siraj
sirajweb

”நான் ரொம்ப எமோஷனல் ஆயிட்டன்.. 2-1 என இருந்திருக்க வேண்டும்” - தோல்வி குறித்து சிராஜ் வருத்தம்!

இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து எமோசனலாக பேசியுள்ளார் வேகப்பந்துவீச்சாளர் சிராஜ்.
Published on

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் 22 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியை தழுவியது. வெற்றிக்கு 193 ரன்களே தேவையாக இருந்த இடத்தில் இந்தியாவே வெற்றிபெறப்போகிறது என்ற எதிர்ப்பார்ப்பு இருந்தது. ஆனால் இந்தியாவின் டாப் ஆர்டர் வீரர்கள் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியதால் நல்ல வாய்ப்பை இழந்த இந்திய அணி 1-2 என தொடரில் பின்தங்கியுள்ளது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் நிலைத்து நின்று 60 ரன்கள் அடித்து போராடிய ரவீந்திர ஜடேஜா, நம்பர் 10 மற்றும் நம்பர் 11 வீரர்களுடன் சேர்ந்து 58 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு இங்கிலாந்துக்கு பயத்தை ஏற்படுத்தினார். பும்ரா, சிராஜ் இரண்டு வீரர்களும் சண்டையிட்டாலும், முடிவில் துரதிருஷ்டவசமாக சிராஜ் போல்டாகினார்.

இந்நிலையில் இறுதிவரை ஜடேஜாவுக்கு கைக்கொடுத்திருக்க வேண்டும், 2-1 என இந்தியா வென்றிருக்க வேண்டும் என சிராஜ் எமோஷனலாக பேசியுள்ளார்.

siraj
HEART BREAKING| ’சோகத்தில் முடிந்த ஜடேஜா போராட்டம்..’ சொதப்பிய டாப் ஆர்டர் வீரர்கள்.. ENG வெற்றி!

எமோஷனலாக பேசிய சிராஜ்..

193 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய இந்தியா 112 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்தது. அதற்குபிறகு பும்ரா மற்றும் சிராஜ் உடன் கைக்கோர்த்த ஜடேஜா 58 ரன்கள் பாட்னர்ஷிப் போட்டு வெற்றிக்காக போராடினார். 30 பந்துகளை சந்தித்து நிலைத்து நின்ற சிராஜ், பஷீர் பந்துவீச்சில் துரதிருஷ்டவசமாக போல்டாகினார்.

இதை சற்றும் எதிர்ப்பாராத சிராஜ் மைதானத்திலேயே உடைத்து போய் அமர்ந்துவிட்டார். அவரை ஜோ ரூட் மற்றும் ஜேமி ஸ்மித் இருவரும் வந்து தேற்றினர். ஜடேஜா தலைமேல் கைவைத்துவிட்டு தோல்வியை ஒப்புக்கொண்டார்.

இந்நிலையில் லார்ட்ஸ் டெஸ்ட்டில் ஹார்ட் பிரேக்கிங் மொமண்ட் குறித்து எமோசனலாக பேசிய சிராஜ், “நான் ரொம்ப உணர்ச்சிவசப்பட்டேன். அது 2-1 ஆக இருந்திருக்கலாம். ஜட்டு பாய் ரொம்பவே போராடினார், ஆனால் தொடர் இன்னும் முடிவடையல. நான் என் பேட்டிங்கில் கொஞ்சம் கொஞ்சமா வேலை செய்வேன்னு எனக்கு நானே சொல்லிக்கிட்டேன். ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இருந்து நாங்க எங்களோட பேட்டிங்கில் ரொம்ப கஷ்டப்பட்டுட்டு இருக்கோம், 22 ரன்கள் வித்தியாசத்துல தோத்தது ரொம்ப வருத்தமா இருந்துச்சு” என வருத்தமாக பேசினார்.

siraj
”ஜடேஜா ஒரு ஸ்பெசல் பிளேயர்.. தற்போதைய அணியின் முக்கிய வீரர் அவர்தான்” - கங்குலி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com