\
RCB
RCBTwitter

தினேஷ் கார்த்திக் IN.. ஹசரங்கா, ஹசல்வுட், ஹர்சல் பட்டேல் OUT! ஷாக்கிங் முடிவுகளை எடுத்த RCB!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் ஹசரங்கா, ஹசல்வுட் மற்றும் ஹர்சல் பட்டேலை வெளியேற்றியுள்ளது. இதன்மூலம் அந்த அணி ஆல்ரவுண்டர்கள் மற்றும் ஸ்பின்னர்களை ஏலத்தில் எடுக்க தீவிரம் காட்டவிருக்கிறது.
Published on

2024 ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 19ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. அடுத்த மூன்று வருடத்திற்கு வீரர்கள் ஏலம் இல்லை என்பதால், இந்த ஐபிஎல் ஏலத்தில் ஒவ்வொரு அணிக்குமான பட்ஜெட் 100கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒரு மெகா ஏலத்திற்கு முன்னதாக ஒவ்வொரு அணியும் அவர்களுடைய வெளியிடும் மற்றும் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகின்றன.

Hazelwood
Hazelwood

இந்நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி எப்போதும் இருக்கும் பிரச்சனையான ஆல்ரவுண்டர்கள் மற்றும் வேகப்பந்துவீச்சாளர்கள் பக்கம் மீண்டும் திரும்பியுள்ளது. வெளியேற்றியிருக்கும் 11 வீரர்கள் பட்டியலில் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் ஹசல்வுட், ஹர்சல் பட்டேல் போன்ற பெயர்களும் இடம்பெற்றுள்ளன. பல வருடங்களாக தொடரும் ஆர்சிபி அணிக்கான சிக்கல் இந்த ஏலத்தில் பூர்த்தியாகுமா என்று பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். விராட் கோலி ஆர்சிபி அணிக்காக 17வது ஐபிஎல் சீசனில் பங்கேற்க உள்ளார்.

இதனிடையே, மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து டேவிட் க்ரீன் பெங்களூர் அணிக்கு வந்துள்ளார்.

வீரர்கள் விவரம்:

தக்கவைக்கப்பட்ட RCB வீரர்கள்!

விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), க்ளென் மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக், ரஜத் படிதார், அனுஜ் ராவத், சுயாஷ் பிரபுதேசாய், வில் ஜாக்ஸ், மஹிபால் லோம்ரோர், கர்ண் ஷர்மா, மனோஜ் பந்தேஜ், மயங்க் டாகர் (எஸ்ஆர்எச்சில் இருந்து), விஜய்குமார் வைஷாக், ஆகாஷ் தீப், முகமது சிராஜ், ரீஸ் டாப்லி, ஹிமான்ஷு சர்மா, ராஜன் குமார்.

Hasaranga
Hasaranga

வெளியேற்றப்பட்ட RCB வீரர்கள்!

கேதர் ஜாதவ், வனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படேல், ஜோஷ் ஹேசில்வுட், ஃபின் ஆலன், மைக்கேல் பிரேஸ்வெல், டேவிட் வில்லி, வெய்ன் பார்னெல், சோனு யாதவ், அவினாஷ் சிங், சித்தார்த் கவுல்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com