ஒற்றைவிரல் காட்டிய பென் ஸ்டோக்ஸ்.. பழிக்குப்பழி வாங்கிய ஸ்ரேயாஸ் ஐயர்! வைரல் வீடியோ!

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர், இங்கிலாந்து வீரரை பழிவாங்கியுள்ளார்.
பென் ஸ்டோக்ஸ், ஸ்ரேயாஸ்
பென் ஸ்டோக்ஸ், ஸ்ரேயாஸ்ட்விட்டர்

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் இவ்விரு அணிகளுக்கு இடையிலான இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில், இங்கிலாந்து அணியும் 2வது போட்டியும் இந்திய அணியும் வெற்றிபெற்றுள்ளன. 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இவ்விரு அணிகளும் தலா 1 போட்டிகளில் வெற்றிபெற்று சமநிலையில் உள்ளன. இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி, வரும் 15ஆம் தேதி ராஜ்கோட்டில் நடைபெற உள்ளது.

முன்னதாக 2வது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாளில் (இன்று) வெற்றி இலக்கை துரத்தும்வகையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ். இந்த நிலையில்தான், யாருமே எதிர்பார்க்காத வகையில் ஸ்ரேயாஸ் ஐயர் அபாரமாக ஃபீல்டிங் செய்து பென் ஸ்டோக்ஸை ரன் அவுட் ஆக்கினார்.

இதையும் படிக்க: 45 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய சாதனை படைத்த அஸ்வின்; ஏமாற்றிய DRS முடிவால் தள்ளிப்போன மற்றொரு சாதனை!!

399 ரன்கள் இலக்கை நோக்கிய இங்கிலாந்து அணி, ஒருகட்டத்தில் 194/5 என்ற நிலையில் இருந்தது. அப்போது பென் ஸ்டோக்ஸ் நிதானமாக விளையாட ஆரம்பித்தார். அந்தச் சமயத்தில் அஸ்வின் வீசிய 53வது ஓவரின் ஒரு பந்தை எதிர்கொண்ட பென் ஸ்டோக்ஸ் எளிதாக சிங்கிள் எடுத்துவிடலாம் என்ற எண்ணத்துடன் சற்று மெத்தனமாக ஓடினார். மறுபுறம் ஸ்லிப் பகுதியில் நின்று கொண்டிருந்த ஸ்ரேயாஸ் ஐயர், பந்தை வேகமாக எடுத்து நேரடியாக ஸ்டம்ப் மீது அடித்து அவரை நூலிழையில் ரன் அவுட்டாக்கினார்.

முன்னதாக, ஸ்ரேயாஸ் ஐயர் முதல் இன்னிங்ஸில் ஒரு ஷாட்டை தூக்கி அடித்து பவுண்டரி லைனுக்கு விரட்ட முயன்றபோது பென் ஸ்டோக்ஸ் ஓடிச் சென்று அபார கேட்ச் பிடித்து அவரை வெளியேற்றியதுடன், ஒரு விரலை மட்டும் ரசிகர்களிடம் உயர்த்துக் காட்டி அந்த வெற்றியைக் கொண்டாடினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பென் ஸ்டோக்ஸை, இன்று ரன் அவுட் செய்த ஸ்ரேயாஸ், அதேபோல் ஒரு விரலை உயர்த்திக் காட்டி பழிக்குப்பழி வாங்கியுள்ளார்.

இதையும் படிக்க: Eng Vs Ind| ஸ்டம்ப்களை பறக்கவிட்ட பும்ரா.. பாஸ்பால் அதிரடிக்கு பதிலடி கொடுத்து இந்தியா வெற்றி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com