கர்நாடக பாஜக தலைவராக எடியூரப்பா மகன் நியமனம்! ஜே.பி.நட்டா அறிவிப்பு!

கர்நாடக பாஜக தலைவராக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மகன் விஜயேந்திரா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜே.பி.நட்டா, விஜயேந்திரா
ஜே.பி.நட்டா, விஜயேந்திராpt

கர்நாடாகவில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் 135 இடங்களில் அறுதி பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தது. நீண்ட இழுபறிக்குப் பின்னர் சித்தராமையா மீண்டும் முதல்வராகவும், அம்மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் துணை முதல்வராகவும் பதவியேற்றனர். அதேநேரத்தில், கர்நாடகா சட்டசபை தேர்தலில் பாஜக படுதோல்வியை அடைந்தது. இதனைத்தொடர்ந்து கர்நாடகா மாநில பாஜக தலைவர் பதவியில் இருந்து நளின் குமார் கட்டீல் ராஜினாமா செய்தார்.

சித்தராமையா, டி.கே.சிவக்குமார்
சித்தராமையா, டி.கே.சிவக்குமார்Mallikarjun Kharge twitter page

கடந்த 6 மாதங்களாக கர்நாடகா மாநில புதிய பாஜக தலைவர் நியமிக்கப்படாமல் இருந்தது. அதேபோல கர்நாடகா மாநில சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரையும் பாஜக தலைமை நியமிக்காமல் இருந்தது. இந்த நிலையில், கர்நாடகா சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் கடந்த ஜூலை 3-ஆம் தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதை முடிவு செய்யாமலேயே பாஜக எம்.எல்.ஏக்கள் சட்டசபைக்குச் சென்றிருந்தது விவாதப் பொருளாக மாறியது.

ஜே.பி.நட்டா, விஜயேந்திரா
மூத்த தலைவர்களிடையே கடும் மோதல்; எதிர்க்கட்சித் தலைவரை தேர்வுசெய்ய முடியாமல் தடுமாறும் கர்நாடக பாஜக!

கர்நாடகா சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெறுவதற்கு பாஜக மூத்த தலைவர்களிடையே கடும் மோதல்கள் நிகழ்ந்து வருவதாகவும், கர்நாடகா முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை, முன்னாள் அமைச்சர்கள் அரக ஞானேந்திரா, ஆர். அசோகா, விஜயபுரா எம்.எல்.ஏ. பசாகவுடா பாட்டீல், சோமண்ணா என பல பாஜக தலைவர்களின் பெயர்கள், எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு அடிபடுவதாகவும், மேலும், ஒவ்வொருவருக்கும் எதிர்க்கோஷ்டியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால்தான் அப்பதவிக்கு இழுபறி நீடித்துக்கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதை முன்வைத்து பாஜகவை காங்கிரஸ் தலைவர்கள் மிகக் கடுமையாக விமர்சித்து வந்தனர். எனினும், கர்நாடகா பாஜக தலைவர்கள் பலரும் முட்டி மோதிக் கொண்டதால், பாஜக மேலிடம் எந்த முடிவும் எடுக்காமல் தத்தளித்து வந்தது.

இந்த நிலையில், தற்போது கர்நாடகா மாநில பாஜக தலைவராக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் பி.ஒய்.விஜயேந்திரா எம்.எல்.ஏ. நியமிக்கப்பட்டுள்ளார். விஜயேந்திரா எடியூரப்பாவை, பாஜக தலைவராக நியமனம் செய்து ஜே.பி.நட்டா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தற்போது, கர்நாடகா மாநில பாஜக தலைவர் பதவியை நிரப்பிவிட்ட டெல்லி மேலிடம், அடுத்ததாக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரை நியமிக்க இருக்கிறது.

இதையும் படிக்க: வேலூர்: பேருந்து ஓட்டுநரின் உரிமம் 3 மாதங்கள் ரத்து.. இதுதான் காரணம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com