உலகக்கோப்பையிலிருந்து இலங்கை வெளியேறியதற்கு உருக்கமாக பதிவிட்ட சங்கக்கரா
உலகக்கோப்பையிலிருந்து இலங்கை வெளியேறியதற்கு உருக்கமாக பதிவிட்ட சங்கக்கராweb

சொந்தமண்ணில் நடந்த உலகக்கோப்பையில் ‘இலங்கை’ வெளியேற்றம்.. உருக்கமாக பதிவிட்ட சங்கக்கரா!

2026 டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து போட்டியை நடத்திய இலங்கை அணி அரையிறுதிக்கு முன்னேறாமல் வெளியேறியது முன்னாள் சாம்பவான் வீரர் குமார் சங்கக்கராவை காயப்படுத்துவதாக பதிவிட்டுள்ளார்.
Published on
Summary

2026 டி20 உலகக்கோப்பையில் இலங்கை அணி சொந்த மண்ணில் அரையிறுதிக்கு தகுதிபெறாமல் வெளியேறியது. இதனால் ரசிகர்கள் மற்றும் வீரர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் வீரர் சங்கக்கரா, இது எளிதானது அல்ல, ஆனால் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவது ஒரு பாக்கியம் என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

2026 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது எட்டு அணிகள் சூப்பர் 8 சுற்றுப் பிரிவில் விளையாடி வரும் நிலையில், இங்கிலாந்து அணி அடுத்தடுத்த 2 போட்டிகளில் வெற்றிபெற்று முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளது.

SL vs NZ
SL vs NZ

அதேபோல சூப்பர் 8 சுற்றில் விளையாடிய 2 போட்டிகளிலும் தோற்ற இலங்கை அணி, சொந்தமண்ணில் நடந்த உலகக்கோப்பை தொடரிலிருந்து அரையிறுதிக்கு கூட தகுதிபெறாமல் வெளியேறியது.

உலகக்கோப்பையிலிருந்து இலங்கை வெளியேறியதற்கு உருக்கமாக பதிவிட்ட சங்கக்கரா
’BCCI உடன் நட்பு வேண்டும்..’ இந்தியா உடனான உறவை மேம்படுத்த விரும்பும் வங்கதேசம்!

இலங்கை அணியின் மோசமான விளையாட்டு அவ்வணியின் ரசிகர்களை அதிகமாக காயப்படுத்திய நிலையில், சொந்த வீரர்களை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

இந்தசூழலில் அணியின் வெளியேற்றம் காயப்படுத்துவதாக பதிவிட்டிருக்கும் முன்னாள் இலங்கை வீரர் குமார் சங்கக்கரா, “ஒட்டுமொத்தமாக நிறைய காயங்கள் உள்ளன. ரசிகர்கள் பேரழிவிற்கு ஆளாகினர், ஏமாற்றமடைந்தனர், கோபமடைந்தனர். ரசிகர்கள் மட்டுமல்லாமல் தோல்வியால் வீரர்களும் மனதளவில் உடைந்து போயுள்ளார்கள். நானும் இதேபோன்ற டிரஸ்ஸிங் அறைகளில் இருந்திருக்கிறேன். இது எளிதானது அல்ல என்பது எனக்கும் தெரியும். ஆனால் இந்தப் பொறுப்பு மைதானத்துடன் வருகிறது. உங்கள் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவது ஒரு சுமை மற்றும் ஒரு பெரிய பாக்கியம் மற்றும் பல” என முன்னாள் உலகக்கோப்பை சாம்பியன் பதிவிட்டுள்ளார்.

உலகக்கோப்பையிலிருந்து இலங்கை வெளியேறியதற்கு உருக்கமாக பதிவிட்ட சங்கக்கரா
“இந்தியாவை வீழ்த்தாமல் உலகக்கோப்பை வெல்ல முடியாது..” - வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com