2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கான வீரர்களை தேர்வு செய்யும் ஏலமானது வரும் டிசம்பர் 19 ஆம் தேதியில் இருந்து நடைபெற இருக்கிறது. அடுத்த 3 ஆண்டுகளுக்கு ஏலம் நடைபெறாது என்பதால், இந்த ஏலத்தில் ஒவ்வொரு அணிக்கும் 100 கோடியென பட்ஜெட் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஏலத்திற்கு முன்பாக ஒவ்வொரு அணியும் தங்களது அணியின் வெளியிடும் மற்றும் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும் என்பதால், புது திருப்பங்களுடன் வீரர்களின் பெயர் பட்டியலும் வெளியிடப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஹர்திக் பாண்டியாவை மும்பை அணி தேர்வு செய்துவிட்டது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வந்துள்ளது. இதனால் அடுத்து யார் குஜராத் டைட்ன்ஸ் அணியின் கேப்டனாக செயல்படுவார் என்று கேள்வி எழுந்தது. கேன் வில்லியம்சனா அல்லது ஆஸ்திரேலியாவின் டி20 அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வரும் மேத்யூவேட்டா என்ற கேள்வி ரசிகர்களிடையே தீயாய் எழுந்துவந்தது.
இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக குஜராத் டைட்ன்ஸ் அணியின் கேப்டனாக சுப்மன் கில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று குஜராத் அணி தனது x வலைதளப்பக்கத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
முன்னதாக யாரும் எதிர்ப்பாரத வகையில் ரூ. 15 கோடியை கொடுத்து குஜராத் டைட்டன்ஸ் அணியிடமிருந்து ஹர்திக் பாண்டியாவை மீண்டும் மும்பை அணிக்கே எடுத்துவந்தது மும்பை அணி.