t20 world cup
t20 world cupPt web

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா! மீண்டும் கோப்பையை வெல்லுமா இந்தியா?

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர், இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்கவுள்ள நிலையில், இந்திய அணி மீண்டும் கோப்பையை வெல்லுமா?, அணியின் பலம் எப்படி இருக்கிறது? விரிவாக பார்க்கலாம்.
Published on

2026 டி20 உலகக்கோப்பை தொடரானது இன்று (பிப்ரவரி 7) தொடங்கி மார்ச் 8ஆம் தேதிவரை நடக்கவிருக்கிறது. 20 அணிகள் ஒரு கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்த உள்ள நிலையில், நடப்பு சாம்பியனாக இந்திய அணி களம்காண்கிறது. இதுவரை எந்த ஒரு அணியும் தொடர்ந்து இரண்டு முறை டி20 உலகக்கோப்பையை வென்றது இல்லை.. சொந்த மண்ணிலேயே உலகக்கோப்பையை தன்வசப்படுத்தியதும் இல்லை. இந்த இரண்டு வரலாற்றையும் மாற்றும் வாய்ப்பு இந்திய அணியின் முன் மிகப் பிரகாசமாக உள்ளது. கடைசியாக 2023 ஆகஸ்ட் மாதம் தான் ஒரு டி20 தொடரில் இந்தியா தோல்வியடைந்தது. இதேபோன்று, 6.5 என்ற வெற்றி-தோல்வி விகிதத்தை இந்திய அணி கொண்டுள்ளது.

டி20 உலகக்கோப்பை
டி20 உலகக்கோப்பைx

அடுத்த இடத்தில் உள்ள ஆஸ்திரேலியா அணியின் வெற்றி- தோல்வி விகிதமோ 2.153ஆகத்தான் இருக்கிறது. அந்த அளவுக்கு ஆதிக்கம் நிறைந்த அணியாக இந்தியா உள்ளது. 2023 முதல் ஒவ்வொரு போட்டியிலும் சராசரியாக 10 பந்துகளில் ஒரு சிக்சர் என அதிக சிக்சர் அடிக்கும் அணியின் பட்டியலில் முதல் இடத்தில் இந்தியா இருக்கிறது. 2024 டி20 உலகக்கோப்பையை விளையாடிய இந்திய அணியுடன் ஒப்பிடுகையில், தற்போது அபிஷேக் சர்மா மற்றும் திலக் வர்மாவின் அதிரடி, வருண் சக்கரவர்த்தியின் மர்ம சுழல் என வலுப்பெற்றுள்ளது இந்திய அணி.

t20 world cup
T20 WC| ஹர்ஷித் ராணா அதிகாரப்பூர்வமாக விலகல்.. அணியில் இணையும் முகமது சிராஜ்!

தனது முதல் உலகக்கோப்பையில் அபிஷேக் சர்மா மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் அதிரடி பேட்ஸ்மேனாக களமிறங்குகிறார். அபிஷேக்கின் பேட்டிங்கை போன்று, பந்துவீச்சில் வருண் சக்கரவர்த்தி சிறப்பான வீரராக திகழ்கிறார். ஒவ்வொரு 11.2 பந்துகளுக்கும் ஒரு விக்கெட், ஒரு போட்டிக்கு சராசரியாக இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார் வருண். இப்படி பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் ஒவ்வொரு வீரருக்கும் என்ன வேலை என தெளிவாக முடிவெடுத்து களமிறங்கும் இந்திய அணி, நிச்சயம் கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் உள்ளது.

t20 world cup
யு19 உலகக்கோப்பை| இங்கிலாந்தை வீழ்த்தி 6வது கோப்பையை வென்றது இந்தியா!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com