராட் கோலியிடம் பேசியதால் எங்கள் கிராமத்தில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

விராட் கோலியிடம் பேசியதை மகிழ்ச்சியுடன் கூறிய சட்டீஸ்கர் இளைஞர்
”அயர்லாந்தில் ரஜினி படத்தை பார்க்க ரிஸ்க் எடுத்தேன்..” சஞ்சு சாம்சன் செய்த 'Fan Boy' சம்பவம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com