முத்தையா முரளிதரனின் உலக சாதனையை தகர்த்த அஸ்வின்! 100வது டெஸ்ட் போட்டியில் 3 இமாலய சாதனைகள்!

தன்னுடைய 100-வது டெஸ்ட் போட்டியில் முரளிதரன், அனில் கும்ப்ளே மற்றும் சுனில் கவாஸ்கர் முதலிய மூன்று ஜாம்பவான்களின் சாதனையை முறியடித்து அசத்தியுள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின்.
muralitharan - ashwin
muralitharan - ashwinweb

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இங்கிலாந்து அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் முதல் போட்டியைத் (இங்கிலாந்து வெற்றி) தவிர்த்து, அடுத்து நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் ஹாட்ரிக் வெற்றிபெற்ற இந்திய அணி தொடரையும் வென்று சாதனை படைத்தது.

முதல் 4 போட்டிகள் முடிவில் 3-1 என இந்திய அணி தொடரை வென்றநிலையில், 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது மார்ச் 7ம் தேதி இமாச்சலில் உள்ள தர்மசாலாவில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தார்.

muralitharan - ashwin
இங்கிலாந்துக்கு எதிராக சம்பவம் செய்த டாப் 5 வீரர்கள்! முதல்முறையாக இந்திய அணி படைத்த அசாத்திய சாதனை!

அஸ்வின் - குல்தீப் மாயாஜாலத்தால் சுருண்ட இங்கிலாந்து!

முதல் இன்னிங்ஸில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, இந்திய ஸ்பின்னர்களான குல்தீப் யாதவ் மற்றும் அஸ்வின் இருவரின் அபாரமான பந்துவீச்சால் 218 ரன்களுக்கே ஆல் அவுட்டாகி சுருண்டது. அபாரமாக பந்துவீசிய குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளும், அஸ்வின் 4 விக்கெட்டுகளும் கைப்பற்றி அசத்தினர்.

kuldeep yadav
kuldeep yadav

அதற்கு பிறகு தங்களுடைய முதல் இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணியில், டாப் ஆர்டர் வீரர்கள் ரோகித் சர்மா (103), சுப்மன் கில் (110), யஷஸ்வி ஜெய்ஸ்வால் (57), சர்ஃபராஸ் கான் (56), தேவ்தத் படிக்கல் (65)” முதலிய ஐந்து பேரும் அரைசதமடித்து 15 வருடங்களுக்கு பிறகு ஒரு பிரத்யேக சாதனையை படைத்து அசத்தினர். இதன்மூலம் இந்திய அணி 477 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது.

gill
gill

இந்திய அணி 259 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில், இங்கிலாந்து அணி தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸை விளையாடியது. இந்தமுறை களத்திலிருந்த கேப்டன் பென், ஜஸ்பிரித் பும்ரா பந்தை அஸ்வின் கையில் கொடுக்க, இன்னிங்ஸின் இரண்டாவது ஓவரிலேயே வெளியேற்றினார் அஸ்வின். அடுத்தடுத்து களத்திற்கு வந்த ஜாக் கிராவ்லி, ஒல்லி போப், பென் ஸ்டோக்ஸ், பென் ஃபோக்ஸ் என மெய்ன் பேட்டர்களை எல்லாம் வெளியேற்ற அஸ்வின், தன்னுடைய 100வது டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

ashwin
ashwin

அஸ்வினின் அபாரமான பந்துவீச்சால் 195 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இங்கிலாந்து அணி, இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. இந்த வெற்றியின் மூலம் 4-1 என்ற நிலையில் தொடரை வென்று அசத்தியது இந்திய அணி. இங்கிலாந்தின் பாஸ்பால் வரலாற்றில் முதல் டெஸ்ட் தொடரை இழந்துள்ளது இங்கிலாந்து அணி.

muralitharan - ashwin
“MS தோனியால் கிரிக்கெட் வாழ்க்கையை இழந்தோம்” குற்றச்சாட்டு வைத்த முன்னாள் வீரர்கள்..10 பேரின் கதை!

முரளிதரன் உலக சாதனையை முறியடித்த அஸ்வின்!

தன்னுடைய 100வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்ற ரவிச்சந்திரன் அஸ்வின், முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் 100வது போட்டியில் எந்தவொரு பந்துவீச்சாளராலும் பதிவுசெய்யப்பட்ட சிறந்த பந்துவீச்சாக இது மாறியது.

ashwin
ashwin

128 ரன்கள் விட்டுக்கொடுத்து 9 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கும் ரவி அஸ்வின், தன்னுடைய 100வது டெஸ்ட் போட்டியில் முரளிதரன் படைத்திருந்த 141 ரன்களுக்கு 9 விக்கெட்டுகள் என்ற உலக சாதனையை உடைத்து அசத்தியுள்ளார்.

muralitharan - ashwin
வரலாற்றில் இரண்டே பேர்..30 வயதுக்கு மேல் இந்தியாவிற்காக அதிக சதங்கள்! குரு சாதனையை சமன்செய்த ரோகித்!

அதிகமுறை 5 விக்கெட்டுகள் வீழ்த்திய ஒரே இந்திய பவுலர்!

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்த ரவிச்சந்திரன் அஸ்வின், இந்தியாவிற்காக அதிக முறை 5 விக்கெட்டுகள் வீழ்த்திய அனில் கும்ப்ளேவின் (35) சாதனையை சமன்செய்திருந்தார்.

இந்நிலையில் தற்போது மீண்டும் ஒருமுறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கும் அஸ்வின், இந்தியாவிற்கு அதிகமுறை 5 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்த அனில் கும்ப்ளேவின் சாதனையை முறியடித்து 36 முறை பதிவுசெய்து அசத்தியுள்ளார்.

ashwin - kumble
ashwin - kumbleCricinfo

இந்தியாவுக்காக அதிகமுறை 5 விக்கெட்டுகள் எடுத்தவர்கள்...:

1. ரவிச்சந்திரன் அஸ்வின் (2011-2023*) - 100 போட்டிகள் - 516 விக்கெட்டுகள் - 36 (5 விக்) / 8 (10 விக்)

2. அனில் கும்ப்ளே (1990-2008) - 132 போட்டிகள் - 619 விக்கெட்டுகள் - 35 (5 விக்) / 8 (10 விக்)

3. ஹர்பஜன் சிங் (1998-2015) -103 போட்டிகள் - 417 விக்கெட்டுகள் - 25 (5 விக்) / 5 (10 விக்)

4. கபில் தேவ் (1978-1994) - 131 போட்டிகள் - 434 விக்கெட்டுகள் - 23 (5 விக்) / 2 (10 விக்)

muralitharan - ashwin
’ரஞ்சிக்கோப்பை சிறந்த வேலையை செய்துள்ளது’! 36 ஆண்டில் முதல்வீரர்! படிக்கலை பாராட்டிய முன்.ENG வீரர்!

100வது போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய பவுலர்!

தன்னுடைய 100வது டெஸ்ட் போட்டியில் 128 ரன்களை விட்டுக்கொடுத்து 9 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கும் ரவி அஸ்வின், 100வது டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய ஒரே இந்திய பவுலராக மாறி அசத்தியுள்ளார்.

ashwin
ashwin

இதற்கு முன்பு தங்களுடைய 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடியிருந்த அனில் கும்ப்ளே மற்றும் கபில்தேவ் இருவரும் 7 விக்கெட்டுகளை கைப்பற்றிய நிலையில், 9 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின்.

muralitharan - ashwin
“அவர்களும் மனிதர்கள்தான்; ரோபோக்கள் அல்ல”- இங்கிலாந்து அணிக்கு முன்னாள் வீரர் ஆதரவு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com