‘அவர் விருப்பப்படி இருக்கட்டும்...’ விராட் கோலியை விட்டுக்கொடுக்காமல் பேசிய கங்குலி!

இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாய் விளங்கும் விராட் கோலியை, விட்டுத் தராமல் முன்னாள் பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலியின் பேசியுள்ளார். இதனால் கோலி ரசிகர்களை உற்சாகத்தில் உள்ளனர்.
விராட் கோலி, கங்குலி
விராட் கோலி, கங்குலிட்விட்டர்

விராட் கோலியின் கிரிக்கெட் பயணம் குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் சமீபத்தில் சில அறிவுரைகளை வழங்கியிருந்தார். அதில், “உலகக்கோப்பைத் தொடருக்குப்பின் விராட் கோலி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுவதைத் தவிர்க்க வேண்டும். முழுக்க முழுக்க டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி பங்கேற்க வேண்டும். சச்சின் டெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையை விராட் கோலி தகர்க்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதனால் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் பங்கேற்காமல் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாடுவதுதான் விராட் கோலிக்கு சிறந்ததாக இருக்கும். அவரின் கிரிக்கெட் வாழ்க்கையும் 5 முதல் 6 ஆண்டுகள் வரை கூடுதலாக இருக்கும்” எனத் தெரிவித்திருந்தார்.

அக்தர், கங்குலி
அக்தர், கங்குலி

சோயிப் அக்தரின் கருத்து குறித்து செளரவ் கங்குலியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், “எந்த வகையான கிரிக்கெட்டை விளையாடினாலும், விராட் கோலியால் சிறப்பாகச் செயல்பட முடிகிறது. விராட் கோலிக்கு எப்படியான கிரிக்கெட்டை விளையாட விருப்பமோ, அப்படியே விளையாடினாலே போதுமானது என்று நினைக்கிறேன்” என்றுள்ளார். இந்த பதிலால் கங்குலி, சோயிப் அக்தரின் கருத்துக்குப் பதிலடி கொடுத்ததுடன் விராட் கோலி ரசிகர்களின் மனதிலும் இடம்பிடித்தார். தற்போது இந்த பேட்டியை கோலி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்திய அணியின் முன்னாள் பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி மற்றும் நட்சத்திர வீரர் விராட் கோலி இடையிலான மோதல் கடந்தகாலங்களில் விஸ்வரூபம் எடுத்திருந்தது. கேப்டன் பதவியிலிருந்து விலகியது தொடர்பாக விராட் கோலிக்கும், அப்போதைய பிசிசிஐ தலைவர் கங்குலிக்கும் இடையே பல்வேறு கருத்து மோதல்கள் இருந்துவந்தன. சொல்லாததைச் சொன்னதாக இருவரும் மாறி மாறி கூறிவந்தனர்.

விராட் கோலி, கங்குலி
அடடே இதுதான் கண்கொள்ளா காட்சி! சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கோலி - கங்குலி! நடந்தது என்ன?

இது பிசிசிஐ நிர்வாகத்திற்கும் விராட் கோலிக்கும் இடையே மோதல் நிலவுவதாக கிளம்பிய யூகங்களுக்கு இன்னும் வலுசேர்த்தது. குறிப்பாக, டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளின் தலைமைப் பொறுப்பில் இருந்து விராட் கோலி விலகுவதற்கு அதுவே காரணமாக அமைந்தது எனச் சொல்லப்பட்டது. அதன்பின்னர் பிசிசிஐ தேர்வுக்குழுத் தலைவராக இருந்த சேத்தன் ஷர்மாவும், இதுதொடர்பாக சில கருத்துக்களைப் பதிவு செய்திருந்தார்.

விராட் கோலி, கங்குலி
கோலி, கங்குலி இடையே அப்படி என்ன நடந்தது? சர்ச்சை கருத்திற்கு பிறகு சேத்தன் சர்மா ராஜினாமா!
விராட் கோலி
விராட் கோலிFile Image

அதனைத் தொடர்ந்து சமீபத்தில் முடிவடைந்த ஐபிஎல் தொடரில் டெல்லி - பெங்களூரு அணிகள் மோதிய போட்டியில் கங்குலி மற்றும் கோலி கைகுலுக்காததும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கங்குலியைப் பின் தொடர்ந்துவந்த விராட் கோலி இந்த சர்ச்சையின் காரணமாக கங்குலியை பின்தொடருவதை நிறுத்திக் கொண்டார். இதன்மூலம் அவர்கள் இருவருக்கும் இருக்கும் மோதல் மேலும் வெட்டவெளிச்சமானது. இந்த நிலையில்தான், விராட் கோலிக்கு ஆதரவாக கங்குலி பேசியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com