”ரோகித் கேப்டனாக நான்தான் காரணம்” - உண்மையை உடைத்த செளரவ் கங்குலி!

”ரோகித் சர்மாவை, கேப்டன் பொறுப்பேற்கும்படி நான்தான் கட்டாயப்படுத்தினேன்” என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
ரோகித் சர்மா, செளரவ் கங்குலி
ரோகித் சர்மா, செளரவ் கங்குலிட்விட்டர்

இந்தியாவில் நடைபெற்று வரும் கிரிக்கெட் திருவிழா, அடுத்தகட்டத்திற்கு அடியெடுத்து வைத்துள்ளது. முன்னதாக, இதன் அரையிறுதியில் இந்தியா, தென்னாப்ரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் தகுதிபெற்றுள்ளன. அதேநேரத்தில் இதில் நான்காவதாகக் கலந்துகொள்ள இருக்கும் அணி எது என்பதில் போட்டி நிலவுகிறது. இந்தப் பட்டியலில் நியூசிலாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகள் நீடிக்கின்றன.

நடப்புத் தொடரில் இந்திய அணி, 8 போட்டிகளில் விளையாடி 8லும் வெற்றிபெற்று புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. மேலும் அரையிறுதிக்கு முதல் அணியாகவும் முன்னேறியது. இதற்கு கேப்டன் ரோகித் சர்மாவின் பங்களிப்பும் அதிகம் எனப் பேசப்படுகிறது. அவர், 8 போட்டிகளில் விளையாடி 2 அரைசதம், 1 சதத்துடன் 442 ரன்கள் குவித்துள்ளார். இந்த நிலையில், ”ரோகித் சர்மாவை, கேப்டன் பொறுப்பேற்கும்படி நான்தான் கட்டாயப்படுத்தினேன்” என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: கர்நாடக பாஜக தலைவராக எடியூரப்பா மகன் நியமனம்! ஜே.பி.நட்டா அறிவிப்பு!

இதுகுறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருக்கும் செளரவ் கங்குலி, ”கேப்டன் பொறுப்பை ரோகித் சர்மா விரும்பவில்லை. இதில் கொஞ்சமும் விருப்பமில்லாமல் இருந்த அவரை, அப்பொறுப்பை ஏற்கும்படி நான்தான் கட்டாயப்படுத்தினேன். ரோகித், ’சரி’ என்று சொல்லாவிட்டால், நானே ’அவரின் பெயரை அறிவிப்பேன்’ என்று கட்டாயப்படுத்தும் அளவுக்கு நிலைமை அப்போது சென்றது. ரோகித் ஒரு சிறந்த கேப்டன் என்பதாலேயே அவரை கட்டாயப்படுத்தும் நிலைக்குக் காரணம்.

Ganguly
GangulyPT Desk

விராட் கோலிக்கு பிறகு, இந்திய அணியை வழிநடத்த சரியான மனிதர் அவர்தான் எனத் தோன்றியது. ரோகித் அப்போது கேப்டன் பொறுப்பை ஏற்க மறுத்த காரணம், சரியாக தெரியவில்லை. ஆனால், பணிச்சுமை ஒரு காரணியாக இருக்கலாம் என அப்போது தோன்றியது. ஏனென்றால், ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் என அதிக போட்டிகளில் அப்போது பங்கேற்றார். ஐபிஎல் போட்டிகளிலும் கேப்டனாக இருந்தார். என்றாலும், இந்திய அணிக்கு கேப்டன் என்பதைவிட வேறு எதுவும் சிறப்பாக இருக்க முடியாது. என் பேச்சைக் கேட்டு அப்பொறுப்பை ரோகித் ஏற்று, தற்போது அதில் சிறப்பாகச் செயல்பட்டு வருவதில் மகிழ்ச்சியே" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க: மேற்குத் தொடர்ச்சி மலையில் அதிகரிக்கும் மாவோயிஸ்ட்கள்... தலைவர் யார்?

ரோகித் சர்மா, இந்திய அணியின் தலைமைப் பொறுப்பிற்கு வருவதற்கு முன்பு, நட்சத்திர வீரர் விராட் கோலிதான் 3 வடிவிலான அணிக்கும் கேப்டனாக இருந்தார். இந்த நிலையில், 2021 டி20 உலகக்கோப்பை தோல்விக்கு பின் கேப்டன் பதவியில் இருந்து விலகிய விராட் கோலியை அதே ஆண்டு தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடரின்போது ஒருநாள் கேப்டன் பதவியிலிருந்து முன்னறிவிப்பின்றி நீக்கியது பிசிசிஐ. தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அணியை வழிநடத்தி இருந்தார் கோலி.

ரோகித் - கோலி
ரோகித் - கோலி

2-1 என்ற கணக்கில் இந்தியா தொடரை இழந்ததும் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார். இதன்பின் இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார். விராட் கோலியின் கேப்டன் பதவி பறிப்பில் செளரவ் கங்குலி இருந்ததாக அப்போது தகவல்கள் வெளியாகின. இதை, சில கிரிக்கெட் தலைவர்களும் வெளிப்படையாகவே தெரிவித்திருந்தனர். இதனால், கங்குலி - விராட் கோலி இடையே மோதல் தொடர்ந்து, அது கடந்த ஐபிஎல்லில் பயங்கரமாக வெடித்தது நினைவுகூரத்தக்கது. எனினும், இந்திய கிரிக்கெட் வரலாற்றில் விராட் கோலி - ரோகித் சர்மா இடையேயான கேப்டன்ஷிப் மாற்றம், இன்றுவரை மர்மம் நிறைந்ததாகவே உள்ளது.

இதையும் படிக்க: ஜனவரி 14 முதல் பெயர் மாற்றம் செய்யப்படும் டிடி பொதிகை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com