“அவர்களும் மனிதர்கள்தான்; ரோபோக்கள் அல்ல”- இங்கிலாந்து அணிக்கு முன்னாள் வீரர் ஆதரவு!

இங்கிலாந்து அணியின் மோசமான செயல்பாடுகளுக்கு நான் ஆதரவு தெரிவிக்கவில்லை, அதேநேரம் அவர்களும் மனிதர்கள்தான் ரோபோக்கள் அல்ல என்று முன்னாள் இங்கிலாந்து வீரர் ஆதரவு தெரிவித்துள்ளார்.
பென் ஸ்டோக்ஸ்
பென் ஸ்டோக்ஸ்X

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதற்கு முன்பு 2012-ம் ஆண்டு இந்தியாவிற்கு வந்த இங்கிலாந்து அணி, இந்திய அணியை அதன் சொந்த மண்ணிலேயே வைத்து வென்று மகுடம் சூடியது. பலம் வாய்ந்த ரிக்கிபாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியால் கூட இந்தியாவை சொந்த மண்ணில் வீழ்த்தமுடியாதபோது, அப்போதைய இங்கிலாந்து அணி ஒரு மிகப்பெரிய சவாலில் தேர்ச்சி பெற்று தொடர் வெற்றியுடன் இங்கிலாந்து திரும்பியது.

இந்நிலையில் பாஸ்பால் அட்டாக்குடன் தற்போது இந்தியாவிற்கு வந்திருக்கும் இங்கிலாந்து அணியும், 2012-ம் ஆண்டுக்கு பின் 12 வருடங்கள் கழித்து இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றும் என்று சொல்லப்பட்டது. அதற்கு தகுந்தார்போல் விராட் கோலியும் தொடரிலிருந்து விலக, இங்கிலாந்து அணி முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஒரு வரலாற்று வெற்றியை பதிவுசெய்து அசத்தியது.

ind vs eng
ind vs eng

அந்த வெற்றிக்கு பிறகு இந்தியாவை மீண்டும் சொந்த மண்ணில் வீழ்த்த இதுதான் சிறந்த தருணம் என பல முன்னாள் இங்கிலாந்து வீரர்கள் கருத்து தெரிவித்தனர். ஆனால் முதல் டெஸ்ட் போட்டியில் ஒரு மிகப்பெரிய தோல்வியிலிருந்து மீண்ட இந்திய அணி, இளம் வீரர்களான சர்பராஸ் கான் மற்றும் துருவ் ஜுரேல் உதவியால் அடுத்தடுத்து 3 டெஸ்ட் போட்டிகளில் வென்று 3-1 என தொடரை கைப்பற்றியது.

ind vs eng
ind vs eng

இந்நிலையில் தற்போது நடைபெற்றுவரும் கடைசி மற்றும் 5வது டெஸ்ட் போட்டியிலும் 255 ரன்கள் முன்னிலை பெற்றிருக்கும் இந்திய அணி வெற்றியின் பாதையில் பயணித்துவருகிறது. பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் இருவரும் இணைந்து இங்கிலாந்தை வழிநடத்திய பிறகு, முதல்முறையாக டெஸ்ட் தொடரை இழந்துள்ளது இங்கிலாந்து அணி. இத்தகைய சூழலில்தான் தோல்விமுகத்தோடு அழுத்தத்தில் இருக்கும் இங்கிலாந்து அணிக்கு ஆதரவு குரல் கொடுத்துள்ளார் முன்னாள் இங்கிலாந்து வீரர் அலஸ்டைர் குக்.

பென் ஸ்டோக்ஸ்
வரலாற்றில் இரண்டே பேர்..30 வயதுக்கு மேல் இந்தியாவிற்காக அதிக சதங்கள்! குரு சாதனையை சமன்செய்த ரோகித்!

அவர்களும் மனிதர்கள்தான் ரோபோக்கள் அல்ல!

இங்கிலாந்து அணியின் ஒவ்வொரு தோல்வியின் போதும் இங்கிலாந்து ஊடகங்கள் பல்வேறு மோசமான தாக்குதல்களை நிகழ்த்தி வருகின்றன. அதேபோல் வீரர்கள் மீது பல்வேறு விமர்சனங்களும் வைக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய சூழலில்தான் இங்கிலாந்து அணிக்கு ஆதரவான கருத்துகளை பதிவுசெய்துள்ளார் முன்னாள் வீரர் அலஸ்டைர் குக்.

பென் ஸ்டோக்ஸ்
பென் ஸ்டோக்ஸ்

இங்கிலாந்தின் தோல்வி குறித்து பேசியிருக்கும் அலைஸ்டர் குக், “நான் இங்கிலாந்தின் மோசமான செயல்திறனை பாதுகாக்க நினைக்கவில்லை, ஆனால் உண்மையில் இங்கிலாந்துக்கு இதுவொரு மோசமான தொடராக அமைந்துள்ளது. அவர்களும் மனிதர்கள்தான் ரோபோக்கள் அல்ல, தவறு நடக்கத்தான் செய்யும். அவர்கள் எட்டுவாரங்களாக வீட்டிலிருந்து விலகி விளையாடி வருகின்றனர். இந்த மோசமான தோல்வியால் மிகுந்த அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர். நாம் போட்டியின் எமோசனை புரிந்துகொள்வதில்லை, வீட்டிலிருந்து டீ சாப்பிட்டுக்கொண்டு போட்டியை பார்த்துவிட்டு எளிதாக விமர்சித்துவிடுகிறோம். உண்மையில் எல்லா மனிதர்களுக்கும் ஏற்படும் சரிவுதான் இது என்று பேசியுள்ளார்.

மேலும் சீக்கிரம் வீட்டிற்கு வாருங்கள் என்று அழைத்திருக்கும் அவர், “அவர்கள் மன அழுத்தத்திலிருந்து வெளியேற, சீக்கிரம் வீட்டிற்கு வர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நாம் இங்கே அமர்ந்து அவர்கள் இந்தியாவால் கடுமையாக தாக்கப்படுவதைப் பார்க்கிறோம், ஆனால் அடுத்த இரண்டு நாட்களுக்கு அவர்கள் கடினமான நாட்களை கொண்டிருப்பார்கள். அனைத்தையும் மறந்து வீடுவாருங்கள் நாம் மீண்டும் பலமாக எழுவோம்” என்று அலைஸ்டர் குக் டிஎண்டி ஸ்போர்ட்ஸ் உடன் பேசியுள்ளார்.

பென் ஸ்டோக்ஸ்
இங்கிலாந்துக்கு எதிராக சம்பவம் செய்த டாப் 5 வீரர்கள்! முதல்முறையாக இந்திய அணி படைத்த அசாத்திய சாதனை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com