SRH scored 219 runs against PBKS
SRH vs PBKScricinfo

IPL 2026| முதல் 6 ஓவரில் 105 ரன்கள்.. யாரும் நெருங்க முடியாத சாதனை படைத்த SRH.!

2026 ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 220 ரன்களை குவித்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.
Published on
Summary

ஐபிஎல் 2026ல் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக முல்லன்பூரில் ஆடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத், அபிஷேக் சர்மா–டிராவிஸ் ஹெட் ஜோடி வெடித்து அடித்ததால் பவர்பிளேவில் விக்கெட் இழப்பின்றி 105 ரன்கள் குவித்து வரலாற்றுச் சாதனை படைத்தது. 10 பவுண்டரி, 8 சிக்சர் பறந்த இந்த ஆட்டத்தில் அபிஷேக் 28 பந்தில் 74 ரன்கள் அடித்து அசத்தியதோடு, SRH 20 ஓவரில் 219 ரன்கள் சேர்த்தது.

ஐபிஎல் தொடரின் 19வது சீசனானது கடந்த மார்ச் 28ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றுவருகிறது. 10 அணிகளும் தங்களுடைய திறமையை வெளிப்படுத்திவரும் நிலையில், பெஸ்ட் vs பெஸ்ட் என பல அதிரடி போட்டிகளுடன் களைகட்டி வருகிறது 2026 ஐபிஎல்.

அபிஷேக் சர்மா, 2026
அபிஷேக் சர்மா, 2026

இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பஞ்சாப் கிங்ஸை எதிர்கொண்டு விளையாடுகிறது. முல்லன்பூர் மைதானத்தில் தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. ஆனால் ஏன் பவுலிங்கை தேர்வுசெய்தோம் என வருத்தப்படும் அளவிற்கு ஒரு அச்சுறுத்தும் பேட்டிங்கை வெளிப்படுத்தியது SRH-ன் அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் ஜோடி.

ஷஷாங் சிங்
ஷஷாங் சிங்

முதல் 6 ஓவரில் மட்டும் 10 பவுண்டரிகளையும் 8 சிக்சர்களையும் பறக்கவிட்ட இந்த ஜோடி பவர்பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 105 ரன்களை குவித்து மிரட்டியது. பின்னர் ஒரே ஓவரில் ஹெட் மற்றும் அபிஷேக் இருவரும் அவுட்டாகி வெளியேற 20 ஓவர் முடிவில் 219 ரன்களை மட்டுமே சன்ரைசர்ஸ் அணியால் அடிக்க முடிந்தது. 18 பந்தில் அரைசதமடித்த அபிஷேக் சர்மா 28 பந்தில் 74 ரன்கள் அடித்து அசத்தினார். ஒரே ஓவரில் தன்னுடைய பந்துவீச்சால் ஹெட் மற்றும் அபிஷேக்கை அவுட்டாக்கிய ஷஷாங் சிங் கேம் சேஞ்சராக மாறினார்.

SRH scored 219 runs against PBKS
CSK or DC..? ஃபிளெமிங் vs பதானி மோதலில் யாருக்கு வெற்றி..? முன்னாள் சிஎஸ்கே வீரர் பதில்!

சன்ரைசர்ஸ் படைத்த பிரமாண்ட சாதனை..

ஐபிஎல் வரலாற்றில் முதல் 6 ஓவரில் அதிக முறை 100 ரன்களை அடித்த அணியாக மாறி சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணி சாதனை படைத்துள்ளது. சிஎஸ்கே, கேகேஆர், சன்ரைசர்ஸ் என 3 அணிகள் மட்டுமே இதுவரை முதல் 6 ஓவரில் 100 ரன்களை அடித்துள்ள நிலையில், சிஎஸ்கே மற்றும் கேகேஆர் அணிகள் ஒரே ஒருமுறை மட்டுமே இதை செய்துள்ளது.

ஆனால் சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணி 2024-ல் இரண்டு முறை, இன்றைய போட்டியில் ஒரு முறை என மொத்தம் 3 முறை 6 ஓவர்களில் 125, 107 மற்றும் 105 ரன்கள் என அடித்து மிரட்டியுள்ளது.

சன்ரைசர்ஸ் அணி நிர்ணயித்த 220 ரன்கள் அடித்தால் வெற்றி இலக்குடன் ஸ்ரேயாஸ் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி விளையாடவிருக்கிறது.

SRH scored 219 runs against PBKS
சூர்யவன்ஷியின் சிக்ஸ் அடிக்கும் திறமையை விடுங்க.. ஒரு SINGLE-ஐ பார்த்து மிரண்ட ஜாம்பவான்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com