துபே மீது ஏன் இவ்வளவு வெறுப்பு..? அவர் சிஎஸ்கேவின் Blessing! - அஸ்வின் பேச்சு
சிஎஸ்கே அணியில் ஷிவம் துபே மீது அதிக வெறுப்பு ஏன் என கேள்வி எழுப்பிய அஸ்வின், துபே ஒரு சிறந்த ஸ்பின் ஹிட்டர் என்றும், அவர் அணிக்கு கிடைத்த வரம் என்றும் கூறியுள்ளார்.
2027 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக புதிய சிஎஸ்கே அணியை கட்டமைக்கும் முயற்சியில் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் இறங்கியுள்ளது. 3 மோசமான ஐபிஎல் சீசனுக்கு பிறகு மொத்தமாக பயிற்சியாளர்கள், உதவியாளர்கள் வெளியேற்றப்பட்டு புதிய பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் டிரேட் மூலம் ஹர்திக் பாண்டியாவை கொண்டுவரும் முயற்சி நடந்துவருவதாகவும் சொல்லப்படுகிறது.
இந்தசூழலில் தான் ஹர்திக் பாண்டியாவிற்கு பதில் யாரை கொடுக்கலாம் என்ற பொதுகருத்திற்கு பெரும்பாலான பதில்கள் ஷிவம்துபே என கூறப்படுகிறது. அவர் எதற்கு அணியில் என்ற கேள்விகளும் பரவலாக வைக்கப்படுகின்றன. இந்நிலையில் தான் ஷிவம் துபே சிஎஸ்கேவிற்கு கிடைத்த வரம் என்றும், சுழற்பந்துவீச்சை மையமாக கொண்ட சேப்பாக்கம் மைதானத்தில் அவரைப்போன்ற ஸ்பின் ஹிட்டர் இருப்பது உங்களின் ஆசீர்வாதம். அதுகூட உங்களுக்கு புரியவில்லை என பேசியுள்ளார்.
அவருடைய யூடியூப் சேனலில் பேசியிருக்கும் அஸ்வின், “திடீரென ஷிவம் துபே மீது அதிகப்படியான வெறுப்புகள் கொட்டப்படுகின்றன. எனக்கு அது புரியவேயில்லை, துபே ஒரு சிறந்த வீரர். ஏன் துபேவை சிஎஸ்கே எடுத்தாங்க, ஸ்பின் டாமினேட் பன்ற ஒரு பெரிய மைதானத்தில் பெரிய சிக்சர்களை அடிக்கக்கூடிய உலகத்தின் சிறந்த ஸ்பின் ஹிட்டர் என்பதால். உன்கிட்ட இருக்க பிளெஸ்ஸிங்கே உனக்கு புரியல, உனக்கு ஒரு பிளெஸ்ஸிங் கிடைச்சிருக்கு. அவரை சரியாக பயன்படுத்த தெரியவில்லை, பவுலிங் யூனிட்டை நேர்த்தி செய்யமுடியவில்லை. அணியில் இருக்கும் ஒரேயொரு இடது கை பேட்ஸ்மேனையும் கொடுத்துவிட்டு என்ன செய்வீர்கள். எந்த கிரிக்கெட் எக்ஸ்பெர்ட்டையாவது ஷிவம் துபே நல்ல வீரர் இல்லை, அவரிடமிருந்து சிறந்ததை எடுக்கமுடியாது என்று சொல்ல சொல்லுங்கள் பார்க்கலாம்” என பேசியுள்ளார்.

