shreyas iyer
shreyas iyerweb

ஆஸ்திரேலியா A அணிக்கு எதிரான டெஸ்ட்.. இந்திய கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் அறிவிப்பு!

ஆஸ்திரேலியா A அணிக்கு எதிரான மல்டி-டே டெஸ்ட் போட்டிகளுக்கு ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
Published on
Summary

இந்தியாவிற்கு வரும் ஆஸ்திரேலியா A அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளுக்கு இந்திய A அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார்.

shreyas iyer
யுவராஜ் சிங் 2.O| 15 வயதில் 1200 ரன்கள் குவித்த அபிஷேக் சர்மா.. டி20-ன் எதிர்காலமாக மாறிய கதை!

2025 சாம்பியன்ஸ் டிராபியை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வென்று சாதனை புரிந்தது. அந்த அணியில் இடம்பெற்ற நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர், சமீபகாலமாக இந்திய அணி பெரிதும் பின்தங்கியிருந்த மிடில் ஆர்டர் இடத்தில் களமிறங்கி அற்புதமான பேட்டிங்கை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்தியா சாம்பியன்ஸ் டிராபியை வெல்ல முக்கியகாரணமாக இருந்தது ஸ்ரேயாஸ் ஐயர் தான் என்றும், என்னை பொறுத்தவரை அவருக்கு தான் தொடர் நாயகன் விருது கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் முன்னாள் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் புகழாரம் சூட்டியிருந்தார்.

ஆனால் 2025 சாம்பியன்ஸ் டிராபியின் ஹீரோவாக இருந்த ஸ்ரேயாஸ் ஐயருக்கு அதற்கு பிறகான எந்த இந்திய தொடரிலும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மட்டுமில்லாமல், ஆசியக்கோப்பைக்கான இந்திய அணியிலும் ஸ்ரேயாஸ் ஐயரின் பெயர் இடம்பெறவில்லை.

இதுகுறித்து பல இந்திய முன்னாள் வீரர்கள் விமர்சத்திருந்த நிலையில், ஸ்ரேயாஸ் ஐயரின் தந்தை ’இதற்கு மேல் ஒரு வீரர் என்ன செய்யவேண்டும்’ என மிகுந்த மனவேதனையை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்நிலையில் தான் இந்தியா ஏ அணிக்கான கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

shreyas iyer
ஆசியக்கோப்பை 2025| கோப்பை யாருக்கு? எந்த அணி வலுவாக உள்ளது? முழு அலசல்!

ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக அறிவிப்பு..

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக, ஆஸ்திரேலியா ஏ அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்கிறது.

செப்டம்பர் 16 முதல் அக்டோபர் 5 வரை நடைபெறவிருக்கும் தொடரில் 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகளில் இந்தியா A, ஆஸ்திரேலியா A அணிகள் மோதவிருக்கின்றன.

Shreyas Iyer not selected in India's Asia Cup squad
Shreyas iyerpt web

இந்நிலையில் முதலில் நடைபெறவிருக்கும் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய ஏ அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. 15 பேர் கொண்ட அணிக்கு கேப்டனாக ஸ்ரேயார் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் துருவ் ஜூரெல் இடம்பெற்றுள்ளார். புதிய வீரர்களாக ஆயுஸ் பதோனி, தனுஷ் கோட்டியான், குர்னூர் பிரார், மனவ் சுதர், யஷ் தக்கூர் போன்ற வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.

இந்தியா ஏ டெஸ்ட் அணி: ஷ்ரேயாஸ் ஐயர் (C), அபிமன்யு ஈஸ்வரன், என் ஜெகதீசன் (WK), சாய் சுதர்சன், துருவ் ஜூரல் (VC & WK), தேவ்தத் பாடிக்கல், ஹர்ஷ் துபே, ஆயுஷ் படோனி, நிதிஷ் குமார் ரெட்டி, தனுஷ் கோட்டியன், பிரசித் கிருஷ்ணா, குர்னூர் பிரார், மனவ் சுதர், யஷ் தக்கூர், கலீல் அகமது

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கேஎல் ராகுல் மற்றும் முகமது சிராஜ் இருவரும் இடம்பிடிப்பார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

shreyas iyer
25 ஆண்டுகால கிரிக்கெட்.. 1228 விக்கெட்டுகள்.. விடைகொடுத்தார் அமித் மிஸ்ரா! 5 அசத்தல் சாதனைகள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com