மலிங்கா வரிசையில் இணைந்த நுவன் துஷாரா.. வங்கதேசத்துக்கு எதிராக டி20 ஹாட்-டிரிக் வீழ்த்தி அசத்தல்!

இலங்கை டி20 கிரிக்கெட் வரலாற்றில் லசித் மலிங்கா வரிசையில் ஹாட் டிரிக் விக்கெட் வீழ்த்திய 4வது இலங்கை பவுலராக மாறியுள்ளார் நுவன் துஷாரா.
நுவன் துஷாரா
நுவன் துஷாராweb

வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் இலங்கை அணி 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்றுள்ளது. முதலில் நடைபெற்றுவரும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், முதல் போட்டியில் இலங்கையும் இரண்டாவது போட்டியில் வங்கதேசமும் வெற்றிபெற்றன.

பொதுவாகவே இலங்கை மற்றும் வங்கதேசம் மோதுகிறது என்றால் நாகினி டான்ஸ் மற்றும் வீரர்கள் மோதலுக்கு பஞ்சம் இருக்காது. அந்தவகையில் இரண்டாவது டி20 போட்டியில் வங்கதேச வீரர் பேட்டிங்கின் போது களநடுவர் அவுட் கொடுத்ததற்கு மூன்றாவது நடுவர் நாட் அவுட் கொடுக்க, போட்டியில் விளையாடமாட்டோம் என இலங்கை வீரர்கள் சொன்னதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. நீண்டநேர வாக்குவாதத்துக்கு பிறகு போட்டி நடந்து முடிந்தது.

இந்நிலையில் இரண்டு அணிகளுக்கும் இடையேயான 3வது டி20 போட்டி இன்று நடந்தது. முதலில் விளையாடிய இலங்கை அணி குசால் மெண்டிஸின் அதிரடியான ஆட்டத்தால் 174 ரன்கள் குவித்தது. சிறப்பாக விளையாடிய மெண்டிஸ் 55 பந்துகளில் 6 சிக்சர்கள், 6 பவுண்டரிகள் என விளாசி 86 ரன்கள் குவித்தார்.

நுவன் துஷாரா
“அவர்களும் மனிதர்கள்தான்; ரோபோக்கள் அல்ல”- இங்கிலாந்து அணிக்கு முன்னாள் வீரர் ஆதரவு!

ஹாட் டிரிக் விக்கெட் வீழ்த்திய நுவன் துஷாரா!

175 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இரண்டாவது பேட்டிங் செய்த இலங்கை அணி, நுவன் துஷாராவின் அபாரமான பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் திணறியது. 4வது ஓவரில் விக்கெட் வேட்டை நடத்திய துஷாரா, கேப்டன் ஷாண்டோ, தவ்ஹித் மற்றும் சௌமியா சர்கார் என மூன்றபேரையும் அடுத்தடுத்த 3 பந்துகளில் ஸ்டம்புகளை பறக்கவிட்டு வெளியேற்றினார்.

ஒரே ஓவரில் ஹாட்டிரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய நுவன், அடுத்துவந்த முஹமதுல்லாவையும் டக் அவுட்டில் வெளியேற்ற 5 விக்கெட்டுகளை அள்ளி அசத்தினார். துஷாராவின் அபாரமான பந்துவீச்சில் சுருண்ட வங்கதேச அணி 146 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. முடிவில் 28 ரன்கள் வித்தியாசத்தில் 3வது டி20 போட்டியை வென்ற இலங்கை அணி 2-1 என டி20 தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது. நல்ல தொடக்கம் கிடைத்தும் சொந்த மண்ணில் தொடரை இழந்துள்ளது வங்கதேச அணி.

நுவன் துஷாரா
”ரன்னு கம்மியா இருக்கு; பேச்சு மட்டும் அதிகமா இருக்கே”! - பேர்ஸ்டோவை ஸ்லெட்ஜ் செய்த சர்பராஸ்-கில்!

டி20-ல் ஹாட் டிரிக் வீழ்த்திய 4வது இலங்கை பவுலர்!

வங்கதேசத்துக்கு எதிராக ஹாட்-டிரிக் விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கும் நுவன் துஷாரா, திசாரா பெரேரா, லசித் மலிங்கா மற்றும் தனஞ்ஜெயா முதலிய 3 பவுலர்களுக்கு பிறகு டி20 கிரிக்கெட்டில் ஹாட்-டிரிக் கைப்பற்றிய 4வது இலங்கை பவுலராக மாறியுள்ளார். இந்த பட்டியலில் 2 முறை ஹாட்-டிரிக் விக்கெட்டுகளை கைப்பற்றிய ஒரே இலங்கை பவுலராக லசித் மலிங்கா நீடிக்கிறார்.

sachin-malinga final
sachin-malinga final

டி20-ல் ஹாட்-டிரிக் விக்கெட் வீழ்த்திய இலங்கை பவுலர்கள்:

1. திசாரா பெரேரா - VS இந்தியா (2015) - ஹர்திக் பாண்டியா, சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங்

2. லசித் மலிங்கா - VS வங்கதேசம் (2016) - முஷ்ஃபிகூர் ரஹிம், மொர்டஷா, மெஹிதி ஹாசன்

3. லசித் மலிங்கா - VS நியூசிலாந்து (2019) - காலின் முன்ரோ,ஹெச்டி ரூதர்ஃபோர்ட், கிராண்ட்ஹோம்

4. அகிலா தனஞ்ஜெயா - VS வெஸ்ட் இண்டீஸ் (2021) - லெவிஸ், கிறிஸ் கெய்ல், நிக்கோலஸ் பூரன்

5. நுவன் துஷாரா - VS வங்கதேசம் (2024) - ஷாண்டோ, தவ்ஹித், சௌமியா சர்கார்

நுவன் துஷாரா
முத்தையா முரளிதரனின் உலக சாதனையை தகர்த்த அஸ்வின்! 100வது டெஸ்ட் போட்டியில் 3 இமாலய சாதனைகள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com