”விராட் கோலியிடம் கிரிக்கெட் பசி அதிகம் இருக்கிறது; அவர் இன்னும் விளையாட வேண்டும்” - சச்சின்

”விராட் கோலியிடம் கிரிக்கெட் பசி அதிகம் இருக்கிறது” என ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
விராட் கோலி, சச்சின்
விராட் கோலி, சச்சின்ட்விட்டர்

2023 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தொடர்ச்சியாக 10 வெற்றிகளைப் பெற்று அசத்தியபோதும், இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் கோப்பையைத் தவறவிட்டது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தைத் தந்தது. எனினும், இத்தொடரில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் மிகச் சிறப்பாக செயல்பட்டனர். குறிப்பாக இந்த தொடரில் ரோகித் சர்மாவைவிட விராட் கோலி நிறைய சாதனைகள் படைத்திருந்தார். உலகக்கோப்பை தொடர் ஒன்றில் அதிக ரன்கள் (765) குவித்ததுடன், ஒருநாள் போட்டியில் அதிக சதம் வீரர் (50) என்ற மகத்தான சாதனையையும் படைத்தார்.

இந்த சூழ்நிலையில் 35 வயதைக் கடந்துவிட்ட விராட் கோலி, 2024 டி20 உலகக்கோப்பையில் விளையாடுவாரா அல்லது 2027 உலகக்கோப்பையில் விளையாட முடியுமா என்பது போன்ற நிறைய கேள்விகள் வைக்கப்பட்டு வருகின்றன. காரணம், அவருக்கு டி20 தொடரில் இருந்து முழுவதுமாக ஓய்வளிக்கப்பட்டு வருகிறது.

விராட் கோலி
விராட் கோலி

தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில்கூட அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்தே அவர், அடுத்த வருடம் நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பையில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. எனினும், ’அவர் இன்னும் சில ஆண்டுகள் விளையாட வேண்டும்; அவருக்கு கிரிக்கெட்டின் மீது அதிகமான பசி உள்ளது’ என உலக ஜாம்பவான்கள் பலரும் அவருக்கு ஆதரவாகக் கருத்த் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே அடுத்த மாதம் நடைபெற இருக்கும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் இருந்து விலகி இருப்பதாகவும் ஓய்வு தேவைப்படுவதாகம் விராட் கோலி, பிசிசிஐயிடம் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிக்க: உலகின் ஏழை நாடுகள் பட்டியல்: முதலிடத்தில் புருண்டி நாடு.. 2வது இடத்தில் ஆப்கானிஸ்தான்!

இந்த நிலையில் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரும், கோலி இன்னும் விளையாட வேண்டும் என தெரிவித்துள்ளார். ’என்னுடைய உலக சாதனைகளை உடைத்த விராட் கோலியிடம் இன்னும் கிரிக்கெட்டில் சாதிப்பதற்கு நிறைய திறமைகள் இருக்கிறது’ எனக் கூறும் சச்சின், ’2023 உலகக்கோப்பை தோல்வியை வைத்து அவருடைய கேரியரை யாரும் முடிவு செய்ய வேண்டியதில்லை’ எனத் தெரிவித்துள்ளார்.

என்னுடைய உலக சாதனைகளை உடைத்த விராட் கோலியிடம் இன்னும் கிரிக்கெட்டில் சாதிப்பதற்கு நிறைய திறமைகள் இருக்கிறது
சச்சின் - விராட் கோலி
சச்சின் - விராட் கோலிTwitter

இதுகுறித்து அவர், “விராட் இந்தியாவுக்காக விளையாடுவதற்கு முன்பே நான் பார்த்திருக்கிறேன். பின்னர் அவர் ஓர் சிறந்த வீரராக வளர்வதை நான் பார்த்தேன். அந்த சாதனையை (50 சதம்) அவர் செய்ததற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த சமயத்தில் அவருடைய பயணம் இத்துடன் நின்றுவிடாது என்று நான் உறுதியாக நம்புகிறேன். இன்னும் அவருக்குள் நிறைய கிரிக்கெட்டும் ரன்களும் இருக்கிறது.

இந்தியாவுக்கு சொந்தமான சாதனை எப்போதும் இந்தியாவிடம் தொடர்ந்து இருக்க வேண்டும்

அவரிடம் நாட்டுக்காக இன்னும் சிறப்பாக விளையாடி நிறைய சாதனை செய்து வெற்றிகளை பெற்றுக் கொடுப்பதற்கான பசி அதிகமாக இருக்கிறது. அந்த சாதனையை தொடர்ந்து இந்தியாவிடம் இருப்பதை நினைத்து நான் மகிழ்ச்சியடைகிறேன். தவிர, இந்தியாவுக்கு சொந்தமான சாதனை எப்போதும் இந்தியாவிடம் தொடர்ந்து இருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: மூக்கு வழியாக நுழைந்து மூளையை உண்ணும் அமீபா; விநோத நோய்க்கு 10 வயது கொலம்பிய சிறுமி பலி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com