பாகிஸ்தான் உடன் கைக்குலுக்காத தினேஷ் கார்த்திக் தலைமையிலான இந்தியா
பாகிஸ்தான் உடன் கைக்குலுக்காத தினேஷ் கார்த்திக் தலைமையிலான இந்தியாx

NO HandShake | பாகிஸ்தானிடம் கைகுலுக்காத தினேஷ் கார்த்திக் தலைமையிலான இந்தியா!

ஹாங்காங் சிக்ஸஸ் தொடரில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தான் அணி வீரர்களுடன் கைக்குலுக்குவதை தவிர்த்ததாக தகவல் வெளியாகியுள்ளது..
Published on
Summary

ஹாங்காங் சிக்ஸஸ் தொடரில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொண்டு விளையாடியது. இந்தியா 6 ஓவரில் 86 ரன்கள் குவித்தது. மழையால் பாதிக்கப்பட்ட போட்டியில் DLS முறைப்படி இந்தியா வெற்றி பெற்றது. பாகிஸ்தானுடன் கைக்குலுக்காத இந்திய அணியின் நிலைப்பாடு தொடர்கிறது.

ஹாங்காங் சிக்ஸஸ் தொடர் என்பது 11 வீரர்களுக்கு பதிலாக 6 வீரர்கள் கொண்ட அணிகள், 6 ஓவர்கள் கொண்ட போட்டியில் விளையாடும் போட்டியாகும். 1993-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்தொடரில் இந்திய அணி 2005-ம் ஆண்டு கோப்பை வென்றது.

கடந்த 2024 ஹாங்காங் சிக்ஸஸ் தொடரில் உத்தப்பா தலைமையில் களமிறங்கிய இந்திய அணியில், கேதார் ஜாதவ், ஸ்டூவர்ட் பின்னி, மனோஜ் திவாரி, ஷபாஸ் நதீம் மற்றும் பரத் சிப்லி முதலிய வீரர்கள் பங்கேற்றனர். பாகிஸ்தான் மற்றும் யுஏஇ அணிகள் அடங்கிய குழுவில் இடம்பெற்ற இந்திய அணி, இரண்டு லீக் போட்டியிலும் தோற்று தொடரிலிருந்து வெளியேறியது. இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை தோற்கடித்த இலங்கை அணி கோப்பை வென்று அசத்தியது.

இந்நிலையில் 2025-ம் ஆண்டு ஹாங்காங் சிக்ஸஸ் தொடர் இன்று நவம்பர் 7-ம் தேதி தொடங்கி நவம்பர் 9-ம் தேதிவரை டின் குவாங் சாலை பொழுதுபோக்கு மைதானத்தில் நடைபெறுகிறது.. இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டனாக தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார்..

பாகிஸ்தான் உடன் கைக்குலுக்காத தினேஷ் கார்த்திக் தலைமையிலான இந்தியா
ஜடேஜாவை வெளியேற்றும் CSK..? சாம்சனை கொண்டுவர திட்டம்! வெளியான தகவல்!

பாகிஸ்தானிடம் கைக்குலுக்காத இந்தியஅணி..

இன்று தொடங்கிய ஹாங்காங் சிக்ஸஸ் தொடரில் அப்பாஸ் அப்ரிடி தலைமையிலான பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டு விளையாடியது தினேஷ் கார்த்திக் தலைமையிலான இந்திய அணி.. பரத் சிப்லி (விக்கெட் கீப்பர்), ராபின் உத்தப்பா, தினேஷ் கார்த்திக் (கேப்டன்), ஸ்டூவர்ட் பின்னி, அபிமன்யு மிதுன் மற்றும் ஷாபாஸ் நதீம் முதலிய 6 வீரர்கள் இந்திய அணியில் பங்கேற்றுள்ளனர்..

பரபரப்பாக தொடங்கப்பட்ட போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி உத்தப்பா மற்றும் தினேஷ் கார்த்திக் அதிரடியால் 6 ஓவரில் 86 ரன்களை குவித்தது இந்தியா.. உத்தப்பா 11 பந்தில் 3 சிக்சர்கள் 2 பவுண்டரிகள் உட்பட 254 ஸ்டிரைக்ரேட்டில் 28 ரன்களும், தினேஷ் கார்த்திக் 6 பந்தில் 2 பவுண்டரிகள் 1 சிக்சர் உட்பட 284 ஸ்டிரைக்ரேட்டில் 17 ரன்களும் அடித்து மிரட்டினர்..

87 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடிய பாகிஸ்தான் 3 ஓவரில் 41 ரன்கள் அடிக்க மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. பின்னர் DLS முறைப்படி பாகிஸ்தான் அணி 2 ரன்கள் பின்தங்கியிருந்ததால் இந்தியா வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது..

பாகிஸ்தான் உடன் கைக்குலுக்காத தினேஷ் கார்த்திக் தலைமையிலான இந்தியா
’தோல்வி இன்னும் என்னை நோகடிக்கிறது..’ இந்தியா உடனான போட்டி குறித்து அலிசா ஹீலி வேதனை!

பஹல்காம் தாக்குதல், ஆபரேசன் சிந்தூர் காரணமாக பாகிஸ்தான் அணியுடன் இந்திய அணி தொடர்ந்து கைக்குலுக்குவதை மறுத்துவரும் நிலையில், இந்தபோட்டியிலும் தினேஷ் கார்த்திக் தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தான் வீரர்களுடன் கைக்குலுக்கவில்லை என ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்திவெளியிட்டுள்ளது. அவ்வறிக்கையின் படி கைக்குலுக்குவது குறித்து இந்திய அணி தரப்பில் “கைகுலுக்கலுக்கு எந்த வாய்ப்பும் இல்லை, நாங்கள் வழக்கமாக இருப்பதைப் பின்பற்றுவோம்” என்று கூறியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..

பாகிஸ்தான் உடன் கைக்குலுக்காத தினேஷ் கார்த்திக் தலைமையிலான இந்தியா
’கண்ணீர் வந்தது..’ ஜெய் ஷா தலையீட்டுக்கு பின் பிரதிகாவிற்கு உலகக்கோப்பை பதக்கம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com