\
பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா
பாகிஸ்தான் - ஆஸ்திரேலியாcricinfo

PAK vs AUS| 96 ரன்னுக்கு சுருண்ட ஆஸ்திரேலியா.. 3-0 என ஒயிட்வாஷ் செய்த பாகிஸ்தான்!

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் 3-0 என ஒயிட்வாஷ் ஆனது ஆஸ்திரேலியா அணி.
Published on
Summary

பாகிஸ்தானுக்கு எதிராக 3-0 என ஒயிட்வாஷ் செய்யப்பட்ட ஆஸ்திரேலியா, 3வது டி20 போட்டியில் 96 ரன்னுக்கு சுருண்டது. பாகிஸ்தான் 207 ரன்கள் குவித்த நிலையில், முகமது நவாஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலியாவை 111 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

2026 டி20 உலகக்கோப்பைக்கு முன்னதாக பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி, 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது.

முதல் போட்டியில் 22 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது போட்டியில் 108 ரன்களுக்கு சுருண்டு படுதோல்வியை சந்தித்திருந்தது ஆஸ்திரேலியா.

இந்தசூழலில் 2-0 என பாகிஸ்தான் தொடரை கைப்பற்றிய நிலையில், 3வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று நடைபெற்றது.

96 ரன்னுக்கு சுருண்ட ஆஸ்திரேலியா..

லாகூரில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, சையிம் ஆயுப்பின் 56 ரன்கள், பாபர் அசாமின் 50 ரன்கள் ஆட்டத்தால் 20 ஓவரில் 207 ரன்களை குவித்தது.

208 ரன்கள் அடித்தால் வெற்றி என களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 16.5 ஓவரில் வெறும் 96 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 111 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. டி20 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவின் மிக மோசமான தோல்வி இதுவாக பதிவுசெய்யப்பட்டது. இதற்கு முன்னர் அவர்கள் அதிகபட்சமாக இங்கிலாந்துக்கு எதிராக 100 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்திருந்தனர்.

சிறப்பாக பந்துவீசிய இடதுகை சுழற்பந்துவீச்சாளர் முகமது நவாஸ் 4 ஓவரில் வெறும் 18 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com