டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் சதமடித்த ஜெகதீசன்
டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் சதமடித்த ஜெகதீசன்x

2026 டி20 WC பயிற்சி ஆட்டம்| 49 பந்தில் சதமடித்த ஜெகதீசன்.. 238 ரன்கள் குவித்த இந்தியா!

2026 டி20 உலகக்கோப்பைக்கான முதல் பயிற்சி ஆட்டத்தில் அமெரிக்காவை எதிர்கொண்டு விளையாடிய இந்திய ஏ அணி 238 ரன்கள் குவித்தது.
Published on
Summary

2026 டி20 உலகக் கோப்பைக்கான பயிற்சி ஆட்டத்தில் இந்திய ஏ அணி அமெரிக்காவை எதிர்கொண்டு 238 ரன்கள் குவித்தது. ஜெகதீசன் 49 பந்தில் 100 ரன்கள் அடித்து அசத்தினார். திலக்வர்மா மற்றும் கேப்டன் ஆயுஸ் பதோனி சிறப்பாக விளையாடி அசத்தினர்.

2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில், பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் மார்ச் 8 ஆம் தேதி வரை நடக்கவிருக்கிறது. இந்தத் தொடரில், இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உட்பட 20 அணிகள் பங்கேற்கவிருக்கின்றன.

2026 டி20 உலகக்கோப்பை
2026 டி20 உலகக்கோப்பை

இந்தசூழலில் போட்டி தொடங்க இன்னும் 4 நாட்களே இருக்கும் நிலையில், இன்று முதல் பயிற்சி ஆட்டங்களில் அனைத்து அணிகளும் பங்கேற்கவிருக்கின்றன.

அந்தவகையில் முதல் பயிற்சி போட்டியில் அமெரிக்காவை எதிர்கொண்டு விளையாடியது இந்திய ஏ அணி.

டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் சதமடித்த ஜெகதீசன்
SL vs ENG| சொந்த மண்ணில் மரண அடி வாங்கிய இலங்கை.. ODI, T20 தொடர் இரண்டையும் இழந்து சோகம்!

49 பந்தில் சதமடித்த ஜெகதீசன்..

2026 டி20 உலகக்கோப்பைக்கான முதல் டி20 போட்டியில் ஆயுஸ் பதோனி தலைமையிலான இந்திய ஏ அணி அமெரிக்காவை எதிர்கொண்டது. முதலில் விளையாடிய இந்திய அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய தமிழக வீரர் நாராயண் ஜெகதீசன் 49 பந்தில் 11 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் சதமடித்து அசத்தினார்.

காயத்திலிருந்து மீண்டுவந்த திலக்வர்மா 3 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 24 பந்தில் 38 ரன்கள் அடித்து வெளியேறினார். தொடர்ந்து வந்த கேப்டன் ஆயுஸ் பதோனி 26 பந்தில் 6 பவுண்டரிகள் 4 சிக்சர்களை பறக்கவிட்டு 60 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் 238 ரன்களை குவித்தது இந்தியா ஏ அணி.

டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் சதமடித்த ஜெகதீசன்
PAK vs AUS| 96 ரன்னுக்கு சுருண்ட ஆஸ்திரேலியா.. 3-0 என ஒயிட்வாஷ் செய்த பாகிஸ்தான்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com