வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி அரையிறுதி சென்றது இந்தியா
வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி அரையிறுதி சென்றது இந்தியாcricinfo

'Sanju U Beauty'| 97 ரன்கள் விளாசிய சஞ்சு.. விமர்சனங்களுக்கு பதிலடி.. அரையிறுதியில் இந்தியா!

2026 டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிக்கு தகுதிபெற்று அசத்தியது இந்திய அணி.
Published on
Summary

2026 டி20 உலகக்கோப்பை அரையிறுதிக்கு இந்தியா தகுதிபெற்றது. சஞ்சு சாம்சன் 97 ரன்கள் அடித்து வெஸ்ட் இண்டீஸை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த சஞ்சு, இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

2026 டி20 உலகக்கோப்பை தொடரானது பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஒரு கோப்பைக்காக 20 அணிகள் பலப்பரீட்சை நடத்திய நிலையில், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து முதலிய 3 அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளன.

2026 டி20 உலகக்கோப்பை
2026 டி20 உலகக்கோப்பைx

அரையிறுதி செல்லும் 4வது அணி இந்தியாவா அல்லது வெஸ்ட் இண்டீஸா என முடிவுசெய்யும் முக்கியமான போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்திய அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி அரையிறுதி சென்றது இந்தியா
வாழ்வா? சாவா? போட்டி.. இந்தியாவிற்கு 196 ரன்கள் இலக்கு நிர்ணயித்த வெஸ்ட் இண்டீஸ்!

சஞ்சு சாம்சன் அதிரடி.. அரையிறுதியில் இந்தியா!

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பரபரப்பாக தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியில் தொடக்க வீரர்கள் ஷாய் ஹோப் மற்றும் சேஸ் இருவரும் நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தனர்.

ஷாய் ஹோப் 32 ரன்கள், சேஸ் 40 ரன்கள் மற்றும் ஹெட்மயர் 27 ரன்கள் என நல்ல டோட்டலுக்கு அடித்தளம் போட, கடைசிவரை களத்தில் நின்ற ஹோல்டர் 37 மற்றும் பவல் 34 ரன்கள் அடிக்க 20 ஓவரில் 195 ரன்களை குவித்தது வெஸ்ட் இண்டீஸ் அணி.

இந்திய டி20 அணி
இந்திய டி20 அணி

இதுவரை இந்திய அணி டி20 உலகக்கோப்பையில் அதிகபட்சமாக 173 ரன்களை மட்டுமே சேஸ்செய்திருப்பதால் வெற்றிவருமா என்ற கவலை இருந்தது. ஆனால் 196 ரன்கள் இலக்கை சேஸ்செய்த இந்திய அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய சஞ்சு சாம்சன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 12 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 97 ரன்கள் அடித்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றார்.

சஞ்சு சாம்சன்
சஞ்சு சாம்சன்

5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்திய இந்திய அணி 4வது அணியாக டி20 உலகக்கோப்பை அரையிறுதிக்கு தகுதிபெற்று அசத்தியது. தன்மீது வைக்கப்பட்ட அனைத்து விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து எல்லோருடைய மனதையும் வென்றுள்ளார் சஞ்சு சாம்சன்.

வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி அரையிறுதி சென்றது இந்தியா
“இந்தியாவை வீழ்த்தாமல் உலகக்கோப்பை வெல்ல முடியாது..” - வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com