ரோகித், ராகுல், சூர்யகுமார்
ரோகித், ராகுல், சூர்யகுமார்ட்விட்டர்

தென்னாப்ரிக்க தொடர் : 3 அணிகளுக்கு, 3 வித கேப்டன்கள் அறிவிப்பு! ஒயிட் பாலில் ரோகித், கோலிக்கு ஓய்வு!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களுக்கு இந்திய அணியில் 3 வகையான கேப்டன்களும் வீரர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ஆடவர் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்குப் பிறகு, இந்திய அணியின் இளம்படை, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடருக்குப் பிறகு இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று வகை போட்டிகளிலும் விளையாடவுள்ளது. இதற்கிடையே உலகக்கோப்பையில் ஏற்பட்ட காயம் காரணமாக, ஹர்திக் பாண்டியா அந்தத் தொடரிலிருந்து பாதியிலேயே வெளியேறினார்.

சூர்யகுமார் யாதவ்
சூர்யகுமார் யாதவ்pt web

இந்த நிலையில், 3 வகையான போட்டிகளுக்கும் வீரர்களைத் தேர்வுசெய்யும் வகையில் பிசிசிஐ கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. அதிலும் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பையைக் கருத்தில்கொண்டு பல இளம்வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

இதனால் நடந்த முடிந்த உலகக்கோப்பை தொடருக்குப் பிறகு கேப்டன் ரோகித், விராட் கோலி, முகம்மது ஷமி, முகம்மது, சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், கே.எல்.ராகுல், சுப்மன் கில் உள்ளிட்ட பல முக்கிய வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் டி20 போட்டிகளில் ரோகித் மற்றும் கோலிக்கு ஓய்வு அளிக்கப்படுவதும் பேசுபொருளாகி வருகிறது. இந்தச் சூழலில் அடுத்துவரும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 வகை போட்டிகளுக்கும் கேப்டன்களையும் வீரர்களையும் பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.

இதையும் படிக்க: ”விராட் கோலியிடம் கிரிக்கெட் பசி அதிகம் இருக்கிறது; அவர் இன்னும் விளையாட வேண்டும்” - சச்சின்

அதன்படி, டெஸ்ட் அணிக்கு ரோகித் சர்மாவையும், ஒருநாள் அணிக்கு கே.எல்.ராகுலையும், டி20 அணிக்கு சூர்ய குமார் யாதவ்வையும் கேப்டன்களாக நியமித்து பிசிசிஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் இந்த 3 வகை அணிக்களுக்கான வீரர்களையும் அறிவித்துள்ளது. ரோகித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

KL Rahul
KL Rahul

டி20 அணிக்கான வீரர்கள்:

சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), யாஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ருத்ராஜ் கெய்க்வாட், திலக் வர்மா, ரிங்கு சிங், ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ரவீந்திரா ஜடேஜா (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், ரவி பிஸ்னோய், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், முகம்மது சிராஜ், முகேஷ் குமார், தீபக் சாஹர்

இதையும் படிக்க: 2024 டி20 உலகக்கோப்பை: வரலாற்றில் முதன்முறையாக தகுதி பெற்றது உகாண்டா.. 20 அணிகள் யார் யார்?

ஒருநாள் அணிக்கான வீரர்கள்:

கே.எல்.ராகுல் (கேப்டன்), ருத்ராஜ் கெய்க்வாட், சாய் சுதர்ஷன், திலக் வர்மா, ரஜத் படிதார், ரிங்கு சிங், ஸ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், யுஷ்வேந்திர சாஹல், முகேஷ் குமார், அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், தீபக் சாஹர்

டெஸ்ட் அணிக்கான வீரர்கள்:

ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், யாஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், ருத்ராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், முகம்மது சிராஜ், முகேஷ் குமார், முகம்மது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), பிரசித்

இதையும் படிக்க: இந்திய கிரிக்கெட் அணியில் ரோகித் சர்மா, விராட் கோலியின் எதிர்காலம்.. கபில் தேவ் சொல்வது என்ன?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com