34 பவுண்டரிகள், 26 சிக்சர்கள்! 200 ஸ்டிரைக்ரேட்! டெஸ்ட் கிரிக்கெட்டை அலறவிட்ட தனிஒருவன்! 5 சாதனைகள்!

முதல்தர கிரிக்கெட் வரலாற்றில் 147 பந்துகளில் 300 ரன்கள் குவித்து புது வரலாறு படைத்துள்ளார் ஹைதராபாத் பேட்ஸ்மேன் தன்மய் அகர்வால்.
Tanmay Agarwal
Tanmay AgarwalBCCI

ஹைதராபாத் மற்றும் அருணாச்சல பிரதேச அணிகளுக்கு இடையேயான ரஞ்சிக்கோப்பை போட்டியில், ஹைதராபாத் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் தன்மய் அகர்வால் வெறும் 147 பந்துகளில் 300 ரன்கள் குவித்து வரலாறு படைத்தார். உலக கிரிக்கெட் வரலாற்றில் முதல்தர கிரிக்கெட்டில் குறைவான பந்துகளில் முச்சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார். இரண்டு அணிகளும் ஒரே நாளில் 701 ரன்களை குவித்து வியக்க வைத்துள்ளன.

28 வயதான தன்மய் அகர்வால் 181 பந்துகளில் 202 ஸ்டிரைக்ரேட்டுடன் 34 பவுண்டரிகள், 26 சிக்சர்கள் விளாசி 366 ரன்கள் குவித்து, பல்வேறு உலக சாதனைகளை படைத்து அசத்தியுள்ளார்.

1. அதிவேக முச்சதம் அடித்த முதல் வீரர்:

முதல் தர கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ருத்ரதாண்டவ ஆட்டத்தை ஆடிய தன்மய் அகர்வால், 147 பந்துகளில் (300 ரன்கள்) முச்சதமடித்து புது வரலாற்றை எழுதினார். 147 பந்துகளில் அடிக்கப்பட்ட 300 ரன்கள் என்பதே, முதல்தர கிரிக்கெட்டில் அடிக்கப்பட்ட அதிவேக முச்சதமாகும்.

Tanmay Agarwal
Tanmay Agarwal

இதற்குமுன்பு 2017ம் ஆண்டு பார்டர் அணிக்காக விளையாடிய மார்கோ மரைஸ், கிழக்கு மாகாண அணிக்கு எதிராக 191 பந்துகளில் 300 ரன்களை அடித்திருந்ததே முதல்தர கிரிக்கெட் வரலாற்றில் சாதனையாக இருந்துவந்தது. இந்நிலையில் 7 வருடங்களுக்கு பிறகு ஒரு சரவெடி ஆட்டத்தின் மூலம் புதிய உலக சாதனையை படைத்து அசத்தியுள்ளார் தன்மய் அகர்வால்.

Tanmay Agarwal
2 ஓவரில் 58 ரன்கள்! ஒரே டி20 போட்டியில் இந்திய அணி படைத்த 6 இமாலய சாதனைகள்!

முதல் தர கிரிக்கெட்டில் அதிக (26) சிக்சர்கள்:

தன்மய் அகர்வால் தன்னுடைய 366 ரன்கள் இன்னிங்ஸில் 26 சிக்சர்களை பறக்கவிட்டு வானவேடிக்கை காட்டினார். இதன் மூலம் முதல்தர கிரிக்கெட்டில் ஒரு வீரர் அடித்த அதிகபட்ச (26) சிக்சர்களை பதிவுசெய்த அவர், புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

Tanmay Agarwal
Tanmay Agarwal

இதற்குமுன் 2015ம் ஆண்டு நியூசிலாந்தின் காலின் முன்ரோ சென்ட்ரல் டிஸ்ட்ரிக்ட்ஸ் அணிக்கு எதிராக ஆக்லாந்திற்காக விளையாடியபோது 23 சிக்சர்களை பதிவுசெய்து சாதனை படைத்திருந்தார். தற்போது அச்சாதனையை தன்மய் அகர்வால் முறியடித்துள்ளார்.

Tanmay Agarwal
உடல்முழுவதும் அடி..11 மணிநேரம் களத்தில் நின்ற தீரம்! ஆஸியை சொந்த மண்ணில் சாய்த்த புஜாரா! #BirthDay

3. ரவி சாஸ்திரியின் 39 வருட சாதனை முறியடிப்பு:

தன்மய் அகர்வால் தனது (200 ரன்கள்) இரட்டைச் சதத்திற்காக எடுத்துகொண்ட 119 பந்துகள் ஆட்டமானது, 39 வருட ரவி சாஸ்திரியின் இமாலய சாதனையை முறியடித்துள்ளது. 1985ம் ஆண்டு பரோடாவுக்கு எதிராக 123 பந்துகளில் இரட்டைச் சதம் விளாசிய ரவி சாஸ்திரி, முதல்தர கிரிக்கெட்டில் குறைவான பந்துகளில் இரட்டைச் சதம் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை படைத்திருந்தார்.

ravi shastri
ravi shastri

தற்போது இந்திய ஜாம்பவான் ஆல்ரவுண்டர் ரவி சாஸ்திரியின் 39 வருட சாதனையை முறியடித்து, முதல்தர கிரிக்கெட்டில் குறைவான பந்துகளில் இரட்டைச் சதம் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை தன்மய் அகர்வால் நிகழ்த்தியுள்ளார்.

Tanmay Agarwal
BCCI விருதுகள்: 85வயது பரோக் இன்ஜினியர், ரவி சாஸ்திரி 2 பேருக்கும் வாழ்நாள் சாதனயாளர் விருது!

4. ஒரே நாளில் 300 ரன்கள் அடித்த முதல்வீரர்:

ரஞ்சிக்கோப்பையில் அருணாச்சல பிரதேசத்திற்கு எதிராக முதல் நாள் ஆட்டத்திலேயே 366 ரன்கள் குவித்த தன்மய் அகர்வால், முதல்தர கிரிக்கெட் போட்டியின் ஒரே நாளிலேயே 300 ரன்களை பதிவுசெய்த முதல் இந்திய வீரர் என்ற இமாலய சாதனையை படைத்துள்ளார்.

sehwag
sehwag

கடந்த 2009ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான பிரபோர்ன் டெஸ்ட்டில் வீரேந்திர சேவாக் இரண்டாவது நாளில் எடுத்த 284 ரன்களே, இதற்கு முன்பு ஒரே நாளில் ஒரு இந்திய வீரர் எடுத்த அதிகபட்ச ரன்களாக இருந்தது. தற்போது அந்த சாதனையை தன்மய் உடைத்துள்ளார்.

Tanmay Agarwal
“தோனி ஒருவர் தான் என்னை நல்ல பேட்ஸ்மேனாக மதித்தார்”! - உருக்கமாக பேசிய ஷிவம் துபே!

5. முதல்தர கிரிக்கெட்டில் 202 ஸ்டிரைக்ரேட்:

26 சிக்சர்கள், 34 பவுண்டரிகள் என வானவேடிக்கை காட்டிய தன்மய் அகர்வாலின் 366 ரன்கள் ஆட்டத்தின் ஸ்டிரைக்ரேட்டானது 202 ஆகும். இது 200 ரன்கள் அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களின் முதல்தர் கிரிக்கெட் ஆட்டத்தில் ஒரு இந்திய வீரரால் பதிவுசெய்யப்பட்ட அதிகபட்ச ஸ்டிரைக்ரேட் ஆகும்.

Tanmay Agarwal
Tanmay Agarwal

மேலும் உலக கிரிக்கெட்டின் முதல்தர கிரிக்கெட்டில் பதிவான இரண்டாவது அதிகபட்ச ஸ்டிரைக்ரேட்டாகவும் அமைந்தது. அதிகபட்சமாக 2018-ல் ஷஃபிகுல்லா அடித்த 89 பந்துகளில் 200 ரன்கள் ஆட்டத்தில் பதிவான 224.71 ஸ்டிரைக்ரேட் முதலிடத்தில் இருந்துவருகிறது.

Tanmay Agarwal
ஒரே நேரத்தில் 2 பிசிசிஐ விருதுகளை அள்ளிய ரவிச்சந்திரன் அஸ்வின்! என்னென்ன விருதுகள்?

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com