நடக்கவே நடக்காது என்றதை நடத்திக் காட்டிய மேக்ஸ்வெல்.. குவியும் பாராட்டுகள்!

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக தனியாளாக நின்று வெற்றியை தேடிதந்த ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மேக்ஸ்வெல்லுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
maxwell
maxwellpt desk

தனது வாழ்நாளிலேயே மேக்ஸ் வெல்லின் இந்த ஆட்டம்தான் சிறந்த ஒருநாள் ஆட்டம் என கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாராட்டு தெரிவித்துள்ளார். Max pressure-ல் இருந்து Max performance கிடைத்துள்ளது என்றும் எக்ஸ் வலைதளத்தில் சச்சின் குறிப்பிட்டுள்ளார்.

இலக்கை நோக்கி ஆடிய போது அடித்த இந்த இரட்டை சதம் இன்னும் பல நாட்களுக்கு பேசப்படும் என சேவாக் பாராட்டு தெரிவித்துள்ளார்.

maxwell
1983 Vs 2023 | கபில் தேவ்-க்கு ரோஜர், மதன், கிர்மானி... ஆனா மேக்ஸ்வெல்-க்கு ஒரே ஆளாக பேட் கம்மின்ஸ்!
maxwell
maxwellpt desk

இங்கிலாந்தின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், உலகக் கோப்பையில் சிறந்த சதம் இது என்றும் இதுவரை இல்லாத சிறந்த ஒருநாள் இன்னிங்ஸ் இது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நடக்கவே நடக்காது என்பதை நடத்திக் காட்டியுள்ளார் மேக்ஸ்வெல் எனவும், கிரிக்கெட் வரலாற்றிலேயே மிகவும் சிறப்பான ஆட்டமாக இது இருக்கும் எனவும் இந்திய மகளிர் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் புகழாரம் சூட்டியுள்ளார்.

‘உங்களால் மட்டும்தான் இதை செய்ய முடியும்’ என இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி பாராட்டியுள்ளார்.

‘உங்களின் ஆட்டம் எனக்கு கபிலை நினைவுபடுத்திவிட்டது, மிக அற்புதம்’ என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

maxwell
அன்று கபில்தேவ் இன்று மேக்ஸ்வெல்... தனியொருவனாய் ஜெயித்துக்காட்டிய சூப்பர் ஹீரோஸ்!

இதேபோல், பல்வேறு நாட்டு கிரிக்கெட் வீரர்களும் மேக்ஸ் வெல்லுக்கு பாராட்டுகளை சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com