‘நான் ரெடிதான் வரவா...’ ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் சுப்மன் கில்!

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் பேட்ஸ்மேன் தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர் சுப்கன் கில் முதலிடம் பிடித்துள்ளார்.
சுப்மன் கில்
சுப்மன் கில்pt web

இந்திய அணி சமீப நாட்களாக தனது உட்சபட்ச ஆட்டத்தினை விளையாட்டு உலகில் வெளிப்படுத்தி வருகிறது. தொட்டதெல்லாம் பொன் என்வது போல் ஆடும் ஆட்டம் எல்லாம் வெற்றி என்ற ரீதியில் இந்திய அணி விளையாடி வருகிறது.

சுப்மன் கில்
சுப்மன் கில்ட்விட்டர்

ஐசிசி தரவரிசையின் படி இந்திய அணி டி20, ஒருநாள், டெஸ்ட் மூன்று ஃபார்மேட் ஆட்டங்களிலும் முதலிடத்தில் உள்ளது. அதேபோல், டி20 போட்டிகளில் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் சூர்யக்குமார் யாதவ் 863 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். ஒருநாள் போட்டிகளில் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் முகம்மது சிராஜ் 709 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்கள் பட்டியலில் அஷ்வின் 879 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

சுப்மன் கில்
நடக்கவே நடக்காது என்றதை நடத்திக் காட்டிய மேக்ஸ்வெல்.. குவியும் பாராட்டுகள்!

டெஸ்ட் போட்டிகளில் ஆல்ரவுண்டர் தரவரிசைப் பட்டியலில் ஜடேஜா 455 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். ரவிச்சந்திரன் அஷ்வின் 370 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். ஐந்தாம் இடத்தில் இடத்தில் அக்‌ஷர் படேல் 298 புள்ளிகளுடன் உள்ளார்.

இந்த வரிசையில் சுப்மன் கில் இணைந்துள்ளார். ஒரு நாள் போட்டிகளில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில் சுப்மன் கில் 830 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

2019 ஆம் ஆண்டு முதல் ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வரும் சுப்மன் கில் இதுவரை 41 இன்னிங்ஸ்களில் விளையாடி 2136 ரன்களை எடுத்துள்ளார். 61 ரன்களை சராசரியாக வைத்துள்ளார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 102.2 ஆக உள்ளது. அதில் 6 முறை சதமும் 11 முறை அரை சதமும் விளாசியுள்ளார். இதுநாள் வரை முதலிடத்தில் இருந்த பாபர் ஆசம் 824 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com