உடல்முழுவதும் அடி..11 மணிநேரம் களத்தில் நின்ற தீரம்! ஆஸியை சொந்த மண்ணில் சாய்த்த புஜாரா! #BirthDay

இந்தியாவின் தற்கால தடுப்புச்சுவர் என டிராவிட்டுக்கு அடுத்தபடியாக அழைக்கப்படும் சட்டீஸ்வர் புஜாரா, ஜனவரி 25ம் தேதியான இன்று தன்னுடைய 36வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
புஜாரா
புஜாராPT

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், “சச்சின், சேவாக், லக்ஷ்மன் போன்ற வீரர்களுக்கு மாற்று வீரர்கள் நிச்சயம் வருவார்கள், ஆனால் ராகுல் டிராவிட்டை போல வேறொரு வீரரை இந்திய அணி கண்டுபிடிக்கவே முடியாது” என்ற கூற்று நீண்டகாலமாக சொல்லப்பட்டது. அதற்கு காரணம் விக்கெட்டுகள் சீட்டுக்கட்டுகள் போல சரியும்நேரத்தில் ஒருபுறம் சுவரை போல நிலைத்து நின்று விளையாடும் ராகுல் டிராவிட், விக்கெட்டுகள் விழுவதை தடுத்துநிறுத்தி ரன்களை எடுத்துவருவதில் வல்லவர். அவருடைய தனித்துவமான பேட்டிங் டெக்னிக் மற்றும் நீண்ட நேரம் நிலைத்து நின்று ஆடும் திறனால் அவரை “THE WALL" என கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.

இந்நிலையில்தான், ராகுல் டிராவிட்டுக்கு மாற்றுவீரராக 2010ம் ஆண்டு இந்திய அணிக்கு வந்துசேர்ந்தார் சட்டீஸ்வர் புஜாரா. தான் விளையாடிய 9வது போட்டியிலேயே இரட்டை சதத்தை எடுத்துவந்த அவர், இந்திய அணியின் எதிர்காலமாக போற்றப்பட்டார். ஒருகட்டத்தில் விராட் கோலி, ரோகித் சர்மாவை விட நாங்கள் புஜாரா மீதுதான் அதிக கவனம் செலுத்தப்போகிறோம் என மற்ற ஜாம்பவான் அணிகள் சொல்லும் அளவிற்கு தன்னை வளர்த்துக்கொண்டார் புஜாரா. அத்தகைய சிறந்த வீரரான புஜாராவிற்கு இன்று 36வது பிறந்தநாள்.

1. 206* vs ENG (2012): முதல் போட்டியிலேயே விவ் ரிச்சர்ட்ஸ் உடன் இணைந்த புஜாரா!

புஜாரா டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகி அப்போது தான் தன்னுடைய 9வது டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்கிறார். அகமதாபாத்தில் இங்கிலாந்துக்கு எதிராக 389 பந்துகளை சந்தித்து 206 ரன்களை குவித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய புஜாரா, இந்தியாவை 521 ரன்களுக்கு எடுத்துச்சென்றார்.

pujara
pujara

பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி ஆரம்பத்திலேயே ஆட்டமிழந்து ஃபாலோ-ஆன் செய்யப்பட்டது. அதன் பிறகு இந்தியா வெற்றிபெற 77 ரன்கள் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டது. இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங்கைத் தொடங்கிய புஜாரா 51 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 41 ரன்கள் எடுத்து, இந்தியாவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்தார்.

இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய முதல் போட்டியிலேயே அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் விவ் ரிச்சர்ட்ஸ் வரிசையில் இணைந்தார் புஜாரா.

புஜாரா
2 ஓவரில் 58 ரன்கள்! ஒரே டி20 போட்டியில் இந்திய அணி படைத்த 6 இமாலய சாதனைகள்!

2. 123 vs AUS (2018): 10 ஆண்டுகளுக்கு பிறகு முதல் வெற்றி!

2018-19ம் ஆண்டு இந்தியா அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடிய முதல் டெஸ்ட் போட்டி அது. ஆஸ்திரேலியா மண்ணில் ஒரு இந்திய பேட்ஸ்மேனின் சிறந்த ஆட்டமாக இன்றளவும் பார்க்கப்படும் இந்த போட்டியில், இந்தியா 41/4 என்ற நிலைமையில் இருந்த போது புஜாரா களமிறங்கினார். விக்கெட்டுகள் சரிவை தடுத்துநிறுத்தி ஒருமுனையில் சுவரை போல நிலைத்து நின்ற புஜாரா, 246 பந்துகளில் 7 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உட்பட 123 ரன்கள் எடுத்து அடிலெய்டில் இந்தியா வரலாற்று வெற்றியைப் பெற உதவினார்.

அன்று அவர் ஆடிய அந்த ஆட்டம் தான் ஆஸ்திரேலியா மண்ணில் இந்தியா முதல்முறையாக டெஸ்ட் தொடரை வெல்ல காரணமாக அமைந்தது. டெஸ்ட் தொடர் முடிந்து பேசிய ஆஸ்திரேலியா கேப்டன், புஜாரா தனியொரு ஆளாக எங்களை வென்றுவிட்டார் என கூறினார். பத்தாண்டுகளில் ஆஸ்திரேலியாவில் இந்தியா பெற்ற முதல் டெஸ்ட் வெற்றி இதுவாகும். இந்தத் தொடரில் சேதேஷ்வர் புஜாரா மேலும் இரண்டு சதங்களை பதிவுசெய்து அசத்தியிருப்பார்.

புஜாரா
முதல்தர கிரிக்கெட்டில் 20,000 ரன்கள் குவிப்பு! கவாஸ்கர், சச்சின் வரிசையில் இணைந்த புஜாரா!

3. 202 vs AUS (2017): 11 மணிநேரம் பேட்டிங் செய்த புஜாரா!

2017ம் ஆண்டு இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்த ஆஸ்திரேலியா அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. புனேவில் நடந்த முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வெற்றிபெற, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றிபெற்று 1-1 என தொடரை சமநிலையில் வைத்திருந்தது. இதனைத்தொடர்ந்து தான் ராஞ்சியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3வது டெஸ்ட் போட்டி நடைபெற்றது.

pujara
pujara

முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மேக்ஸ்வெல்லின் அபாரமான சதத்தால் 450 ரன்களை குவித்தது. இதை சற்றும் எதிர்ப்பார்க்காத இந்திய அணி என்ன செய்வதென்று தடுமாறியது. ஆனால் புஜாரா ஒரு நம்பமுடியாத ஆட்டத்தால் போட்டியை டிராவிற்கு அழைத்துச்சென்றார். களத்தில் 525 பந்துகளை சந்தித்து 202 ரன்களை அடித்த அவர், 11 மணிநேரம் தொடர்ச்சியாக பேட்டிங் செய்து அனைவரையும் மிரளவைத்தார். இந்தியா தோல்வியைத் தவிர்க்கவும், தொடரை உயிர்ப்புடன் வைத்திருக்கவும் புஜாராவின் இன்னிங்ஸ் முக்கியமானதாக அமைந்தது. அடுத்தப்போட்டியில் வெற்றிபெற்ற இந்திய அணி தொடரை 2-1 என கைப்பற்றி அசத்தியது.

புஜாரா
ICC-ன் சிறந்த டெஸ்ட் அணி! ஒரு இந்திய பேட்டருக்கு கூட இடமில்லை! மோசமாகிறதா இந்திய டெஸ்ட் கிரிக்கெட்?

4.77 vs AUS (2021): உடல்முழுவதும் அடிவாங்கி தொடரை சமன்செய்த புஜாரா!

2018ல் சுற்றுப்பயணம் செய்து ஆஸ்திரேலியா மண்ணில் தொடரை வென்ற இந்திய அணி, 2021ம் ஆண்டு சுற்றுப்பயணத்தில் ஒரு கடினமான கட்டத்தை பெற்றிருந்தது. முதல் போட்டியில் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்து இந்தியா மோசமான தோல்வியை பெற ஒட்டுமொத்த ஆஸ்திரேலியா ஊடகம் மற்றும் முன்னாள் ஆஸ்திரேலியா வீரர்கள் அனைவரும் இந்திய அணி 4-0 என ஒயிட்வாஸ் ஆகப்போகிறது என்றும், இந்திய அணியை வைத்துக்கொண்டு எப்படி ஆஸ்திரேலியா வந்தீர்கள் என்றும் கடுமையான விமர்சனத்தை வைத்தது.

pujara
pujara

கேப்டன் விராட் கோலியும் குடும்பத்துடன் இருக்க இந்தியா திரும்ப மூத்தவீரர்கள் யாரும் இல்லாமல், ரஹானே தலைமையிலான இந்திய அணி மீதி தொடரை விளையாடியது. தொடர் 1-1 என சமநிலையில் இருந்த போது இந்தியா 3வது போட்டியில் களம்கண்டது. ஆஸ்திரேலியாவின் அசத்தலான பந்துவீச்சை சமாளிக்க முடியாத இந்திய இளம் வீரர்கள் 244 ரன்கள் மட்டுமே முதல் இன்னிங்ஸில் எடுத்தனர். இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா வெற்றிபெற 406 ரன்களை ஆஸ்திரேலியா நிர்ணயித்தது. போட்டியை சமன்செய்ய மூத்த வீரர்களான ரோகித் சர்மா மற்றும் சட்டீஸ்வர் புஜாரா மீது அழுத்தம் அதிகமாகியது.

Ashwin
Ashwin

இந்திய அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழக்க பொறுப்பை தனதாக்கிக்கொண்ட புஜாரா, ஒருமுறையில் சுவரை போல திடமாக நின்றார். அவருடைய விக்கெட்டை வீழ்த்த முடியாத ஆஸ்திரேலியா பவுலர்கள் அவர் மீதான தாக்குதலில் ஈடுபட்டனர். அவருடைய உடம்பு, முகம், கைகளில் தாக்கிய ஆஸ்திரேலியா பவுலர்கள் நிறைய அடிகொடுத்தனர். ஆனால் அத்தனை அடிகளையும் தாங்கிக்கொண்டு 205 பந்துகளில் 77 ரன்களை எடுத்த புஜாரா போட்டியை சமன்செய்வதற்கு முக்கிய காரணமாக அமைந்தார். இந்தப்போட்டியில் ஹனுமா விஹாரி மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வினின் பங்கும் அபாரமானதாக இருந்தது. இந்திய ஒரு கூட்டுமுயற்சியாக தொடரை உயிர்ப்புடன் வைத்திருந்தனர்.

புஜாரா
ஒரே நேரத்தில் 2 பிசிசிஐ விருதுகளை அள்ளிய ரவிச்சந்திரன் அஸ்வின்! என்னென்ன விருதுகள்?

5.56 vs AUS (2021): கப்பா மைதானத்தில் வரலாற்று வெற்றி!

2021 ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்கள் அடிவாங்கி தொடரை 1-1 என உயிர்ப்புடன் வைத்திருந்தனர். அப்போது விக்கெட் கீப்பிங்கில் இருந்த ஆஸ்திரேலியா கேப்டன் பெய்ன், நீங்கள் கப்பாவிற்கு வந்தால் எப்படியும் தோற்கத்தான் போகிறீர்கள் என நக்கலடித்தார். ஆனால் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் கப்பாவில் புதிய வரலாறை எழுதியது இந்திய அணி.

pujara
pujara

ஆஸ்திரேலியாவின் கோட்டை என அழைக்கப்படும் கப்பா மைதானத்தில் நடந்த தொடரின் வெற்றியை உறுதிசெய்யும் போட்டியில், இந்தியா வெற்றிபெற 329 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. பெரிய இலக்கை துரத்திய இந்திய அணியில் ரோகித் சர்மா 7 ரன்களில் அவுட்டாகி வெளியேற, இந்தியா மீது அழுத்தம் அதிகமானது. ஆனால் இளம் வீரர் சுப்மன் கில்லுடன் ஜோடி சேர்ந்த புஜாரா இந்தியாவை வெற்றியின் பாதைக்கு அழைத்துச்சென்றார். 211 பந்துகளை சந்தித்து 55 ரன்களை பதிவுசெய்த அவர், இந்திய அணியை 228 ரன்கள் வரை எடுத்துசென்று ரிஷப் பண்டின் கையில் ஒப்படைத்து வெளியேறினார்.

pujara
pujara

அவரின் முக்கியமான ஆட்டத்தின் உதவியாலும், ரிஷப் பண்டின் மேஜிக்காலும் இந்தியா கப்பாவில் ஒரு வரலாற்று சரித்தரத்தை எழுதியது. கப்பா டெஸ்ட் போட்டியில் 14 முறை தன்னுடைய கைமுட்டியில் அடிவாங்கினார் புஜாரா.

புஜாரா
‘நடுஇரவில் எழுப்பி கேட்டாலும் உங்களால் மறக்க முடியாத தருணம் எது?’ - உணர்ச்சிவசப்பட்ட ரவிசாஸ்திரி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com