“தோனி ஒருவர் தான் என்னை நல்ல பேட்ஸ்மேனாக மதித்தார்”! - உருக்கமாக பேசிய ஷிவம் துபே!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் கலக்கிய ஷிவம் துபே ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
dube - dhoni
dube - dhoniX

2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான ஷிவம் துபே, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 போட்டியில் தன்னுடைய முதல் அரைசதத்தை பதிவுசெய்து அசத்தினார். திருவனந்தபுரத்தில் நடந்த அந்த போட்டியில் 30 பந்துகளில் 3 பவுண்டரிகள் 4 சிக்சர்களை பறக்கவிட்ட அவர், அதிரடி பேட்டிங்கில் இந்திய அணிக்கு நீண்ட தூரம் பயணிப்பார் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. ஆனால் பேட்டிங் டெக்னிக்கில் அதிக வேரியேசன் இல்லை என்பதாலும், ஹார்ட் ஹிட்டிங் மட்டுமே வைத்திருந்ததாலும் இந்திய அணியில் இருந்து துபே ஓரங்கட்டப்பட்டார்.

இந்திய அணியில் இருந்து ஓரங்கப்பட்டாலும் தன்னுடைய திறமை மீது நம்பிக்கை வைத்த அந்த இளம் வயது துபே, தொடர்ந்து தன்னுடைய பேட்டிங்கில் வேரியேசனை எடுத்துவருவதற்கு கடுமையாக உழைத்தார். அவருடைய உழைப்பு உள்நாட்டு கிரிக்கெட் தொடரில் அவருக்கு நிறைய பாராட்டுகளையும், ரன்களையும் பெற்றுத்தந்தது. துபேவின் முன்னேற்றத்தை கண்ட மகேந்திர சிங் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அவரை எடுத்து தொடர்ச்சியாக வாய்ப்பை வழங்கினார்.

dube
dube

தன்னை போலவே ஹார்டு ஹிட்டிங் டைப் பேட்ஸ்மேன் என்பதால் தோனிக்கு கவனம் ஈர்த்ததா? இல்லை அவரிடமிருந்த நம்பிக்கையை அடையாளம் கண்டாரா என்பது தெரியவில்லை, சிஎஸ்கேவில் ஒரு அபாரமான ஆட்டத்தை விளையாடிய துபே பல போட்டிகளை வென்றெடுத்தார். சிஎஸ்கேவில் இடம்பெற்று சிறப்பாக விளையாடிய அவருக்கு, தற்போது இந்திய அணியில் மீண்டும் இடம் கிடைத்துள்ளது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட ஷிவம் துபே, முதல் போட்டியிலேயே ஆட்டநாயகனாக தன்னை நிலைநிறுத்தியுள்ளார்.

dube - dhoni
மொயின் அலி தேர்ந்தெடுத்த டாப் 5 இந்திய வீரர்கள்! 3வது இடத்தில் சச்சின்! முதலிடத்தில் யார் தெரியுமா?

தோனி மட்டும் தான் என்னை நல்ல பேட்ஸ்மேனாக மதித்தார்!

போட்டிக்கு பிறகு ஷிவம் துபேவின் அட்டகாசமான பேட்டிங் மற்றும் பவுலிங்கை பாராட்டிய சுரேஷ் ரெய்னா, “இன்று உங்களுடைய பவுலிங்கை எம்எஸ் பார்த்தால், சிஎஸ்கேவில் உங்களுக்கு அனைத்து போட்டியிலும் 3 ஓவர்கள் உறுதியாகிவிடும்” என்று பாராட்டினார். அதற்கு சிரித்தபடியே பதிலளித்த ஷிவம் துபே, “தோனி பாய் சுரேஷ் ரெய்னாவின் வார்த்தையை கவனியுங்கள்” என்று கூறினார்.

dube - raina
dube - raina

மேலும் தன்னுடைய பேட்டிங் மாற்றத்திற்கு தோனியின் பங்களிப்பு குறித்து பேசிய துபே, “தோனி பாய் மட்டும் தான் என்னை எப்போதும் ஒரு நல்ல பேட்ஸ்மேனாக மதிக்கிறார். அதுதான் என்னுடைய தன்னம்பிக்கையை அதிகமாக்கியது. நான் மஹி பாயுடன் தொடர்ந்து உரையாடிக்கொண்டே இருக்க விரும்புகிறேன். அவர் ஒரு பெரிய வீரர் மற்றும் ஒரு ஜாம்பவான். ஒவ்வொரு முறையும் அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டே இருக்கிறேன். வெவ்வேறு சூழ்நிலைகளில் எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என்று என்னிடம் எப்போதும் சொல்லிக்கொண்டே இருப்பார்” என்று கூறியுள்ளார்.

dhoni - dube
dhoni - dube

மேலும் தனக்கு இரண்டு முக்கிய குறிப்புகளை எம்எஸ் தோனி கொடுத்துள்ளதாக தெரிவித்த துபே, “தோனி எனக்கு இரண்டு முக்கிய குறிப்புகளை வழங்கினார், அது எனக்கு சரியாக வேலை செய்தது. அவர் என்னை பலமுறை ஒரு சிறந்த வீரராக மதிப்பிட்டுள்ளார். மஹி பாய் என்னை ஒரு சிறந்த வீரராக மதிப்பிட்டால், நான் நிச்சயமாக நன்றாக விளையாடுவேன். அவர் அப்படி கூறும்போதெல்லாம் என் நம்பிக்கை மிக அதிகமாக இருந்தது" என்று துபே உருக்கமாக பேசினார்.

dube - dhoni
”பவுலர்களுக்கு அதிக வலி கொடுத்தவர்” - உடைக்கவே முடியாத 6 உலக சாதனைகளை வைத்திருக்கும் ராகுல் டிராவிட்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com