இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் டி20 தொடரை இழந்த இலங்கை
இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் டி20 தொடரை இழந்த இலங்கைcricinfo

SL vs ENG| சொந்த மண்ணில் மரண அடி வாங்கிய இலங்கை.. ODI, T20 தொடர் இரண்டையும் இழந்து சோகம்!

இங்கிலாந்துக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 தொடர் இரண்டையும் சொந்த மண்ணில் இழந்தது இலங்கை அணி..
Published on
Summary

இங்கிலாந்து அணி இலங்கையில் நடந்த ஒருநாள் மற்றும் டி20 தொடரில் வெற்றி பெற்றது. 2026 டி20 உலகக்கோப்பைக்கு முன்னதாக, ஹாரி ப்ரூக் தலைமையிலான இங்கிலாந்து அணி, சொந்த மண்ணில் இலங்கை அணியை தோற்கடித்து, தொடரை 2-0 என கைப்பற்றியது.

2026 டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் இங்கிலாந்து அணி, 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது.

முதலில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என வென்ற இங்கிலாந்து அணி, டி20 தொடரிலும் இலங்கை அணியை அவர்களின் சொந்த மண்ணில் வைத்து மரண அடி கொடுத்துள்ளது..

இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் டி20 தொடரை இழந்த இலங்கை
டி20 கிரிக்கெட் வரலாறு.. விராட் கோலி சாதனையை முறியடித்த பாபர் அசாம்!

டி20 தொடரை இழந்த இலங்கை..

2026 டி20 உலகக்கோப்பை தொடங்க இன்னும் 4 நாட்களே மீதமுள்ள நிலையில், சொந்த மண்ணில் நடைபெற்ற டி20 தொடரை இழந்துள்ளது இலங்கை அணி.

eng vs sl
eng vs sl

டி20 உலகக்கோப்பை இலங்கை மற்றும் இந்தியாவில் நடைபெறவிருக்கும் நிலையில், கிடைத்த வாய்ப்பை சரியாக் பயன்படுத்திக்கொண்ட ஹாரி ப்ரூக் தலைமையிலான இங்கிலாந்து அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

இலங்கைக்கு எதிரான முதல் போட்டியில் 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி, நேற்று இரண்டாவது போட்டியிலும் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

இங்கிலாந்து - இலங்கை
இங்கிலாந்து - இலங்கை
இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் டி20 தொடரை இழந்த இலங்கை
’நீ ஆடுனது போதும், வெளியே வா..’ BBL-ல் பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வானுக்கு நேர்ந்த அவமானம்!

பல்லேகலே மைதானத்தில் நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை 189 ரன்கள் அடித்தது. மழை குறுக்கிட்டதால் இங்கிலாந்துக்கான இன்னிங்ஸ் 17 ஓவர்கள் கொண்டதாக குறைக்கப்பட்டது. இந்த சூழலில் இரண்டாவதாக பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, 16.4 ஓவரில் 173 ரன்கள் அடித்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என இங்கிலாந்து தொடரை கைப்பற்றியுள்ளது.

இங்கிலாந்து - இலங்கை
இங்கிலாந்து - இலங்கை

இரண்டு அணிகளுக்கும் இடையேயான 3வது டி20 போட்டி நாளை நடக்கவிருக்கிறது. டி20 உலகக்கோப்பைக்கு முன்னதாக இங்கிலாந்து அணிக்கு இலங்கை தொடர் நம்பிக்கையை அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் இலங்கைக்கு பின்னடைவை கொடுத்துள்ளது.

இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் டி20 தொடரை இழந்த இலங்கை
PAK vs AUS| 96 ரன்னுக்கு சுருண்ட ஆஸ்திரேலியா.. 3-0 என ஒயிட்வாஷ் செய்த பாகிஸ்தான்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com