ருதுராஜ் கெய்க்வாட்
ருதுராஜ் கெய்க்வாட்web

World Record | ருதுராஜ் கெய்க்வாட் உலக சாதனை.. ஆஸ்திரேலியா ஜாம்பவான் ரெக்கார்ட் உடைப்பு!

20 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலியா ஜாம்பவான் மைக்கேல் பவனின் உலக சாதனையை முறியடித்தார் இந்திய வீரர் ருதுராஜ் கெய்க்வாட்..
Published on
Summary

ருதுராஜ் கெய்க்வாட் தென்னாப்பிரிக்கா தொடரில் தனது முதல் சர்வதேச சதத்தை அடித்து திறமையை நிரூபித்தார். இருப்பினும் இந்திய அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் மைக்கேல் பெவனின் சாதனையை முறியடித்து வரலாறு படைத்துள்ளார் ருதுராஜ்.

உள்நாட்டு கிரிக்கெட், ஐபிஎல் கிரிக்கெட் என அனைத்திலும் ரன்களை மலைபோல குவித்துவரும் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு, இந்திய அணியில் மட்டும் நிரந்தர இடம் என்பது இல்லாமலேயே இருந்துவருகிறது.

சமீபத்தில் நடந்துமுடிந்த தென்னாப்பிரிக்கா தொடரில் தன்னுடைய முதல் சர்வதேச ஒருநாள் சதத்தை பதிவுசெய்து அசத்திய ருதுராஜ், தான் ஒரு திறமையான வீரர் என்பதை நிரூபித்தார். 

ருதுராஜ் கெய்க்வாட்
ருதுராஜ் கெய்க்வாட்web

கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் தன்னை ருதுராஜ் நிரூபித்தாலும், நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்தசூழலில் ருதுராஜ் கெய்க்வாட்டின் புறக்கணிப்புக்கு முன்னாள் வீரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இந்திய அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்ட ஒரு வாரத்திற்குள் புதிய உலக சாதனையை படைத்துள்ளார் ருதுராஜ் கெய்க்வாட்..

ருதுராஜ் கெய்க்வாட்
WPL 2026 | இன்று தொடங்குகிறது மகளிர் ஐபிஎல்.. முதல் போட்டியில் MI vs RCB மோதல்!

ஆஸ்திரேலியா ஜாம்பவான் ரெக்கார்டை உடைத்த ருதுராஜ்..

2025-26 விஜய் ஹசாரே டிராபியில் கோவா அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் மஹாராஷ்டிரா கேப்டன் 134 ரன்கள் அடித்து மிரட்டினார். 8 பவுண்டரிகள் 6 சிக்சர்கள் என விளாசிய ருதுராஜின் சதத்தால் 5 ரன்கள் வித்தியாசத்தில் மஹாராஷ்டிரா வெற்றிபெற்றது.

இந்தசூழலில் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் தொடர்ந்து அபாரமாக செயல்பட்டுவரும் ருதுராஜ், ஆஸ்திரேலியா கிரிக்கெட் ஜாம்பவான் மைக்கேல் பெவனின் உலக சாதனையை முறியடித்துள்ளார். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிக பேட்டிங் சராசரியுடன் முதலிடத்தில் இருந்த மைக்கேல் பெவனை பின்னுக்கு தள்ளி வரலாறு படைத்துள்ளார் ருதுராஜ் கெய்க்வாட். 57.86 சராசரியுடன் மைக்கேல் பெவன் முதலிடத்தில் இருந்த நிலையில், ருதுராஜ் கெய்க்வாட் 58.83 சராசரியுடன் பின்னுக்கு தள்ளியுள்ளார்.

தொடர்ந்து லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அசத்திவரும் ருதுராஜ் கெய்க்வாட், லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 95 என்ற குறைவான இன்னிங்ஸில் 5000 ரன்கள் அடித்த வீரர், 58.83 என அதிக சராசரி வைத்திருக்கும் வீரர், விஜய் ஹசாரே தொடரில் 57 என்ற குறைந்த இன்னிங்ஸில் அதிக (15) சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனைகளை படைத்துள்ளார்.

ருதுராஜ் கெய்க்வாட்
’மாயாஜாலம்..’ 6 பந்தில் 6 ரன்கள் மட்டுமே தேவை.. மெய்டனாக வீசி மேஜிக் செய்த CSK பவுலர்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com