IPL 2024 Trades
IPL 2024 TradesTwitter

MI-க்கு சென்ற ஹர்திக்; RCB-க்கு சென்ற க்ரீன்; CSK-வில் மீண்டும் தோனி! 10 அணிகளின் முழு Trades விவரம்

2024 ஐபிஎல் தொடருக்காக அனைத்து 10 அணிகளும் தீவிரமான திட்டத்துடன் களமிறங்கியுள்ளன.

2024 ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 19ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. அடுத்த மூன்று வருடத்திற்கு வீரர்கள் ஏலம் இல்லை என்பதால், இந்த ஐபிஎல் ஏலத்தில் ஒவ்வொரு அணிக்குமான பட்ஜெட் 100 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒரு மெகா ஏலத்திற்கு முன்னதாக ஒவ்வொரு அணியும் அவர்களுடைய வெளியிடும் மற்றும் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளன. வீரர்கள் பட்டியலை வெளியிட நேற்றே கடைசி நாள் என்பதால் பல அணிகள் எதிர்ப்பார்க்காத பல முடிவுகளை எடுத்துள்ளன.

யாரும் எதிர்ப்பார்க்காத பல முடிவுகளை ஒவ்வொரு அணியும் எடுத்துள்ளன. "ஹர்திக் பாண்டியா கேப்டன் பதவியை விட்டுவிட்டு மும்பை அணிக்கு திரும்பியிருப்பது ரோகித் ஷர்மாவின் கேப்டன்சிக்கு முற்றுப்புள்ளியா? கேம்ரான் க்ரீனை மும்பை அணியிலிருந்து வாங்கி, தங்களுடைய ப்ரைம் பவுலர்களை வெளியிட்டிருக்கும் RCB அணியின் முடிவு சரியானதா? எம் எஸ் தோனி, புவனேஷ் குமார், தினேஷ் கார்த்திக் போன்ற மூத்த வீரர்களை தக்கவைத்திருப்பது எந்தளவு ஆரோக்கியமானது?" போன்ற பல கேள்விகளை 2024 ஐபிஎல் தொடருக்கான டிரேட்ஸ் ஏற்படுத்தியுள்ளது. 10 அணிகளின் முழு டிரேட்ஸ் விவரத்தை பார்ப்போம்..

1. ஷர்துல் தாக்கூர், லாக்கி ஃபெர்குஷனை வெளியேற்றிய KKR!

சமீபத்தில் கொல்கத்தா அணியின் ஆலோசகராக முன்னாள் கேகேஆர் கேப்டன் கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்ட நிலையில், தற்போது அணியில் இருந்த பாதி வீரர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். 2 முறை கோப்பை வென்றவரான கவுதம்கம்பீர், 2024 ஐபிஎல் கோப்பையை குறிவைக்கும் வகையில் ஒரு மாஸ்டர் நகர்த்தலை எதிர்நோக்கியுள்ளார். இதில் கடந்த ஐபிஎல் தொடரில் KKR அணியின் பிளேயிங் லெவனில் இருந்த ஷர்துல் தாக்கூர், லாக்கி ஃபெர்குஷன், டிம் சவுத்தீ போன்ற வீரர்கள் வெளியேற்றப்பட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

kkr
kkr

KKR அணியில் வெளியேற்றப்பட்ட 12 வீரர்கள்: ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ், டிம் சவுத்தி, லாக்கி பெர்குசன், ஷகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ் , நாராயண் ஜெகதீசன், மந்தீப் சிங், ஆர்யா தேசாய், டேவிட் வைஸ், குல்வந்த் கெஜ்ரோலியா, ஜான்சன் சார்லஸ்

தக்கவைக்கப்பட்ட KKR வீரர்கள்: ஷ்ரேயாஸ் ஐயர், நிதிஷ் ராணா, ரிங்கு சிங், ரஹ்மானுல்லா குர்பாஸ், சுனில் நரைன், ஜேசன் ராய், சுயாஷ் சர்மா, அனுகுல் ராய், ஆண்ட்ரே ரஸ்ஸல், வெங்கடேச ஐயர், ஹர்ஷித் ராணா, வைபவ் அரோரா, வருண் சக்கரவர்த்தி

2. ஹோல்டர், ரூட்டை வெளியேற்றிய RR!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஆரோக்கியமான வீரர்களை தக்கவைத்துள்ளது. அவர்களின் ஹோல்டர் மற்றும் மெக்காயின் வெளியேற்றம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆல்ரவுண்டர்களின் தேடுதலோடு RR-ன் 2024 ஏலம் இருக்கும் என தெரிகிறது.

RR
RR

விடுவிக்கப்பட்ட RR வீரர்கள்: ஜோ ரூட், அப்துல் பாசித், ஜேசன் ஹோல்டர், ஓபேட் மெக்காய், முருகன் அஷ்வின், கே.சி கரியப்பா, கே.எம்.ஆசிப், ஆகாஷ் வஷிஷ்ட் மற்றும் குல்திப் யாதவ்.

தக்கவைக்கப்பட்ட RR வீரர்கள்: சஞ்சு சாம்சன், ஜோஸ் பட்லர், ரவிச்சந்திரன் அஷ்வின், நவ்தீப் சைனி, பிரசித் கிருஷ்ணா, சந்தீப் சர்மா, டிரென்ட் போல்ட், யுஸ்வேந்திர சாஹல், ஆடம் ஜம்பா, ஷிம்ரோன் ஹெட்மியர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், துருவ் ஜூரல், ரியான் பராக், டோனோவன் ஃபெரீரா, குணால் ரத்ரேரா, மற்றும் குல்தீப் சென்

வர்த்தகம்: ஆவேஷ் கான் ( LSG-அணியிலிருந்து)

3. ரிஷப் பண்ட் Return.. இருந்தும் பல இளம் வீரர்களை வெளியிட்ட DC!

ரிஷப் பண்ட் 2024 ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என முன்பே டெல்லி கேபிடல்ஸ் அணி தெரிவித்திருந்தது. இருப்பினும் எப்போதும் இளம் வீரர்களை பேக்கப் செய்யும் டெல்லி அணி சக்கேரியா, நாகர்கோட்டி, ரோவ்மன் பவல், பிரியம் கார்க் போன்ற வீரர்களை வெளியிட்டுள்ளது.

DC
DC

விடுவிக்கப்பட்ட DC வீரர்கள்: ரிலீ ரோசோவ், ரிபல் பட்டேல், சர்ஃபராஸ் கான், அமன் கான், சேத்தன் சகேரியா, ரோவ்மன் பவல், மணீஷ் பாண்டே, பில் சால்ட், முஸ்தாபிசுர் ரஹ்மான், கமலேஷ் நாகர்கோட்டி மற்றும் பிரியம் கார்க்.

தக்கவைக்கப்பட்ட DC வீரர்கள்: ரிஷப் பண்ட், பிரவின் துபே, டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், குல்தீப் யாதவ், அக்சர் படேல், லுங்கி இன்கிடி, லலித் யாதவ், கலீல் அகமது, விக்கி ஓஸ்ட்வால், பிரித்வி ஷா, அன்ரிச் நார்ட்ஜே, அபிஷேக் போரல், இஷாந்த் ஷர்மா, யகேஷ் டி.

4. தமிழக வீரர் ஷாருக் கான் வெளியேற்றம்! சாம் கரனை தக்கவைத்த பஞ்சாப்!

நடப்பு உலகக்கோப்பையில் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்த சாம் கரனை பஞ்சாப் கிங்ஸ் தக்கவைத்துள்ளது. அத்துடன் அவர்களுக்கு ஃபினிசராக செயல்பட்ட ஷாருக்கானை வெளியேற்றியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

punjab
punjab

தக்கவைக்கப்பட்ட பஞ்சாப் கிங்ஸ் வீரர்கள்: ஷிகர் தவான் (கேப்டன்), சிக்கந்தர் ராசா, ரிஷி தவான், லியாம் லிவிங்ஸ்டோன், அதர்வா தைடே, அர்ஷ்தீப் சிங், சாம் கரன், ககிசோ ரபாடா, ஹர்ப்ரீத் ப்ரார், மேத்யூ ஷார்ட், பிரப்சிம்ரன் சிங் (wk), ஜிதேஷ் சர்மா (wk), நாதன் எல்லிஸ் , ராகுல் சாஹர், ஹர்பிரீத் பாட்டியா, வித்வத் கவேரப்பா மற்றும் சிவம் சிங்.

விடுவிக்கப்பட்ட வீரர்கள்: மோஹித் ரதீ, பானுகா ராஜபக்சே, பல்தேஜ் சிங், ராஜ் பாவா மற்றும் ஷாருக் கான்.

5. இளம் டேலண்ட் கார்த்திக் தியாகியை வெளியிட்ட SRH!

அதிக விலைக்கு போட்டிப்போட்டு வாங்கிய ஹாரி ப்ரூக்கை வெளியிட்டிருக்கிறது சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணி. ஆனால் இந்தியாவின் இளம் பந்துவீச்சாளரான கார்த்திக் தியாகியை வெளியிட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மூத்தவீரர் புவனேஷ் குமாரை தக்கவைத்துள்ளது.

SRH
SRH

தக்கவைக்கப்பட்ட SRH வீரர்கள்: எய்டன் மார்க்ரம் (கே), ராகுல் திரிபாதி, ஹென்ரிச் கிளாசன், மயங்க் அகர்வால், அன்மோல்பிரீத் சிங், அப்துல் சமத், வாஷிங்டன் சுந்தர், சன்வீர் சிங், புவனேஷ்வர் குமார், கிளென் பிலிப்ஸ், உபேந்திர சிங் யாதவ், நிதிஷ் குமார் ரெட்டி, அபிஷேக் சர்மா, மார்கோ ஜான்சன், டி நடராஜன், மயங்க் மார்கண்டே, உம்ரான் மாலிக் மற்றும் ஃபசல்ஹாக் ஃபரூக்கி

விடுவிக்கப்பட்ட வீரர்கள்: ஹாரி புரூக், அடில் ரஷித், விவ்ராந்த் சர்மா, அகேல் ஹொசைன், சமர்த் வியாஸ் மற்றும் கார்த்திக் தியாகி.

வர்த்தகம்: ஷாபாஸ் அகமது ( RCB-ல் இருந்து)

6. அமித் மிஸ்ராவை தக்கவைத்த LSG!

தக்கவைக்கப்பட்ட LSG வீரர்கள்: கேஎல் ராகுல் (கே), குயின்டன் டி காக், நிக்கோலஸ் பூரன், அர்பித் குலேரியா, சூர்யன்ஷ் ஷெட்ஜ், ஆயுஷ் பதோனி, கைல் மேயர்ஸ், மார்கஸ் ஸ்டோனிஸ், தீபக் ஹூடா, பிரேராக் மன்கட், யாஷ் தாக்கூர், அமித் மிஸ்ரா, மார்க் வுட், மயங்க் யாதவ் மற்றும் மொஹ்சின் கான்.

LSG
LSG

விடுவிக்கப்பட்ட வீரர்கள்: ஜெய்தேவ் உனத்கட், அர்பித் குலேரியா, சூர்யன்ஷ் ஷெட்ஜ், கருண் நாயர், டேனியல் சாம்ஸ், மனன் வோஹ்ரா, ஸ்வப்னில் சிங் மற்றும் கரண் ஷர்மா.

வர்த்தகம்: தேவ்தத் படிக்கல் (RR-அணியிலிருந்து)

7. பென் ஸ்டோக்ஸை வெளியேற்றிய CSK! மீண்டும் களத்தில் தோனி!

முழங்கால் பிரச்னை மற்றும் பணிச்சுமை காரணமாக 2024 ஐபிஎல் தொடரிலிருந்து பென் ஸ்டோக்ஸ் விலகுவதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவருடைய பெயரையும் ரிலீஸ் செய்யும் வீரர்கள் பட்டியலில் இணைத்துள்ளது சிஎஸ்கே நிர்வாகம். அதேபோல் கடந்த ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு பிறகு ரிட்டயர்ன்ட்மெண்ட் அறிவித்த அம்பத்தி ராயுடுவின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த ஐபிஎல் தொடர் தான்கடைசி என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், ரசிகர்களுக்காக மீண்டும் தோனி களமிறங்கவுள்ளார்.

IPL 2024 Trades
”இன்றே என் கடைசிப் போட்டி.. நோ யூ டர்ன்” - அம்பத்தி ராயுடு உருக்கமான பதிவு!
ben stokes
ben stokes

தக்கவைக்கப்படும் CSK வீரர்கள்: எம்எஸ் தோனி (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, மொயின் அலி, சிவம், துபே, அஜிங்க்யா ரஹானே, டெவோன் கான்வே, தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, மகேஷ் தீக்ஷனா, மிட்செல் சான்ட்னர், மதீஷ பதிரானா, பிரசாந்த் சோலங்கி, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், சிம்ரன்ஜீத் சிங், நிஷாந்த் சிந்து, ஷேக் ரஷீத், அஜய் மண்டல்.

வெளியேற்றப்படும் வீரர்கள்: பென் ஸ்டோக்ஸ், அம்பதி ராயுடு, டுவைன் பிரிட்டோரியஸ், கைல் ஜேமிசன், சிசண்டா மகலா, ஆகாஷ் சிங், பகத் வர்மா, சுப்ரான்சு சேனாபதி.

8. காம்ரான் க்ரீனை தட்டித்தூக்கிய RCB!

ராயல் சேலஞ்சர்ஸ் அணி எப்போதும் இருக்கும் பிரச்னையான ஆல்ரவுண்டர்கள் மற்றும் வேகப்பந்துவீச்சாளர்கள் பக்கம் மீண்டும் திரும்பியுள்ளது. வெளியேற்றியிருக்கும் 11 வீரர்கள் பட்டியலில் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் ஹசல்வுட், ஹர்சல் பட்டேல் போன்ற பெயர்களும் இடம்பெற்றுள்ளன. பல வருடங்களாக தொடரும் ஆர்சிபி அணிக்கான சிக்கல் இந்த ஏலத்தில் பூர்த்தியாகுமா என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். ஆனால் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் ஆஸ்திரேலியா ஆல்ரவுண்டர் காம்ரான் க்ரீனை மும்பை இந்தியன்ஸ் அணியிடமிருந்து வாங்கியுள்ளது ஆர்சிபி!

RCB
RCB

தக்கவைக்கப்பட்ட RCB வீரர்கள்:

விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), க்ளென் மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக், ரஜத் படிதார், அனுஜ் ராவத், சுயாஷ் பிரபுதேசாய், வில் ஜாக்ஸ், மஹிபால் லோம்ரோர், கர்ண் ஷர்மா, மனோஜ் பந்தேஜ், மயங்க் டாகர் (எஸ்ஆர்எச்சில் இருந்து), விஜய்குமார் வைஷாக், ஆகாஷ் தீப், முகமது சிராஜ், ரீஸ் டாப்லி, ஹிமான்ஷு சர்மா, ராஜன் குமார்.

வெளியேற்றப்பட்ட RCB வீரர்கள்:

கேதர் ஜாதவ், வனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படேல், ஜோஷ் ஹேசில்வுட், ஃபின் ஆலன், மைக்கேல் பிரேஸ்வெல், டேவிட் வில்லி, வெய்ன் பார்னெல், சோனு யாதவ், அவினாஷ் சிங், சித்தார்த் கவுல்.

வர்த்தகம்: காம்ரான் க்ரீன் (MI அணியிலிருந்து)

9. ஹர்திக் பாண்டியாவை மீண்டும் கொண்டுவந்த MI!

கடந்தாண்டு நடத்தப்பட்ட ஏலத்தில் 2023 ஐபிஎல் தொடரில் விளையாட மாட்டார் என தெரிந்தும் 2024 ஐபிஎல் தொடரில் பவுலிங் யூனிட்டை வலுப்படுத்தும் எண்ணத்தில் ஜோப்ரா ஆர்ச்சரை அதிகவிலை (8 கோடி) கொடுத்து எடுத்தது மும்பை இந்தியன்ஸ் அணி. ஆனால் ஆர்ச்சர் உலகக்கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் இடம்பெறாததால் தற்போது அவரை ரிலீஸ் செய்துள்ளது மும்பை. ஆனால் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் ரூ.15 கோடியை கொடுத்து குஜராத் டைட்டன்ஸ் அணியிடமிருந்து ஹர்திக் பாண்டியாவை மீண்டும் மும்பைக்கே எடுத்துவந்துள்ளது மும்பை அணி. கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை மீண்டும் அழைத்து வந்திருப்பது ஒருவேளை ரோகித் இடமிருந்து கேப்டன்சியை ஹர்திக் இடம் ஒப்படைக்கும் முயற்சியா? என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது.

Hardik Pandya
Hardik Pandya

தக்கவைக்கப்பட்ட MI வீரர்கள்: ரோகித் சர்மா (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா, டெவால்ட் ப்ரீவிஸ், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், திலக் வர்மா, டிம் டேவிட், விஷ்ணு வினோத், அர்ஜுன் டெண்டுல்கர், கேமரூன் கிரீன், ஷம்ஸ் முலானி, நேஹால் வதேரா, குமார் கார்த்திகேயா, பியூஷ் சாவ்லா, ஆகாஷ் மத்வால், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப்.

வெளியேற்றப்பட்ட MI வீரர்கள்: ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜே ரிச்சர்ட்சன், கிறிஸ் ஜோர்டான், முகமது அர்ஷத் கான், ராமன்தீப் சிங், ஹிருத்திக் ஷோக்கீன், ராகவ் கோயல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டுவான் ஜான்சன், ரிலே மெரிடித், சந்தீப் வாரியர்.

வர்த்தகம்: ரொமாரியோ ஷெப்பர்ட் (LSG-லிருந்து), ஹர்திக் பாண்டியா (GT-ல் இருந்து)

10. கேப்டனை இழந்த குஜராத் டைட்டன்ஸ்! அடுத்த கேப்டன் யார்?

கோப்பை கேப்டனாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியாவை ரூ.15 கோடிக்கு மும்பைக்கு அனுப்பியிருக்கும் குஜராத் டைட்டன்ஸ், வேறு எந்த வீரர்களையும் வாங்கவில்லை என்ற செய்தி வெளிவந்துள்ளது. இந்நிலையில் அடுத்த கேப்டனாக கேன் வில்லியம்சன் செயல்படுவாரா அல்லது ஆஸ்திரேலியாவின் டி20 அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வரும் மேத்யூ வேட் கேப்டனாக மாறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

kane
kane

தக்கவைக்கப்பட்ட GT வீரர்கள்: டேவிட் மில்லர், ஷுப்மன் கில், ரசீத் கான், ராகுல் திவேதியா, முகமது ஷமி, நூர் அகமது, சாய் கிஷோர், மேத்யூ வேட், விருத்திமான் சாஹா, கேன் வில்லியம்சன், அபினவ் மனோகர், சாய் சுதர்சன், விஜய் நல்கண்டே சங்கர், ஜெயந்த் யாதவ், ஜோஷ்வா லிட்டில் மற்றும் மோஹித் ஷர்மா.

விடுவிக்கப்பட்ட வீரர்கள்: யாஷ் தயாள், கேஎஸ் பாரத், ஒடியன் ஸ்மித், அல்சாரி ஜோசப், ஷிவம் மாவி, உர்வில் படேல், பிரதீப் சங்வான் மற்றும் தசுன் ஷனகா.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com