சஞ்சு சாம்சன்
சஞ்சு சாம்சன்cricinfo

”இது என் வாழ்க்கையின் சிறந்த நாள்..” - 97 ரன்கள் குவித்த பிறகு எமோசனலாக பேசிய சஞ்சு சாம்சன்!

2026 டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிக்கு தகுதிபெற்று அசத்தியது இந்திய அணி.
Published on
Summary

சஞ்சு சாம்சன் 97 ரன்கள் குவித்து இந்திய அணியை அரையிறுதிக்கு அழைத்துச் சென்றார். வெற்றிக்கு பிறகு அவர், இது தனது வாழ்க்கையின் சிறந்த நாள் என எமோசனலாக பேசினார். இந்தியா வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

2026 டி20 உலகக்கோப்பை தொடரானது பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஒரு கோப்பைக்காக 20 அணிகள் பலப்பரீட்சை நடத்திய நிலையில், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து முதலிய 3 அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றன.

சூர்யகுமார் தலைமையிலான இந்திய டி20 அணி
சூர்யகுமார் தலைமையிலான இந்திய டி20 அணிweb

அரையிறுதி செல்லும் 4வது அணி இந்தியாவா அல்லது வெஸ்ட் இண்டீஸா என முடிவுசெய்யும் முக்கியமான போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்திய அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின.

சஞ்சு சாம்சன்
“இந்தியாவை வீழ்த்தாமல் உலகக்கோப்பை வெல்ல முடியாது..” - வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர்

என் வாழ்க்கையின் சிறந்த நாள்..

கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் 195 ரன்கள் குவித்தது. 196 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கை துரத்திய இந்திய அணியில் அதிரடியாக விளையாடிய சஞ்சு சாம்சன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 12 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 97 ரன்கள் குவித்து இந்திய அணியை அரையிறுதிக்கு அழைத்துச்சென்றார்.

சஞ்சு சாம்சன்
சஞ்சு சாம்சன்

வெற்றிக்கு பிறகு பேசிய சஞ்சு சாம்சன், “விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற சிறந்த வீரர்கள் விளையாடுவதையும், அவர்கள் தங்கள் வேலையை சரியாக செய்வதையும் நான் பார்த்திருக்கிறேன். நான் 60 ஆட்டங்களில் விளையாடியிருக்கலாம், ஆனால் அவர்கள் 100 ஆட்டங்களில் எப்படி சரியானவர்களாக இருந்தார்கள் என்பதை அதிகமாக பார்த்திருக்கிறேன். நான் அறிமுகமானதிலிருந்து இந்த நாளுக்காக தான் காத்திருந்தேன், இது என் வாழ்க்கையின் சிறந்த நாள்" என எமோசனலாக பேசினார்.

சஞ்சு சாம்சன்
'Sanju U Beauty'| 97 ரன்கள் விளாசிய சஞ்சு.. விமர்சனங்களுக்கு பதிலடி.. அரையிறுதியில் இந்தியா!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com