
“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!
IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew
டெல்லி - பெங்களூர் அணிகளுக்கு இடையிலான போட்டி முடிந்த பின்பு கோலியும் கங்குலியும் கைகுலுக்கிக் கொண்டதால், இருவரின் ரசிகர்களும் பெருமூச்சுவிட்டதுடன் நிம்மதியும் அடைந்தனர்.
ஐபிஎல் தொடரின் 50 ஆவது லீக் போட்டி நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 181 ரன்களை எடுத்தது. இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய விராட் கோலி அரை சதமடித்தார். அதன் பின்பு வந்த மஹிபால் லோம்ரோர் டெல்லி பந்துவீச்சை பொளந்துக்கட்டி அரை சதத்தை பதிவு செய்தார். பின்பு 20 ஓவரில் பெங்களூர் 181 ரன்களை சேர்த்தது.
182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி வீரர்கள், பெங்களுர் பந்துவீச்சை வெளுத்து வாங்கினர். பிலிப் சால்ட் 45 பந்துகளில் 8 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் உட்பட 87 ரன்களை குவித்து மிரள வைத்தார். கேப்டன் வார்னர் 22 (14), மிட்செல் மார்ஷ் 26 (17), ரிலே ரூசோவ் 35 (22) ஆகியோரும் ஓரளவுக்கு ரன்களை சேர்த்ததால், டெல்லி அணி 16.4 ஓவர்கள் முடிவில் 187/3 ரன்களை குவித்து, 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.
இந்த இரு அணிகளும் இடையே நடைபெற்ற முந்தைய லீக் போட்டி பெங்களூரில் இருக்கும் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடந்தபோது பெங்களூர் வெற்றிப்பெற்றது. அப்போதம் கோலி அரைசதமடித்து மிகவும் ஆக்ரோஷமாக இருந்தார். போட்டியின் முடிவில் கோலி, கங்குலி இருவரும் கைகொடுக்காமல் சென்றனர். இதனைத் தொடர்ந்து இருவரும் இன்ஸ்டாகிராமில் மாறிமாறி அன்பாலோ செய்து கொண்டதால், இருவருக்கும் இடையிலான பனிப்போர் அதிகரித்திருப்பதாக கூறப்பட்டது.
இந்நிலையில் நேற்றும் இதேபோல நடந்துவிடுமோ என இரு அணியின் ரசிகர்களும் நினைத்துக்கொண்டிருந்தனர். போட்டி முடிந்தப் பிறகு கங்குலி, கோலி ஆகியோர் கைகொடுக்க வரிசையில் வந்தனர். அப்போது கோலி தோளில் கங்குலி கைபோட்டு கைகுலுக்கினார். இதனைத் தொடர்ந்து கோலியும் கங்குலி தோளில் கை போட்டு பரஸ்பரம் நலம் விசாரித்தார். இதனால் இருவருக்குமிடையிலான பனிப்போர் முடிவுக்கு வந்ததாக ரசிகர்கள் நிம்மதியடைந்தனர்.