jadeja - ganguly
jadeja - gangulyweb

”ஜடேஜா ஒரு ஸ்பெசல் பிளேயர்.. தற்போதைய அணியின் முக்கிய வீரர் அவர்தான்” - கங்குலி!

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெல்லாதது ஏமாற்றமளிப்பதாக கங்குலி தெரிவித்துள்ளார்.
Published on

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் 22 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியை தழுவியது. வெற்றிக்கு 193 ரன்களே தேவையாக இருந்த இடத்தில் இந்தியாவே வெற்றிபெறப்போகிறது என்ற எதிர்ப்பார்ப்பு இருந்தது. ஆனால் இந்தியாவின் டாப் ஆர்டர் வீரர்கள் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியதால் நல்ல வாய்ப்பை இழந்த இந்திய அணி 2-1 என தொடரில் பின்தங்கியுள்ளது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் நிலைத்து நின்று 60 ரன்கள் அடித்த ரவீந்திர ஜடேஜா, முக்கியமான நேரத்தில் எப்படி பேட்டிங் செய்யவேண்டுமென்று இந்தியாவின் டாப் ஆர்டர் வீரர்கள் பாடம் புகட்டினார்.

இந்நிலையில் லார்ட்ஸில் நடைபெற்ற 3வது டெஸ்ட்டில் இந்தியா வெல்லாதது ஏமாற்றம் அளிப்பதாக கூறியிருக்கும் கங்குலி, ரவிந்திர ஜடேஜாவை ஸ்பெசல் வீரர் என்று பாராட்டி தள்ளியுள்ளார்.

ஜடேஜாவை புகழ்ந்து தள்ளிய கங்குலி!

நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி, இங்கிலாந்துக்கு எதிராக 193 ரன்கள் அடிக்க முடியாமல் இந்தியா தோற்றது ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்தார்.

தோல்வி குறித்து பேசிய அவர், “இங்கிலாந்துக்கு எதிராக 2-1 என முன்னிலை பெறும் வாய்ப்பை இந்தியா இழந்துள்ளது. இந்த தொடர் முழுவதும் இந்திய வீரர்கள் பேட்டிங் செய்ததை பார்க்கும் போது, அவர்கள் 193 ரன்களை நிச்சயம் எட்டியிருக்க வேண்டும். அது ஏமாற்றமளிக்கிறது. அவர்களும் நிச்சயம் வெற்றியை பெறமுடியாமல் ஏமாற்றமடைந்திருப்பார்கள், டிரெஸ்ஸிங் ரூமில் அந்தளவு பேட்டிங் திறமை இருக்கிறது. டாப் ஆர்டர் வீரர்கள் கொஞ்சம் சண்டையிட்டிருந்தால், இந்தியாவின் பக்கம் வெற்றி இருந்திருக்கும்” என்று பேசினார்.

மேலும் ஜடேஜாவை புகழ்ந்து பேசிய கங்குலி, “ஜடேஜா ஒரு தனித்துவமான வீரர், அவர் இதுபோன்று சிறப்பாக பேட்டிங் செய்வதை பார்க்கும்போது நீண்டகாலம் இந்திய அணிக்கு விளையாடப்போகிறார். 80 டெஸ்ட்களிலும், 200 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியிருக்கும் அவர், பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டுள்ளார். நாம் அதை எப்போதும் பார்த்துள்ளோம். சமீபகாலமாக அவருடைய பேட்டிங் மிகவும் மேம்பட்டுள்ளது. ஜடேஜா ஒரு ஸ்பெசலான வீரர், இந்த இந்திய அணியின் முக்கியமான பகுதி” என்று பாராட்டி பேசியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com