2026 யு19 உலகக்கோப்பை வென்றது இந்திய அணி
2026 யு19 உலகக்கோப்பை வென்றது இந்திய அணிweb

யு19 உலகக்கோப்பை| இங்கிலாந்தை வீழ்த்தி 6வது கோப்பையை வென்றது இந்தியா!

2026 யு19 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி 6வது முறையாக உலகக்கோப்பை வென்றது இந்திய அணி.
Published on
Summary

2026 யு19 உலகக்கோப்பை இறுதியில், இந்தியா இங்கிலாந்தை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 6வது முறையாக கோப்பையை வென்றது. வைபவ் சூர்யவன்ஷி 175 ரன்கள் அடித்து இந்திய அணிக்கு வலுவான தொடக்கத்தை வழங்கினார். இங்கிலாந்து அணியின் போராட்டம் பலனளிக்காமல், இந்திய பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டனர்.

2026 யு19 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி இங்கிலாந்து மற்றும் இந்திய யு19 அணிகளுக்கு இடையே ஜிம்பாப்வேவில் உள்ள ஹராரே மைதானத்தில் நடைபெற்றது.

2026 யு19 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 411 ரன்கள் குவித்த இந்தியா
2026 யு19 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 411 ரன்கள் குவித்த இந்தியாcricinfo

பரபரப்பாக தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய வைபவ் சூர்யவன்ஷி, வெறும் 80 பந்தில் 15 சிக்சர்கள் 15 பவுண்டரிகள் என வானவேடிக்கை காட்டி 175 ரன்கள் விளாசினார். தொடர்ந்து வந்த இந்திய வீரர்களும் சிறப்பாக விளையாடி அதிரடி காட்ட 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 411 ரன்களை குவித்தது இந்திய அணி.

2026 யு19 உலகக்கோப்பை வென்றது இந்திய அணி
“எங்கு விளையாடினாலும்.. இந்த பையன் மிரட்டுகிறார்..” - சூர்யவன்ஷியை பார்த்து மிரண்ட ஆஸ்திரேலியா வீரர்

6வது கோப்பை வென்று சாதனை..

412 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு முதலிரண்டு ஓவர்களையும் மெய்டனாக வீசிய இந்திய பவுலர்கள் மிரட்டினர். மேலும் 19 ரன்னுக்கே முதல் விக்கெட்டை இழந்த இங்கிலாந்து தடுமாறியது. ஆனால் 2வது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த பென் மேயஸ் மற்றும் பென் டாக்கின்ஸ் இருவரும் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.

இந்திய யு19 அணி
இந்திய யு19 அணி

அழுத்தம் அதிகமான போட்டியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணி போராடியது. ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்று அதிரடியாக விளையாடிய காலேப் பால்கனர் 63 பந்தில் 8 பவுண்டரிகள் 6 சிக்சர்களுடன் சதமடித்து மிரட்டினார்.

என்னதான் பால்கனர் கடைசிவரை போராடினாலும் இங்கிலாந்துக்கு வெற்றியை தேடித்தரமுடியவில்லை. 100 ரன்கள் வித்தியாசத்தில் இறுதிப்போட்டியை வென்ற இந்திய அணி 6வது முறையாக கோப்பை வென்று அசத்தியது.

2026 யு19 உலகக்கோப்பை வென்றது இந்திய அணி
வயது 14.. சிக்சர்கள் 100! அதிவேக சதம், அதிவேக 150.. யார் இந்த சூர்யவன்ஷி..?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com