ஆஸிக்கு எதிரான டி20 தொடரை 2-1 என வென்றது இந்தியா.. தொடர் நாயகன் அபிஷேக் சர்மா!
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 தொடரில் இந்திய அணி 2-1 என வெற்றி பெற்றது. சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி சிறப்பாக விளையாடி, அபிஷேக் சர்மா தொடர் நாயகனாக தேர்வானார். 2026 டி20 உலகக்கோப்பைக்கு முன்னதாக இந்த வெற்றி இந்திய அணிக்கு உற்சாகம் அளிக்கிறது.
ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது.
முதலில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-2 என தோற்றது சுப்மன் கில் தலைமையிலான இந்தியா..
இந்நிலையில் ஒருநாள் தொடரை இழந்தாலும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி..
2-1 என தொடரை வென்றது இந்தியா..
காபா மைதானத்தில் இன்று தொடங்கிய 5வது மற்றும் கடைசி டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 4.5 ஓவரில் 52/0 ரன்கள் அடித்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது. பின்னர் நிலைமை சரியாகாத காரணத்தினால் போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது..
இதன்மூலம் ஆஸ்திரேலியா மண்ணில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என வென்று சாதனை படைத்துள்ளது சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி.. தொடர் முழுவதும் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி ஒரு அரைசதத்துடன் 163 ரன்கள் அடித்த அபிஷேக் சர்மா தொடர் நாயகன் விருதை வென்றார்..
2026 டி20 உலகக்கோப்பைக்கு முன்னதாக ஆஸ்திரேலியா போன்ற ஒரு அணிக்கு எதிராக தொடரை வெல்லுவது இந்திய அணிக்குள் நேர்மறையான விசயங்களை கொண்டுசேர்க்கும்.. 2026 டி20 உலகக்கோப்பையை வெல்லக்கூடிய இரண்டு அணிகளாக ஆஸ்திரேலியா, இந்தியா எதிர்ப்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது..

